Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தமிழ்நாடே போராட்டங்களால் குலுங்கிக் கொண்டு இருக்கின்றது. தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் பார்ப்பன பிஜேபி அரசு திட்டமிட்டு பறித்து, தமிழகத்தின் மீதும், தமிழர்கள் மீதும் தான் கொண்டுள்ள வரலாற்று திராவிட வெறுப்பை கொட்டித் தீர்த்துக் கொண்டு இருக்கின்றது. தமிழ்நாட்டை பீகாரைப் போலவோ, இல்லை ஒரிசாவைப் போலவோ பஞ்சம், பட்டினி நிறைந்த வாழ்வதற்கே தகுதியற்ற மாநிலமாக மாற்ற தன்னால் ஆன அனைத்துச் சதி வேலைகளையும் செய்து கொண்டு இருக்கின்றது. ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் பார்ப்பன தேசியத்திற்கு எதிரான தேசவிரோதச் செயலாக சித்தரித்து, அவர்களை அழித்தொழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இந்நேரம் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் மத்திய அரசின் அனைத்து அரசு உறுப்புகளையும் முடக்கிப் போட்டிருக்க வேண்டிய எதிர்க்கட்சிகள், பாம்பும் சாகாமல் தடியும் ஒடியாமல் தங்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இன எதிரிகளுக்கு எதிராக இருக்க வேண்டிய தார்மீகக் கோபம் அவர்களிடம் கடமைக்காக மட்டுமே எட்டிப்பார்த்துவிட்டு போகின்றன.

dr krishnasamy 309

கட்சிக்கு ஒரு தமிழினத் தலைவன் இருக்கின்றான். ஆனால் எந்த ஒரு தமிழினத் தலைவனும் தன் இனம் கண்முன்னாலேயே பார்ப்பன நயவஞ்சகத்தால் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு எதிராக தீரம் மிக்க நடுங்க வைக்கும் போராட்டங்களை செய்யத் திராணியற்றுக் கிடக்கின்றார்கள். இந்த இடைவெளியைத்தான் பார்ப்பனியம் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு எலும்புத்துண்டுக்கு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு, சதா சர்வகாலமும் அலையும் அடிமை நாய்களை விலைபேசி வாங்கி, தமிழினத்திற்கு எதிராக செயல்பட தூண்டிவிட்டுக் கொண்டு இருக்கின்றது. அந்த வரிசையில் பார்ப்பன இனத் துரோகிகள் தூக்கி எறிந்த எலும்புத்துண்டை வாயில் கவ்வியபடி இன்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் அழிக்க, தீயாக வேலை செய்துகொண்டு இருக்கின்றார் டாக்டர்.கிருஷ்ணசாமி.

இப்படி எந்தவித தன்மான உணர்வும் ,சுயமரியாதை உணர்வும் அற்ற மனிதரை இதற்கு முன் தமிழகம் பார்த்திருக்குமா என்று தெரியவில்லை. 1176 மதிப்பெண்கள் பெற்று உச்சநீதி மன்றம்வரை சென்று நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராகப் போராடி இறுதியில் பார்ப்பன பிஜேபி அரசின் துரோகத்தால் ஏமாற்றப்பட்டு, தன் கனவுகள் தன் கண்முன்னாலேயே அழிந்து போனதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட அனிதாவுக்கு எதிராக, விஷம் கக்கும் அவதூறுப் பிரச்சாரங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். இதன் உச்சமாக பதவிக்காக தமிழகத்தின் உரிமைகளை பார்ப்பன பிஜேபியிடம் அடகு வைத்த இனத் துரோகி எடப்பாடி பழனிசாமியிடம் அனிதாவின் மரணத்தைப் பற்றி விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்திருக்கின்றார். ஏற்கெனவே அனிதாவை உச்சநீதி மன்றத்தில் அனுதாபத்தை ஏற்படுத்துவதற்காக சிலர் பயன்படுத்தி இருக்கின்றார்கள் என்று குற்றம் சாட்டினர். குறிப்பாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுசெயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களையும், திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கரன் ஆகியோரையும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அனிதா உயிரிழந்துள்ளார் என்றும், இது தொடர்பாக தான் உள்துறை அமைச்சகத்துக்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கடிதம் எழுதப் போவதாகவும் கூறியிருந்தார்.

எட்டப்பன்களையும், விஜயரகுநாதத் தொண்டைமான்களையும் பாடத்திட்டத்தில் மட்டுமே படித்திருக்கும் இன்றைய தலைமுறைக்கு அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதற்கு நிகழ்கால உருவமாக கிருஷ்ணசாமி இருக்கின்றார். இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் பேசும் இந்த மானங்கெட்ட பிழைப்புவாதி தன் மகளுக்கு ஜெயலலிதாவின் காலில் விழுந்து, மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கியது, தற்போது தோழர் பாலபாரதி அவர்களால் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. "அனிதாவின் மரணம் குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்துவிட்டதா? காவல்துறை விசாரணை முடிந்துவிட்டதா? எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இடம் கிடைக்காவிட்டால் அவர் வேறு படிப்பை படித்திருக்கலாம்” என்று நாக் கூசாமல் பேசத் தெரிந்த கிருஷ்ணசாமி, தோழர் பாலபாரதி முன்வைத்திருக்கும் இந்தக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளத் திராணியற்று ஊடகங்கள் முன் ஒரு புழுவைப் போல நெளிகின்றார்.

தன் மகள் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தாலும் தனக்கிருக்கும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஜெயலலிதாவின் காலை நக்கி சீட் வாங்கலாம், அது தவறு கிடையாது. ஆனால் எந்தவித வாய்ப்புகளும் அற்ற, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்த ஏழை மாணவி தனக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும்போது மட்டும் உச்சநீதி மன்றத்தின் கதவுகளை தட்டக்கூடாது; அது மாபெரும் தவறு!. இதுதான் பார்ப்பன அடிவருடி கிருஷ்ணசாமியின் நிலைபாடு. தன்சாதி மக்களாலே புறக்கணிக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்ட கிருஷ்ணசாமி மட்டும் எதற்காக அரசியல் கட்சி நடத்த வேண்டும்? கிருஷ்ணசாமி ஏதோ மருத்துவகல்லூரி தொடங்குவதற்குதான் இப்படி பார்ப்பன பிஜேபியை நக்கிப் பிழைக்கின்றார் என்று சொல்லிக் கொள்கின்றார்கள். அது உண்மையோ, பொய்யோ நமக்குத் தெரியாது. ஒருவேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் மருத்துவக் கல்லூரி நடத்துவதைவிட விபச்சார விடுதி நடத்தவே முழு தகுதியானவர் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாக இருக்கின்றது. அரசியல் வரவில்லை என்றால் என்ன புரோக்கர் வேலைதான் நன்றாக வருகின்றதே!

ஒரு மனிதன் இதற்குமேல் கீழ்த்தரமாக நக்கிப் பிழைக்க முடியாது என்பதை கிருஷ்ணசாமி தொடர்ந்து நிரூபித்து வருகின்றார். இவருக்கு இங்கிருக்கும் அர்ஜுன் சம்பத் போன்ற பார்ப்பன மலம் தின்னிகள் உட்பட காவிக்கூட்டங்களின் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வருகின்றது. எவன் எவன் எல்லாம் பார்ப்பனியத்தைக் காப்பாற்ற கூட்டிக்கொடுக்கவும் தயங்காமல் தமிழகத்தில் வாழ்கின்றானோ, அவன் எல்லாம் ஒருமித்த குரலில் இந்தக் கிருஷ்ணசாமியை ஆதரிக்கின்றார்கள், நீட் தேர்வை ஆதரிக்கின்றர்கள். நமக்கு ஏற்படும் வருத்தம் எல்லாம் பெரியார் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையை இப்படித்தான் கையாண்டிருப்பாரா என்பதுதான். இந்நேரம் எத்தனை ஆயிரம் மக்களை ஒன்று திரட்டி சிறையை நிரப்பி இருப்பார்? மாநில அரசையும், மத்திய அரசையும் மண்டியிடச் செய்திருப்பார். தமிழகத்தையே போராட்டக் களமாக அல்லவா மாற்றியிருப்பார்! ஆனால் அவரின் பெயரைச் சொல்லி அரசியல் கட்சி நடத்தும் திமுக போன்றவை தீவிரமான போராட்டத்தை முன் எடுப்பதற்குப் பதிலாக அனைத்துக்கட்சி கூட்டம், பொதுக்கூட்டம் என உப்புக்கு சப்பில்லாத வேலைகளை செய்துகொண்டு இருக்கின்றார்கள்.

ஜல்லிக்கட்டுக்காக போராடி, அதை வென்றெடுத்து ஆண்ட பரம்பரைகளின் மானத்தைக் காப்பாற்றிய கட்சிகள், இப்போது அதுபோன்ற ஒன்றை நிகழ்த்திக் காட்ட களம் இறங்க ஏன் மறுக்கின்றன என்பது பெரிய கேள்வியாக உள்ளது. மக்களின் கோபத்தை பிரதிபலிக்காத கட்சிகள் நிச்சயம் அந்த மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு அழிந்துபோகும் என்பது உறுதி.

சமூக நீதியில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டை பதவிக்காகவும், பணத்திற்காகவும், தங்களின் அதிகார முறைகேடுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், வெட்கம்கெட்ட முறையில் அடகுவைத்து அதிமுக கொள்ளைக் கும்பல் ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழகமும் காறி உமிழ்ந்தாலும் எந்தவித சலனமும் அற்று ஒரு மானங்கெட்ட திருட்டு கும்பலுக்கே உரிய மழுங்குணித்தனத்தோடு ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கின்றது.

அனிதாவின் தற்கொலை குறித்து விசாரணை செய்ய வேண்டும் என கிருஷ்ணசாமி சொல்கின்றார். இதில் விசாரணை செய்வதற்கு என்ன இருக்கின்றது? அனிதா நிச்சயம் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அனிதா பச்சை படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதுதான் உண்மை. அந்தக் கொலையை செய்தது பிஜேபி கும்பல், அந்தக் கும்பலுக்கு பயந்துகொண்டு அடிமைகளாக வாழும் அதிமுக குற்றக்கும்பல், சாமானிய மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி என்றுமே அறிந்து கொண்டிராத தொந்தி பார்ப்பன பூணூல் கும்பலால் நிரம்பி வழியும் உச்சநீதி மன்ற மனுநீதிவாதிகள், எதற்காக உயிர் வாழ்கின்றோம் என்றே தெரியாமல் தன்மானத்தையும் ,சுயமரியாதையையும் இழந்து கூட்டிக்கொடுக்கவும் தயங்காத இனத் துரோகிகளாக வாழும் கிருஷ்ணசாமி போன்ற பிழைப்புவாதிகள் என எல்லோரும் சேர்ந்துதான் அனிதாவை படுகொலை செய்திருக்கின்றார்கள். இந்த உண்மை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மானமுள்ள மனிதனுக்கும் தெரியும். இவர்களுக்கான தண்டனை மக்கள் மன்றத்தில் காத்துக் கிடக்கின்றது. நிச்சயம் ஒரு நாள் அனிதாவின் படுகொலைக்கு இவர்கள் அனைவருமே பதில் சொல்லியாக வேண்டியே நிர்பந்தம் வந்தே தீரும்.

- செ.கார்கி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 வே.பாண்டி 2017-09-06 17:18
நல்ல கட்டுரை.
பாராட்டுகள் ர
Report to administrator
0 #2 tamilselvan 2017-09-10 00:08
Article Super.
Report to administrator
0 #3 தமிழ் பிரபு 2017-09-12 16:47
அருமை அருமை.... நக்கியம் பிழைப்பார் அதை நல்லது என்று சொல்லுவார்.... வார்த்தைக்கு உரியவர்_கிருஷ்ண ா சாமி
Report to administrator
0 #4 Arinesaratnam Gowrikanthan 2017-09-18 12:52
வழி தவறியவர்களையும் , நெறி தவறியவர்களையும் , வேடதாரிகளையும் திட்டித்தீர்ப்ப துதான் இக் கட்டுரையின் பிரதான உள்ளடக்கமாக உள்ளது. அதுதான் ஒரேஉள்ளடக்கம் ஏன்றும் கூறலாம். அவர்கள் திட்ட்டுதலுக்கு உள்ளாக்கப்படவேண ்டியவர்கள்தான், சந்தேகமில்லை. ஆனால், செ. கார்க்கியும், கீற்று இதழும் இக்காரியத்தில் ஈடுபடத் தேவையில்லை. வழி, நெறி தவறியவர்களையிட் டும், வேடதாரிகளையிட்ட ும் இதைவிட ஆழமான விவாதிக்கக் கூடியவர்கள் ஏன் தவறினார்கள் என்பது புரியவில்லை.
மன்மோகன் சிங்கால் அறிமுகப்படுத்தப ்பட்ட பொருளாதார சீர்திருத்தக் கொள்கையின் பின்பிருந்து(மற ு காலனியாதிக்கம் ஆரம்பித்திருந்த காலத்தில் இருந்து) இந்தியாவின் வர்க்கங்களும், சாதிகளும், தேசிய இனங்களும் மறு ஒழுங்குபடுத்தலு க்கு(re-shuffli ng) உள்ளாகி வருகின்றன. ஒரு புறத்தில் வர்க்க, சாதிய, தேசிய இன மேல்நிலை சமூக நகர்வு (up ward social mobility)ஒன்று ஏற்பட்டுவருகிறத ு. இம் மேல்நிலை நகர்வு மிகத் துரிதமானதாகவும் , அதிகளவிலானதாகவு ம் ஏற்பட்டு வருகிறது. அதாவது வர்க்கங்களுக்கு ள்ளும். சாதியங்களுக்குள ்ளும், தேசிய இனங்களுக்குள்ளு ம் நடுத்தரவர்க்க வளர்ச்சியொன்றுஏ ற்பட்டு வருகிறது. இவ் நடுத்தர வர்க்கம் தமது நுகர்வுத்திறனின ் காரணத்தால் இந்திய மேட்டுக்குடிகளு டன் தம்மால சமதையாக நிற்க முடியும் என்ற நம்பிக்கையுள்ளத ாகவும் உள்ளது. இதனால், மேட்டுக்குடியின ் அனைத்துக் குணாம்சங்களையும ் உள்வாங்கிக் கொண்டதாக வளர்ந்துவருகிறத ு.
50களில் இருந்து 90கள் வரையான காலகட்டத்தில் (தேசிய முதலாளித்துவத்த ின் காலம் என வைத்துக்கொள்வோம ்) மக்கள் நலன் சார்ந்து செயற்பட்ட அனைத்துக் கட்சிகளும், அனைத்து அரசியல் தலைவர்களும், அனைத்துச் சித்தாந்தவாதிகள ும் இன்று வழர்ந்துவரும் நடுத்தர வர்க்கத்தின் நலன் பேணிகளாக மாறிவிட்டார்கள் . யாரும் இதற்க்கு விதிவிலக்கல்ல. மாநிலக் கட்சிகள், பாராளுமன்ற இடதுசாரிக்கட்சி கள், தலித் இயக்கங்கள், என அனைத்தும் மேட்டுக்குடிகளி ன் நண்பர்களாகவும், மேட்டுக்குடிகளை யும் நடுத்தரவர்க்கத் தையும் இணைத்துவைக்கும் தரகர்களாகவும் மாறிவிட்டார்கள் . மாறாதிருக்கும் சிலர் மாறுவதற்க்குத் தயராய் உள்ளார்கள். இதனால் துரோகிகளும், மாறுவேடக்காரர்க ளும் பெருகிவருகிறார் கள். இது இந்தியா முழுமைக்கும் பொதுவான நிகழ்வுப்போக்காகும்.
அடுத்தபக்கத்தில் ஏற்பட்டுவரும் மறு ஒழுங்குபடுத்தலி ன் (re-shuffling) காரணத்தால் (downward social mobility) கீழ் நோக்கிய சமூக நகர்வு ஒன்றும் ஏற்பட்டு வருகிறது. இதனால், கீழ் நோக்கி நகர நிர்பந்திக்கப்ப ட்டுள்ளவர்கள் முன்னைவிட தீவிரமாகப் போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், தலைமைக்குரிய மேடையி; தலைவர்களைக் காணவில்லை. அரசியல் வெற்றிடம் என்பது இதுதான்.
Report to administrator

Add comment


Security code
Refresh