தந்தை பெரியாரின் தலைசிறந்த பண்பு எது? எந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும் - எந்த வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டாலும் அதற்குத் தம்மை முழுவதுமாக ஒப்படைத்துவிடு வதுதான்.

காங்கிரசிலிருந்த 6.5 ஆண்டுக்காலமும் அவர் அப்படியே இருந்தார்.

பார்ப்பனரல்லாத இந்துக்கள், இந்திய அளவில், 94 விழுக்காட்டுப் பேர்; தென்னகத்தில் 97 விழுக்காட்டுப் பேர்.

இவர்களுள் இரண்டொரு உள்சாதியினரைத் தவிர, மற்றெல்லாப் பார்ப்பனர் அல்லாத உள்சாதியினரும் பார்ப்பனப் புரோகிதத்தைப் பின்பற்றினர்; கோவில் வழிபாடு - இறுதிக்கடன் முதலான எல்லா இன்ப-துன்ப நிகழ்ச்சிகளுக்கும் பார்ப்பனரை அழைத்தனர். பார்ப்பனரைக் குருவாக ஏற்றனர்.

நீதிக்கட்சித் தலைவர்களுள் டாக்டர் நாயர் ஒருவரைத் தவிர, மற்றெல்லோ ரும் பார்ப்பனியத்தை நம்பினவர்கள். ஆனால் படிப்பை - அரசு வேலைகளை - உள்ளாட்சி நிறுவனங்களை - சட்டப் பேரவைகளை பார்ப்பனர்கள் ஆக்கிர மித்து ஆதிக்கம் செலுத்தினர் என்பதால், 1921 முதல் 1928க்குள் அந்த ஆதிக் கங்களை, ஆட்சித் திட்டங்கள் மூலம் ஆட்டங்காணச் செய்தனர். அதுதான் அவர் கள் போட்ட கெட்டியான அடித்தளம்.

தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய சென்னை மாகாண சட்டப்பேரவை இடங்கள் 98.

1920 நவம்பர் தேர்தலில் 81 இடங்களில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது; 1923 தேர்தலில் 61 இடங்களை மட்டும் பெற்றது; 1926 நவம்பர் தேர்தலில் 22 இடங்களை மட்டும் பெற்றுப் படுதோல்வி அடைந்தது.

சமீன்தாரர் தொகுதியில் ஆந்திராவில் போட்டியிட்டார் பனகல் அரசர். அவரைத் தோற்கடிக்கத் தவம் கிடந்தார், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். அதற் காக ஆந்திராவில் ஒரு சிறிய சமீனை விலைக்கு வாங்கி, பனகல் அரசரை எதிர்த்து அவர் போட்டியிட்டுத் தோற்றார். பனகல் அரசர் வென்றார்.

1925 நவம்பரில் காங்கிரசை விட்டு வெளியேறிய ஈ.வெ.ரா. 1926இல் தோற்றுப்போன நீதிக்கட்சிக்கு ஆறுதல் சொல்லவில்லை.

“தேர்தல் தோல்வியால் ஒன்றும் குடி முழுகிவிடவில்லை. பார்ப்பனர் அல்லா தாருக்குப் படிப்பையும் பதவியையும் பிடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது. அது போதாது. பார்ப்பனரல்லாதாருக்குச் சுயமரியாதை உணர்வு இல்லை. பார்ப்பனியத்தை ஒழிக்க - “பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை இயக்கம்” ஒன்றைக் காணவேண்டும்; தலைவர்கள் உடனே கூடுங்கள்; உனே சுய மரியாதை இயக்கம் காணுங்கள்” என, அறைகூவல் விடுத்தார். பனகல் அரசரையும், ஏ. இராமசாமி முதலியாரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தென்மாவட்டங்களில் மட்டும் ஈ.வெ.ரா. தொடர் பயணம் வந்தார்.

நீதிக்கட்சியின் பத்தாவது மாகாண மாநாட்டை மதுரையில், 26.12.1926இல், ஏ. பரசுராம் பாட்ரோ (ஹ.யீ. யீயவசடி) தலைமையில் நீதிக்கட்சித் தலைவர்கள் கூட்டினர். 12.12.1926, 19.12.1926இல் “குடிஅரசு” இதழில், தம் நோக்கம் பற்றி ஈ.வெ.ரா. தெளிவுபட எழுதினார். அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டது அந்த மாநாடு. இவ்வாறுதான் “பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை இயக்கம்” 26.12.1926இல் தோற்றுவிக் கப்பட்டது.

1929க்குள் சுயமரியாதை இயக்கத்துக்குப் பெரும் படை உருவாகிவிட்டது.

17, 18.2.1929இல் செங்கற்பட்டில் நடந்த “முதலாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில்” பார்ப்பனரல்லாத இந்துக்களான 97 விழுக்காட்டுப் பேரின் சமூக விடு தலைக்கும், பெண் விடுதலைக்கும், தன் தன்மானத் துக்கும் அறிவுக்கும் விடுதலைதரும் எல்லாத் திட்டங் களையும் அறிவித்தார், ஈ.வெ.ரா. “சுயமரியாதை இயக்கத்தின் தோற்றுநர் ஈ.வெ.ரா.” என அம்மாநாடு உலகுக்கு அறிவித்தது. அதற்கு முன்னரே, 1928இல் பனகல் அரசர் மறைந்துவிட்டார். நிற்க.

1934இல் திருப்பூரில் நடைபெற்ற “செங்குந்தர் வாலிபர் மாநாட்டு”க்குத் தலைமையேற்ற காஞ்சி சி.என். அண் ணாதுரையை, அங்கேதான் முதன்முதலாகச் சந்தித் தார், ஈ.வெ.ரா. அவருடைய தலைமையில் நடந்த மாநாட்டில் “சமதர்மம்” பற்றி ஈ.வெ.ரா. பேசினார். 1927இல் திருநெல்வேலி மாநாட்டிலேயே ஈ.வெ.ரா. “சமதர்மம்” பற்றிப் பேசினார்.

1926இல் “சுயமரியாதை”, 1927இல் “சமதர்மம்”- இந்த இரண்டும்தான் ஈ.வெ.ரா.வின் தலையான கொள்கைகள்.

1936 முதல் சி.என்.ஏ. பெரியாரின் இயக்கத்தில் செயல்பட்டார். நம்மவரில் அன்று எம்.ஏ. படித்தவர் அரிதினும் அரிது. கொஞ்ச காலம் நீதிக்கட்சி முதலமைச் சர் பொப்பிலி அரசரிடம் நேர்முக உதவியாளராக அவர் பணிபுரிந்தார்.

1938 - இந்தி எதிர்ப்புப் பெரும் போராட்டத்தின் பின்னர், மக்கள் இயக்கமாக - தமிழரை - தமிழைக் காக்கும் இயக்கமாக சுயமரியாதை இயக்கம் வளர்ந்தது. படித்த ஆடவரும் மகளிரும் படை படையாக இயக்கத் தில் சேர்ந்தனர்.

1936இல் ஈ.வெ.ரா.வுடன் சேர்ந்த சி.என்.ஏ., 13 ஆண்டுகள் அவரோடு இருந்து பணியாற்றினார்.

1949 செப்டம்பரில் சி.என். அண்ணாதுரை தனி இயக்கம் கண்டார். திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி, வீறுடன் செயல்பட்டது.

“திராவிட நாடு பிரிவினை”யைக் குறிக்கோளாகக் கொண்ட அக்கட்சி, 1957இல் தேர்தலில் முதன்முதலாக ஈடுபட்டது.

1956 நவம்பரில் தனித்தமிழ் மாநிலம் அமைந்தது. 1957க்குள் தி.மு.க. விசையாக வளர்ந்தது.

காங்கிரசின் மய்ய அரசு ஆதிக்கம், பண வலிமை, பார்ப்பன - பனியா ஆதரவு இவற்றையும்; பெரியாரின் கடும் எதிர்ப்பு, பெருந்தலைவர் காமராசரின் 9 ஆண்டு கால நல்லாட்சிச் செல்வாக்கு - இவ்வளவையும் மீறி 1967 தேர்தலில் தி.மு.க. போதிய எண்ணிக்கை வலி மையுடன் வெற்றி பெற்றது.

பணக்காரர் ஆதரவு-பார்ப்பனரின் பெரும் பேராதரவு இவ்வளவையும் புறங்கண்டு வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் சி.என்.ஏ. 2.3.1967 இரவில் - தாம் ஒரே தலைவராக ஏற்றிருந்த பெரியாரை திருச்சியில் நேரில் கண்டு, “அய்யா நீங்க...” என்று மட்டுமே பேசிய உடன், “என்னைத்தான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே, பார்த்து நடந்துக்கோங்க” என்று மட்டுமே மனமாரச் சொன்னார், பெரியார்.

அடுத்த நாள் “விடுதலை” இதழின் முதல் பக்கத்தில் - இடப்புறப் பேனலில் வந்த செய்தி - “க.து. தலைவர் பெரியாரைக் கண்டு பேசினார்” என்பது மட்டுமே.

திருச்சியில், 6.3.1967இல் கூடிய தி.க. பொதுக்குழுவில், “தி.மு.க. ஆட்சி ஆதரவு”த் தீர்மானம் - சில தோழர்களின் அழுகைகள், ஒப்பாரிகளுடன் நிறை வேற்றப்பட்டது.

தி.மு.க.வின் முதலாவது சாதனை, “1928 முதல் 40 ஆண்டுகளாக நடைபெற்ற சுயமரியாதை முறைத் திருமணங்களும், இனிமேல் நடக்கப் போகும் சுய மரியாதை முறைத் திருமணங்களும் இந்துச் சட்டத் திருமண வடிவங்களுள் ஒன்றாக இருந்து செல்லு படியாகும்” என்பதுதான்.

இந்தியாவில் வேறு எங்கிலும், எந்தக் கட்சி ஆட்சி யாலும் நிறைவேற்றப்படாத, “பார்ப்பனியம் ஒழிந்த - புரோகிதம் ஒழிந்த - சமற்கிருதம் ஒழிந்த - தீ வளர்ப் பும் ஏழு தப்படியும் ஒழிந்த தமிழர்-திராவிடர் தன்மான முறைத் திருமணம் ஆகும், இது.” இது தி.மு.க. ஆட்சியின் மாபெரும் செயல் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. பார்ப்பனர் அல்லாதாரை இழிமக்களாகக் கருதுகிற பார்ப்பன மத - பார்ப்பனியக் கொடுமையை யும் இழிவையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டவர் களுக்கு மட்டுமே  இது புரியும்.

ஆனால்...

1. இந்தச் சட்டம் 1968இல் நடப்புக்கு வந்த பிறகு, தமிழகத்தில் ஆண்டுதோறும் நடக்கிற பல இலக்கக் கணக்கான பார்ப்பனரல்லாதார் வீட்டுத் திருமணங்களுள்-விசுவகருமர், கொங்கு வேளாளர் சமூகங் கள், சில நாடார் வீடுகள் தவிர - எத்தனை விழுக்காடு திருமணங்கள் சுயமரியாதை முறைத் திருமணங்கள் என்பதைக் கணக்கெடுத்ததா, தி.மு.க. ஆட்சி? ஏன் எடுக்கவில்லை? ஊராட்சிகள், ஊராள்வோர்கள் (V.A.Os..) வழியாக 2010க்குள் ஓராண்டிலாவது இவர்கள் கணக்கெடுத்திருக்க வேண்டாமா?

‘நல்ல பார்ப்பன’ அம்மையார் அவர்கள் தலை மையில் நடக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இதுபற்றிய கணக்கை எப்போதாவது எடுக்குமா? எடுக்காது.

நாம் அறிந்தவரையில், ஆண்டுதோறும் நடைபெறும் திருமணங்களுள் 2 (அ) 3 விழுக்காடு திருமணங் கள் மட்டுமே சுயமரியாதை முறைத் திருமணங்களா கும். இது போதுமா?

2. 1967-1971, 1971-1976 சனவரி, 1989-1991 என, 2010 வரையில் 5 தடவைகள் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் முதலமைச்சராகச் செயல்பட்டார்.

அவர், “தொடக்கப் பள்ளியில் பனகல் அரசரின் குறு வரலாற்று நூலை மனப்பாடம் பண்ணி, திராவிட இயக்கக் கொள்கைகளைச் செரித்துக் கொண்ட தாக”, அவரே ஒரு நேர்காணலில் சொன்னார்.

பள்ளிப்பாடம் என்பது கட்டாயப் பாடம்; தேர்வுக்கு உரிய பாடம்.

வள்ளலார், அயோத்திதாசர் தொடங்கி - டாக்டர் சி. நடேசன், டாக்டர் நாயர், சர். பிட்டி தியாகராயர், பெரி யார் ஈ.வெ.ரா. டாக்டர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் முதலான வர்களின் குறு, சிறு, பெரிய வரலாற்று நூல்களையும்; சுயமரியாதைத் திருமணம் பற்றிய கொள்கை விளக்க நூல்களையும் 6ஆம் வகுப்பில் தொடங்கி - பட்டப் படிப்பு வரையில் துணைப்பாட நூல்களாக வைத்து, மாணவ-மாணவிகள் இளம்பருவத்திலேயே இவற்றை மனப்பாடம் செய்திட-மாந்திட தி.மு.க. ஆட்சி வழிகண்டி ருக்க வேண்டாமா?

2011 மக்கள் தொகைக் கணக்குப்படி, 2016இல், தமிழ்நாட்டில் 7 கோடிப் பேர் உள்ளனர்.

இவர்களுள் இன்று 2.5 கோடி குழந்தைகள் பாலர் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையில் படிக்கிறார்கள்.

1968 முதல் இன்று வரையில் இப்படிப் படிப்புப் பெற்றவர்கள் 3 கோடி ஆண்களும், பெண்களும் ஆவர். இவர்கள் பள்ளிக்கல்வியில் கட்டாயப் பாடமாக - தேர்வுக் குரிய பாடமாக இவற்றைப் படித்திருந்தால், அப்படிப் படித்தவர்களில் கால்வாசிப் பேராவது, சுயமரியாதை முறைத் திருமணத்தை அவரவர்களே விரும்புவார் களே! சாதி மறுப்புத் திருமணங்களை அவரவர்களே விரும்புவார்களே!

அன்புகூர்ந்து பெரியார் தொண்டர்கள் திறந்த மனத்துடன் இவை பற்றிச் சிந்தியுங்கள்.

தமிழ்நாடு மாநிலம் தனியாக அமைந்த பிறகும் - “தமிழ்நாடு” என்ற பெயரை, 1967 வரையில் காங்கிரசு அரசு-கமராசர் ஆட்சி உட்பட, வைக்கவில்லை. அறிஞர் சி.என்.ஏ. முதலமைச்சராக இருந்தபோது, இரண்டாவ தாகச் செய்த பெரும் சாதனை இது.

1956க்குப் பிறகும், தமிழ்நாடும், மற்ற மொழி மாநி லங்களும் “முழுத் தன்னுரிமை” (Complete Autonomy )-அதிகாரப் பிரிவினையோடு கூடிய தன்னுரிமைத் தமிழ் நாடு (Divided Sovereignty) - பெற எந்த முயற்சி யையும் - திராவிடக் கட்சி எதுவும் செய்யவில்லை.

ஒரே ஆட்சி - இந்தி ஒன்றே ஆட்சிமொழி - 126 கோடி இந்திய மக்களுக்கும் என்பது - பச்சையான அடிமை நிலை.

1976 வரையில் மாநிலங்களிடம் இருந்த கல்வித் துறை அதிகாரம், 3.1.1977 முதல் மய்ய அரசு மேலா திக்கம் கொண்ட “பொது அதிகாரப் பட்டியலுக்கு”ப் போய் விட்டது.

இருந்த அதிகாரத்தையும் இழந்துவிட்டு, அதைக்கூட மீட்கமுடியாத இவர்கள் “இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி” என்பதை ஒழிக்கப் போவது எப்படி? எப்போது?

1957இல் 2 பேர்களில் தொடங்கி - 2016இல் 55 பேர்களுக்குமேல்-790 பேர் கொண்ட நாடாளுமன்றத் தில் உறுப்பினர்களாக உள்ள இரண்டு திராவிடக் கட்சிகளும் - “இந்தி ஆட்சி மொழி என்பதை மாற்றுங் கள்-பட்டியலிடப்பட்ட 22 மொழிகளையும் ஆட்சிமொழி களாக ஆக்குங்கள்” என்று கோரி, ஒரு தனியார் மசோதாவை-ஒரு சட்ட முன்வடிவை, 59 ஆண்டு களில், எப்போதுமே மக்கள் அவையில் முன்மொழிய வில்லையே, ஏன்?

இனி, எப்போது, எப்படி. இவர்கள் இந்தி ஆட்சி மொழி என்பதை ஒழிப்பார்கள்?

திராவிட இயக்கத்தவர் - பெரியார் தொண்டர்கள் ஒரே ஒரு செய்தி பற்றிச் சிந்தியுங்கள்.

1. சுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் - இந்துச் சட்டத்தின் கீழ் உள்ள, சட்ட ஏற்புடைய திருமண வடிவங்களுள் ஒன்று. அதாவது, “பிராந்திய வழக்கச் சட்டம் - (Territorial Customary Law)” என்கிற சட்டத் தகுதியை மட்டுமே கொண்டது.

இது வேறு பிராந்தியங்களில் செல்லாது.

தமிழராகிய நம்மிடையேயும் இம்முறை விரைந்து பரவவில்லை. சில ஆயிரம் திருமணங்கள் தொடர்ந்து நடக்கும். அவ்வளவே.

2. எந்த ஒரு புதிய கொள்கையையும் கல்வித் திட்டத்தில் இடம்பெறச் செய்யாமல், எவ்வளவு பெரிய அளவில் பரப்புரை செய்யப்படுவதாலும் அக்கொள்கை வெற்றி பெறாது.

இதில் நம் கொள்கை எதிரியின் புரிதல் மிகவும் சரியானது. எப்படி?

வாஜ்பேயி ஆட்சிக் காலத்தில், கல்வி அமைச்சராக இருந்த மனோகர் ஜோஷி என்கிற பார்ப்பனர் - சோதிடம் கற்றல், கருமாதி மந்திரம், கலியாண மந்திரம் கற்றல் இவற்றைப் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலேயே புகுத்தினார். தமிழ்நாட்டில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இவை பட்டப்படிப்பாக உள்ளன. இது எல்லா அதிகாரங்களையும் கொண்ட இந்திய அரசின் கல்வித் திட்டம்.

3.இன்று இந்திய ஆட்சியில் உள்ள பாரதிய சனதாக் கட்சி, மிகவும் சரியாக, பாலர் கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி வரையில்-சமற்கிருதம் கற்பித்தல், மூச்சுப் பயிற்சி என்கிற “யோகா” கற்பித்தல், சோதிடம் - வேதக் கணக்கு, வேத வேதியியல், வேதப் பொறியியல் கற்பித்தல் என்கிற பாடத் திட்டங்களை, 2017-2018 கல்வி ஆண்டிலேயே புகுத்திவிடப் போகிறது.

இன்றைய தமிழக ஆட்சி, கோவில்களில் இலவசச் சோறு போடுதல் என்பதை அரசுத் திட்டமாகவே செய் கிறது.

4.இவ்வேறு மக்கள் நலத்திட்டங்களுள் - இந்துத்து வக் கொள்கைப் பரப்பலுக்காக, அரசுச் செலவில் மோடி அரசு மேற்கொள்ளப் போகிறது.

“இளமையில் கல்வி - கல்லில் எழுத்து” என்பது முதுமொழி.

இளமையில் எதைக் கற்றுக்கொடுக்கத் தவறினாலும் - ஆங்கிலத்தில் அல்லது தாய்மொழியில் அறிவியல் பட்டப்படிப்பு, பொறியியல் - மருத்துவப் பட்டப்படிப்பு இவைகளைப் படிப்பவர்கள் - வீட்டிலும், தெருவிலும், நாட்டிலும், சமூகங்களிடையேயும் நிலைத்திருக்கிற நம்பிக்கைகள்-பழக்கங்கள்-வழக்கங்கள் - இவற்றை உதறிவிட்டு, நம் பரப்புரையை மட்டும் கேட்டு - ஏற்றுப் பகுத்தறிவு - சுயமரியாதை - சாதியொழிப்பு - மூட நம்பிக்கை - ஆண் ஆதிக்க ஒழிப்பு இவற்றை மேற் கொள்ளமாட்டார்கள்; தயங்குவார்கள்.

“தனித்தமிழ்நாடு” அடைவது என்பது, இந்திய அரசோடு - அரசுப் படையோடு போரிட்டு, கோடிக் கணக்கான பேரைச் சாகக் கொடுத்து, அதன் பின் நடப்பது.

“முழுத் தன்னுரிமை” என்பது இந்திய அரசுக்குச் சில அதிகாரங்களை மட்டும் விட்டுக் கொடுத்துவிட்டு - மற்றெல்லா அதிகாரங்களையும், மற்றும் எஞ்சிய அதிகாரங்களையும் கொண்ட “தன்னுரிமைத் தமிழ் நாடு” அடைவது.

2017இல் இந்த ஒரு நோக்கத்தை அடைவதை, ஒரே வேலைத்திட்டமாகக் கொள்ளவும், அதற்காக இந்தியா முழுவதும் செல்லவும் துணிவோம் - பெரி யார் கொள்கையை வென்றெடுப்போம், வாருங்கள்!