Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தமிழ்நாட்டில் உள்ள சில முற்போக்கு வேடமணிந்த பெருச்சாளிகள் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட வேலையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள். எவன் எவன் எல்லாம் இந்தச் சமூக அமைப்பு மாறக்கூடாது, இது இப்படியே சனாதன முறைப்படி நடைபெற வேண்டும், பார்ப்பனன் எப்போதுமே சமூக அடுக்கில் மேல்நிலையில் ஆதிக்கம் செய்பவனாக இருக்க வேண்டும் என்று தன் வாழ்நாள் பூராவும் வாழ்ந்து மண்டையைப் போட்டானோ, அவனுக்கெல்லாம் சீர்திருத்தவாதி என்றும், சாதி ஒழிப்புப் போராளி என்றும் பட்டம் கொடுப்பது. முடிந்தால் அது போன்ற அயோக்கியர்களைப் பற்றி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சீரியல் எடுப்பது என்பது வரை அவர்களின் அழிச்சாட்டியங்கள் தொடருகின்றன. அவர்களுக்கு ஏதாவது ஒரு சின்ன துரும்பு கிடைத்தால் கூட போதும்.. அதை வைத்துக்கொண்டு அதன் மேல் தன்னுடைய கற்பனையை ஏற்றி, ஆகா ஓகோ என்று புகழ்ந்து, சம்மந்தப்பட்ட பார்ப்பனனே கூசிப்போகும் அளவுக்கு சொறிந்து, சொறிந்து ரத்தம் வரவழைத்து விடுவார்கள். இவர்களைத்தான் நாம் எப்போதுமே பார்ப்பன அடிவருடிகள் என்கின்றோம். அப்படி தமிழ் நாட்டில் உள்ள சில பார்ப்பன அடிவருடிகளால் திட்டமிட்டு ஊதி பெரிதாக்கப்பட்ட போலி பிம்பம் தான் ராமானுஜன் ஒரு சாதி ஒழிப்புப் போராளி என்பது.

ramanujar 263தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் கி.பி 1017 இல் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர் ராமானுஜம். இவர் உருவாக்கிய தத்துவத்திற்குப் பெயர்தான் விசிஷ்டாத்வைதம். அதாவது விஷேசமான அத்வைதம் என்று பெயர். இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் இவரைப் பற்றி தமிழ்நாட்டில் சில முற்போக்கு வேடமணிந்த பார்ப்பன அடிவருடிகளால் கட்டிவிடப்பட்ட கட்டுக்கதைகளைப் பற்றி முதலில் பார்ப்போம். ராமானுஜர் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்றும், அவர் திருவரங்கம் கோயிலில் அறங்காவலர் குழுவில் இருந்து பல சீர்திருத்த நடவடிக்கைகளை செய்தார் என்பதும் அவரை சோழ மன்னன் கொலை செய்ய முயற்சித்தான் என்பதும் மோசடியாக சோடிக்கப்பட்ட புளுகு வேலை என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

ராமானுஜரை ஒரு சாதிய எதிர்ப்பாளனாகக் காட்ட பார்ப்பன அடிவருடிக் கும்பல் அவரது வாழ்க்கையில் நடந்ததாக சில சம்பவங்களைச் சொல்கின்றார்கள். இந்தக் கதைகள் எல்லாம் ‘குரு பரம்பரை’ என்ற நூலில் குறிப்பிடப்படுகின்றது. இது விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் 16 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. தமிழக வைணவர்களிடையே உள்ள வடகலை, தென்கலை என்ற இரு பிரிவுகளின் அடிப்படையில் இந்நூலும் இருவகையில் உள்ளது. இந்நூலில் உள்ள கதைகள் நம்பமுடியாதனவாய் உள்ளன என்பதை இந்நூலைப் பதிப்பித்த கிருஷ்ணசாமி அய்யங்கார் தன்னுடைய முன்னுரையிலேயே குறிப்பிட்டுள்ளார். இந்தக் குருபரம்பரை கதையில் கூறப்பட்ட ராமானுஜர் பற்றிய செய்திகள் அனைத்தும் வாய்மொழி அடிப்படையில் எழுதப்பட்டதாகும். அதற்கு எந்தவித அடிப்படை சான்றும் கிடையாது. ராமானுஜர் எழுதியதாக சொல்லப்படும் எந்த நூலிலும் மேற்படி பார்ப்பன அடிவருடிகள் சொல்லும் எந்தக் கதையும் கிடையாது.

யாதவப் பிரகாசர் என்பவரிடம் முதலில் ராமானுஜர் சீடராக இருந்ததாகவும், ஆனால் அவரின் கொள்கைகளோடு ராமானுஜர் உடன்படாமல் போனதால் அவரை காசிக்கு அழைத்துச்சென்று, காஞ்சி சங்கராச்சாரியார் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனை போட்டுத்தள்ளியது போல போட்டுத் தள்ள திட்டம் தீட்டினார் என்றும் அதை எப்படியோ மோப்பம் பிடித்த ராமானுஜர் தப்பிவந்து திரும்ப அவரிடமே சீடராக சேர்ந்தார் என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் இருவருக்கும் ஒத்துவராததால் ராமானுஜரை அவர் வெளியேற்றிவிட்டாராம். இதன் பின் திருக்கச்சி நம்பிகள் என்ற பிராமணரல்லாத ஒருவரை ராமானுஜர் குருவாக ஏற்றுக் கொண்டாதவும் கூறப்படுகின்றது. ஒரு நாள் தனது இல்லத்திற்கு சாப்பிட தனது குரு திருக்கச்சி நம்பியை ராமானுஜர் அழைத்திருக்கின்றார். அதை நம்பி அவரும் ராமானுஜர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டிருக்கின்றார். ஆனால் ராமானுஜர் மனைவி அவர் சாப்பிட்ட இலையைக் கையால் எடுக்காமல் கோலால் தள்ளி அவர் உட்கார்ந்த இடத்தை சாணத்தால் மொழுகி சுத்தப்படுத்தி இருக்கின்றார். இதைப் பார்த்த ராமானுஜர் கொதித்துப்போய் அவர் மனைவியை அவரது பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு துறவறம் மேற்கொண்டார் என்று சொல்கின்றார்கள்.

இந்தக் கதையில் எங்கே சாதிக்கு எதிரான குரல் ஒலிக்கின்றது எனத் தெரியவில்லை. ராமானுஜம் தன் மனைவியிடம் “நீ எப்படி அவர் இலையைக் கோலால் தள்ளிவிடலாம், அதுவும் எனக்கு சாதி மீது நம்பிக்கை கிடையாது என உனக்குத் தெரியாதா, இதைப் பார்த்தால் ஊர் உலகம் என்னுடைய சாதி எதிர்ப்பு கருத்தைப் பற்றி கேலி பேசாதா” என சொல்லி அவரின் மனைவியைத் திட்டியதாக எந்தக் குறிப்பும் இல்லை. அவர் தன் மனைவியை அன்பாக பின்னர் அழைத்துச் செல்வதாக கூறியே அவரின் பிறந்த வீட்டிற்கு அனுப்பி இருக்கின்றார். பின்னர் ஏன் அவரின் மனைவி குருவின் இலையை கோலால் தள்ளினார், அவர் உட்கார்ந்த இடத்தை சாணியால் மொழுகினார் என நீங்கள் கேட்கலாம். ஒருவேளை குரு பார்ப்பனர் இல்லை என்ற காரணமாகவும் இருக்கலாம், இல்லை குரு பார்ப்பனன் வீட்டு சமையல் நன்றாக இருந்தது என்று வயிறு புடைக்க தின்றதால் உட்கார்ந்த இடத்திலேயே ‘கக்கா’ போயிருக்கலாம். இதனால் மனம் வெறுத்துப் போன ராமானுஜரின் மனைவி 'பாவி, ரோட்ல குளிக்காம சுத்தற கண்ட கண்ட பரதேசிப் பயலை எல்லாம் சாமியாருனு கூட்டிவந்து நடு வூட்ல பேலவுட்டு என் தாலியை அறுக்குறான்' என மனம் வெதும்பி அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால் இதை எல்லாம் வைத்துக்கொண்டு ராமானுஜர் ஒரு சாதிய எதிர்ப்பாளர் என்ற முடிவுக்கு எப்படி வரமுடியும்? சம்மந்தப்பட்ட ராமானுஜர் சாதிக்கு எதிராகப் பேசியதாக ஒரு வார்த்தை கூட கதையில் பதிவாகவில்லையே.

மேலும் திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரிடம் “ஓம் நமோ நாராயணாய” என்ற புனித மந்திரத்தை கற்றதாகவும், இந்த மந்திரத்தை யாருக்கும் கூறக்கூடாது என்ற உறுதிமொழியை மீறி திருவிழாவின் போது கோயில் மதில்மீது ஏறி நின்று அனைவருக்கும் கேட்கும்படி அதைச் சொன்னதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பாக திருக்கோஷ்டியூர் நம்பி ராமானுஜரிடம் கேட்ட போது “குருவுக்கு அளித்த வாக்குறுதியைத் தாம் மீறியதால் நரகத்திற்குச் சென்றாலும் இதைக் கேட்டவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்” என்றும் சொல்லி இருக்கின்றார். ஆனால் யாரின் மூளையிலும் தோன்றாத பல வருட கடின உழைப்பின் மூலம் தொந்தி பார்ப்பனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அதிசயமான புனித மந்திரம் ராமானுஜருக்கு முன்பே ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமழிசை ஆழ்வார் என்ற தொந்தி பார்ப்பான் “ஓம் நமோ நாராயணாய” என்ற அஷ்ட சக்ர மந்திரத்தை கூறுபவர் சொர்க்கத்தை அடைவார் என்று குறிப்பிட்டு இருக்கின்றார். அதுமட்டும் அல்லாமல் ராமானுஜர் எழுதிய ஸ்ரீ பாஷ்யத்தில் ஆன்ம விடுதலை என்பது அந்தணர், வைசியர்,சத்ரியர் என்ற மூன்று சாதியினருக்கு மட்டுமே உரியது. அது சூத்திரர்களுக்கு என்றும் கிடையாது என்று கூறியிருக்கின்றார். எனவே ராமானுஜர் அடிப்படையில் தான் ஒரு சாதி வெறியன் என்பதை அவரே அவருடைய நூலில் ஒப்புக் கொண்டிருக்கின்றார். ஆனால் சில பார்ப்பன அடிவருடிகள் “நாங்கள் அப்படி எல்லாம் விடமாட்டோம், நீங்க ஆயிரம்தான் உண்மையைச் சொன்னாலும் நாங்கள் ராமானுஜரை சாதிய எதிர்ப்பாளன் என்று தான் சொல்வோம்” என கங்கணம் கட்டிக்கொண்டு புளுகிக்கொண்டு இருக்கின்றார்கள்.

அடுத்து அவரை சோழ மன்னனான முதலாம் குலோத்துங்கச் சோழன் கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் செய்தியைப் பார்க்கலாம். இது ராமானுஜர் திருவரங்கம் கோயிலில் வாழ்ந்த போது நடந்ததாக சொல்லப்படுகின்றது. முதலாம் குலோத்துங்கன் ஒரு ஏட்டில் “சிவாத் பரதரம் நாஸ்தி” (சிவத்தைக் காட்டிலும் மேலானது எதுவும் இல்லை) என்று எழுதி அதில் பண்டிதர்கள் அனைவரையும் கைச்சாத்து இடும்படி கட்டளையிட்டதாகவும், வைணவரான ராமானுஜர் அதில் கைச்சாத்து இடாமல் தனக்குப் பதில் தனது சீடரான கூரத்தாழ்வாரை தன்னைப்போலவே வேடமிட்டு அனுப்பி வைத்தாகவும் அவர் அங்கு சென்று “குருணிக்கு மேல் பதக்கு உண்டு” என்று எழுதி கைச்சாத்து இட்டதாகவும், ஆனால் குருணி என்பதற்கு இரண்டு பொருள் உண்டு ஒன்று படி போல ஒரு முகத்தல் அளவை, மற்றொன்று சிவன் என்பதாகும். இந்த அறிய உண்மையைக் கண்டுபிடித்த மன்னன் கூரத்தாழ்வானின் கண்களை பிடிங்கிவிட்டதாகவும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னுடைய சந்நியாச ஆடைகளைக் களைந்து வெள்ளை உடை தரித்து ராமானுஜர் கர்நாடகத்திற்குத் தப்பி ஓடியதாகவும் சொல்லப்படுகின்றது.

திருவரங்கம் கோயிலில் முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்த எண்பது கல்வெட்டுகள் இருக்கின்றன. ஆனால் அதில் ஒரு கல்வெட்டில் கூட இந்தச் செய்தி பதிவாகவில்லை. அதில் குறிப்பிட்டுள்ள செய்தி எல்லாம் கோயிலுக்குச் சொந்தமான நிலம், தங்கம், கால்நடைகள் பற்றியும் வழிபாட்டிற்கான செலவுகள் பற்றியுமே உள்ளது. மேலும் இந்தக் கோயில் முதலாம் குலோத்துங்கனின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்திருக்கின்றது. ‘கோயில் ஒழுகு’ என்ற நூலைப் பதிப்பித்த கிருஷ்ணசாமி அய்யங்கார், ராமானுஜரைக் கொல்ல முதலாம் குலோத்துங்கன் முயற்சி செய்தான் என்பதை மறுத்துள்ளார். இதனால் குழம்பிப் போன வரலாற்றுப் பொய்யர்கள் உடனே முதலாம் குலோத்துங்கன் கிடையாது, இரண்டாம் குலோத்துங்கன் என கதைவிட ஆரம்பித்து விட்டார்கள்.

ராமானுஜர் 1017இல் பிறந்தார் என்பதை பொதுவாக வைணவ வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள். ராமானுஜர் 120 வயதுவரையும் வாழ்ந்ததாகவும், தன்மீதான கொலை முயற்சியில் இருந்து தப்பிக்க அவர் கர்நாடகா தப்பிச்சென்று அங்கே 12 ஆண்டுகள் வாழ்ந்தாகவும், பிறகு மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பி அவர் தன்னுடைய சாதிய எதிர்ப்புப் பணியை செவ்வனே செய்ததாகவும், பிறகு தன்னுடைய 120வது வயதில் மண்டையைப் போட்டதாகவும் நம்புகின்றார்கள். இதிலே கேலிக்கூத்தானது என்னவென்றால் 1133இல் தான் இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சி பொறுப்புக்கு வருகின்றான். அதன் படி பார்த்தால் ராமானுஜருக்கு வயது 116. தள்ளிவிட்டாலே செத்துப்போகும் நிலையில் இருந்த ஒரு கிழவனை இரண்டாம் குலோத்துங்கன் கொலை செய்ய முயற்சித்தான் என்பதும், அதற்குப் பயந்து அந்தக் கிழவன் கர்நாடகம் தப்பிச் சென்றான் என்பதும், பிறகு 12 ஆண்டுகள் கழித்து திரும்ப வந்தான் என்பதும் குமாரசாமி கணக்கைவிட மோசமான கணக்காகும். இருந்தாலும் இங்கிருக்கும் பார்ப்பன அடிவருடி கும்பல்கள் இதே கதையைத் தொடர்ந்து திரும்பத் திரும்ப சொல்லி மக்களை முட்டாள்கள் ஆக்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இதில் இருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் ராமானுஜர் எந்த ஆணியையும் புடுங்கவில்லை என்பதுதான். வழக்கமாக எல்லா பார்ப்பன அயோக்கியர்களும் உழைக்காமல் வயிறு புடைக்க தின்றுவிட்டு மல்லாக்க படுத்து விட்டத்தைப் பார்த்துக்கொண்ட செய்யும் ஆன்மீக ஆராய்ச்சியைத்தான் இந்த ராமானுஜரும் செய்திருக்கின்றார். அப்படி அவர் மல்லாக்கப் படுத்துக்கொண்டு யோசித்து கண்டுபிடித்த வாழ்வியல் நெறி என்னவென்றால் “இறைவன், உயிர், பொருள் ஆகிய மூன்றும் உண்மை. அதே வேளையில் இம்மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதவாறு ஒன்றில் இணைந்துள்ளன. அந்த ஒன்றே பிரும்மம் என்பது. எனவே தனிமனித ஆன்மா ஒரு நாளும் பிரம்மமாக முடியாது என்றாலும் பிரம்மத்தை சரணடைவதன் மூலம் மோட்ச நிலையை அடைய முடியும்" என்பதுதான் சாரமாக ராமானுஜரின் கருத்து. தினம் தினம் உழைத்துச் சோறு தின்னக்கூடிய மக்களால் எளிதில் இதைப் புரிந்து கொள்ள முடியாது. இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்களும் நாள் கணக்கில், வருடக்கணக்கில் உழைக்காமல் ஓசியில் உண்டகட்டி வாங்கித் தின்பவராக இருக்க வேண்டும். அதனால் இராமாஜர் கண்டுபிடித்த அந்த உண்மையைப் பற்றி ஆழமாக நாம் உள்ளே போய் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் இந்திய சமூகத்தில் அறிவியல் சிந்தனை காயடிக்கப்பட்டதற்குச் சங்கரருக்கு எந்த அளவிற்குப் பங்குண்டோ அதே அளவிற்கு இந்த ராமானுஜர் என்ற பார்ப்பனனுக்கும் பங்குண்டு.

இப்போது ராமானுஜரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றால் தற்போது ராமானுஜரின் ஆயிரமாவது அவதார விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஸ்ரீபெரும்புதுரில் நடைபெறும் இந்த விழாவுக்கு நிகழ்ச்சி நடக்கும் அனைத்து நாட்களிலும் மின்தடை ஏற்பட்டு விடக்கூடாது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்திரவிட்டுள்ளார். விவசாயிகளுக்கும் சிறு தொழிற்சாலைகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கத் துப்பில்லாத அரசு, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும், கார்ப்ரேட் சாமியார்களின் பணம் கொழிக்கும் மடங்களுக்கும், மக்களிடையே மூட நம்பிக்கையைப் பரப்பும் நிகழ்ச்சிகளுக்கும் தடை இல்லா மின்சாரம் வழங்க உத்திரவிடும் அயோக்கியத்தனத்தைச் சுட்டிக்காட்டத்தான். அத்தோடு தமிழ்நாட்டில் இருக்கும் பார்ப்பன அடிவருடி கும்பலின் புளுகு மூட்டைகளை அம்பலப்படுத்தவும் தான். இனி எவனாவது ராமானுஜர் சாதி ஒழிப்புக்காக பாடுபட்டார் என்று உங்கள் முன்வந்து நின்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால்………?

- செ.கார்கி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 ADVOCATE RANGARAJAN 2017-05-02 19:44
false propaganda! sri ramanujar was the one who converted dalith people as "bramins". he called themas "thirukulathoor ".
Report to administrator
+2 #2 Nakkeeran 2017-05-02 20:17
இராமனுஜர் பற்றிய கதைகளில் பாதி உண்மை பாதி பொய் என்று எடுத்துக் கொண்டாலும் அவர் சாதி பாராட்டவில்லை என்பதுதான் முக்கியம். அவரை எடை போட வேண்டும் என்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த சமூகத்தை நாம் கணக்கில் எடுக்க வேண்டும். பிராமணனனாக பிறந்தவன் சாதி எதிர்ப்பாளனாக இருக்க முடியும். சென்ற நூற்றாண்டில் பிறந்து வாழ்ந்து மடிந்த பாரதியார் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு . பிராமணன் என்றால் ஒருவர் தவறாமல் அவர்கள் எல்லோரும் சாதிமான்கள் என்பது தவறு. கீற்று கட்டுரையாளர் கார்க்கி பிராமணர்களை எதிர்க்கிறார் போல் படுகிறது. பிராமணர் வேறு பிராமணியம் வேறு அல்லது அது இரண்டும் ஒன்றா? உயர்சாதி வெள்ளாளரிடம் காணப்படும் சாதியம் எந்த வகையைச் சார்ந்தது?
Report to administrator
0 #3 Raja 2017-05-03 08:09
வயிறு புடைக்க தின்றதால் உட்கார்ந்த இடத்திலேயே ‘கக்கா’ போயிருக்கலாம'- உன் லெவல் இவ்வளவுதான். வேற என்ன சொல்ல!
Report to administrator
-1 #4 sun 2017-05-03 15:49
இராமாநுசர் புரிந்த
புரட்சி என்னவென்றால்

அவர் திருக்கோட்டியூர ்நம்பி அவர்களிடம்
பெற்ற "மெய்ப்பொருள்"
உபதேசத்தை

அது என்னவென்று(அது நமோநாராயணா கிடையாது)
வெளிப்படையாக
ஓலைச்சுவடியில்
எழுதி நோட்டீஸ் போல
விதைத்து விட்டதுதான்.

அது நமோ நாராயணா
என்ற
என்று பொய்யாக கூறப்பட்டு விட்டது.


அது ஔவையார் கொடுத்த
நெல்லிக்கனி போன்ற
சாகாவரம் உள்ள
"பொருள்"
ஆகும்.

மேலும் அக்காலத்தில்
பிறப்பால் சாதி கிடையாது.

சத்ரியன்
சூத்திரன்
பார்பனன்
என்பதெல்லாம்..

மனிதனின்
குணநலன்கள்
மற்றும்
அவனின்
செயல்பாட்டை
குறிக்கும்.


அதை சாதீயாக
மாற்றியவர்கள்
கி.பி 1500
இல் தமிழ்நாட்டை
ஆக்கிரமித்த
திராவிடர்கள்
(விசயநகர அரசுகள்)
Report to administrator
+2 #5 Ramea 2017-05-04 11:48
Mr.Nakkeeran,
Please read the article in the following link. The reason why Ramanujar was lenient towards lower caste people is given in it. Being lenient is not the requirement. Sharing power is the basic requirement. As far as I know there is no single Brahmin was / is ready to share power with the lower caste people. Bharathiar you are mentioning is also not an exemption.

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/28328-2015-04-20-07-49-50
Report to administrator
0 #6 Ramachandran Mohan 2017-05-07 16:22
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் .சிரிப்பை வரவைத்தது .இந்த கட்டுரை ்
Report to administrator
0 #7 Subash 2017-05-08 14:23
தோழர், உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்., நாகரிகமாக எழுதினால் நிறைய பேருக்கு கருத்து சென்று சேரும்...உளவியல ் அணுகுமுறை முக்கியம் தானே.,
Report to administrator

Add comment


Security code
Refresh