விநாயகர் சதுர்த்தி என்பது லோகமான்ய திலகரால் 1894-ஆம் ஆண்டு புனேயில் முதல்முறையாக கொண்டுவரப்பட்டது - கொண்டாடப்பட்டது.

இந்த விநாயகர் சதுர்த்தி என்பது எங்கனம் திலகரால் அரசியலாக்கப்பட்டது என்பதை காஷ்மன் ரிச்சர்ட் என்பவர் தனது The Myth of the Lokamanya: Tilak and Mass Politics in Maharashtra என்ற புத்தகத்தில் புட்டு புட்டு வைக்கிறார். 

ganesh chaturthi

லோகமான்ய திலகர் என்பவர் ஒரு மராத்திய பார்ப்பனர் (ரஜினியைப் போல). ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னோடி.

வெள்ளையர்கள் ஆட்சி செய்தபோது அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட பல சட்ட- திட்டங்கள் சாதியக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருந்ததன. குறிப்பாக, மராட்டிய பார்ப்பனர்களுக்கு அது வேட்டு வைப்பதாக இருந்தது.

விநாயகர் வழிபாடு என்பது சிவாஜி காலத்திய மராட்டியத்தில் வீட்டளவில் கொண்டாடப்பட்டு வந்தது. அதனை மராத்தியர்களின் அடையாளமாக மாற்றும்பொருட்டு திலகர் திட்டம் வகுக்கிறார்.அதன் ஒரு அங்கம்தான் விநாயகர் ஊர்வலம்.

அது போதாது என்று கருதிய திலகர், சிவாஜி திருவிழா என்ற ஒன்றையும் உருவாக்குகிறார். இந்த இரண்டுமே, இந்துக்களின் அடையாளமாக விரிவாக்கம் செய்கிறார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களின் உணர்வுகளை திசைதிருப்பியதோடு, இந்த திருவிழாக்கள் வாயிலாக மக்களிடம் இருந்து பணம் வசூல் செய்கிறார்.

எல்லா வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் உருவச் சிலைகளை வைத்து, கலர்கலராக அலங்கரித்து, உண்டியல் வசூலித்து, பாட்டுப் பாடி கூத்தடித்து மக்களை டார்ச்சர் செய்ய வேண்டியது. பிறகு பத்து நாட்களுக்குப் பிறகு அனைத்து கணபதி சிலைகளையும் கும்பல்களாக்கி ஊரெங்கும் பவனி வந்து, அதன் முடிவில் தூக்கிவந்த சிலைகளைக் கடலில் கரைப்பதாக வடிமைக்கிறார், திலகர்.

விநாயகரை ஊர்வலத்தில் எடுத்து வரும்போது, வேத-புராணங்களை வாழ்த்துவதைப் போல வாழ்த்தி வெள்ளையர்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்படும். அன்று முதல் இன்றுவரைக்கும் ஒருவித அச்சத்தை உருவாக்கும் கருவியாகவே இந்த விநாயகர் ஊர்வலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது - அன்று வெள்ளையர்களுக்கு எதிராக கோஷம்; இன்றோ இஸ்லாமியர்களுக்கு எதிரான கோஷம்.

இப்படி, திலகர்தான் இந்து தேசியவாதத்தை முதல்முறையாகத் திணிக்கிறார். மதரீதியிலான உணர்வுகளைத் தூண்டினால் மட்டுமே மக்களைத் தங்கள் வழிக்கு கொண்டு வரமுடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தவர், திலகர்.

அதற்கு மைய சக்தியாக விநாயகரைப் பயன்படுத்த இரண்டு காரணங்கள்:

1.            விநாயகர் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அறியப்பட்டவர்.

2.            விநாயகரை சாதீயப் பிரிவுகளுக்கு அப்பாற்பட்ட கடவுளாகக் காட்டுவது எளிது.

ஆரம்பத்தில் பூனா நகரில் மட்டும் பிரபலமான இந்த விநாயகர் ஊர்வலம், பிறகு மும்பையிலும் பரவுகிறது. இப்போது, இந்துத்துவ அடிப்படைவாத சக்திகளால், நாடெங்கிலும் திணிக்கப்பட்டுள்ளது.

திலகரால் 1894-ல் துவங்கப்பட்ட இந்த கணபதி ஊர்வலம், இந்துக்களை இணைத்ததோ இல்லையோ, அன்று தொடங்கி இன்று வரைக்கும் இந்து-முஸ்லீம் கலவரத்துக்கு, பிள்ளையார் ஊர்வலம் ஒரு முக்கிய காரணகர்த்தாவாக இருந்துவருகிறது என்பதுதான் சோகமான உண்மை.

- மோயாற்றுப் பிள்ளை

Pin It