மரண வியாபாரி மோடியின் ஆட்சியில் சாமானிய மக்களுக்கு மட்டும் அல்லாமல், மாநில முதலமைச்சர்களுக்கே பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. தங்கள் சித்தாந்தங்களுக்கு எதிரான கருத்து வைத்திருப்பது யாராக இருந்தாலும், அவர்களைக் கொல்வதற்கு நாங்கள் தயங்க மாட்டோம் என்பதை அவர்கள் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டே இருக்கின்றார்கள். இந்தியாவில் இருக்கும் பொறுக்கிகள், காமவெறியர்கள், கொலைகாரர்கள், மாஃபியாக்கள் அனைவரையும் தன்னுடைய உறுப்பினர்களாகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய அமைப்பை இயக்கி வருகின்றது. தன்னுடைய சாகாக்களில் எப்படி பெண்களைக் காதலித்து ஏமாற்றுவது, அவர்களின் பிறப்புறுப்பை எப்படி பிளேடால் கிழித்து கருவறுப்பது, பின்பு கருவறுத்த அதே கையால் கொடிபிடித்து எப்படி பராத் மாதா கீ ஜே என்று சொல்வது, குழந்தைகளை எப்படிக் கடத்துவது, இராணுவத் தேர்வுகளில் வினாத்தாளை திருடி எப்படி 10 கோடிக்கு விற்பது, பிரியாணித் திருடர்களை இராணுவத்தில் எப்படி நுழைப்பது, பின்பு அவர்கள் மூலமாக ராணுவத்தில் இருந்து குண்டு வைப்பதற்கு வெடிமருந்துகளை எப்படி கடத்துவது என அனைத்தும் சொல்லித்தரப் படுகின்றது போலும்.

pinarayi vijayanநாட்டில் அங்கீகாரம் பெற்ற கூலிப்படையாக, கொலைகாரக் கும்பலாக ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டு வருகின்றது. நினைத்த மாத்திரத்தில் யாரை வேண்டும் என்றாலும் கொல்லும் அதிகாரத்தை அது பெற்றிருக்கின்றது. அரசின் அனைத்து உறுப்புகளிலும் தனது சித்தாந்த அடியாட்களைக் கொண்டு அது நிரப்பியுள்ளது. அதனால் அது துணிந்து யாருக்கு வேண்டும் என்றாலும் சவால்விட்டு அழைக்கின்றது. “உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது; நாங்கள் தான் அனைத்தும்” என்கின்றது. சிறுபான்மையினர், தலித்துகள், அறிவுஜீவிகள், இந்தியாவின் பெரும்பான்மை ஏழைகள் என அனைவருக்கும் எதிராக தனது கூலிப்படையை ஏவி கொன்று போடுகின்றது. பாசிச சித்தாந்தம் என்பது மக்கள் பலத்தினால் வெற்றி பெறுவது கிடையாது. அது எப்போதுமே தனது ஆயுத பலத்தால்தான் வெற்றி பெறுகின்றது என்பதை அது தினம் தினம் நிரூபித்து வருகின்றது. முடிவாக ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் நிறுவ விரும்புவது பார்ப்பனனையும், பார்ப்பனியத்தையும் ஏற்றுக்கொண்ட சனாதன அடிமைகளை உருவாக்குவதுதான். அதற்குத் தடையாக யார் வந்தாலும் அது மாநிலத்தின் முதல்வராகவே இருந்தாலும் தலையை எடுக்க அது தயங்காது.

ராமன் எந்த இஞ்ஜினியரிங் கல்லூரியில் படித்துவிட்டு வந்து பாலம் கட்டினான் என்று கேள்வி எழுப்பிய கலைஞருக்கு எதிராக பொறுக்கி சாமியார் வேதாந்தி, ‘கலைஞர் தலையையும், நாக்கையும் வெட்டிகொண்டுவந்தால் அதற்கு நிகரான தங்கம் கொடுப்பேன்’ என அறிவித்தான். விளைவு பெரியார் மண்ணில் தர்ம அடி வாங்கினார்கள். கோழைகளைப் போல ஓடி ஒளிந்தார்கள். இப்போது கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் கூலிப்படை தனது கோர நாக்கை நீட்டியுள்ளது. பினராயி விஜயனின் தலையை வெட்டினால் ஒருகோடி பரிசு தரப்படும் என மத்தியப் பிரதேச ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் குண்டன் சந்திரவாட் என்பவர் பேசியிருக்கின்றார். அதுவும் கேரளாவில் நின்றுகொண்டு. இந்த அயோக்கியன் வளர்ந்து பெரிய ஆளாக வந்து இப்படி ஒரு கீழ்த்தரமான கொலைகாரனாக வருவான் என்று குழந்தையிலேயே இவன் மூஞ்சைப் பார்த்து இவனது பேருக்கு முன்னால் ‘குண்டன்’ என்பதை அவனது பெற்றோர்கள் சேர்த்து உள்ளனர் என்று தெரிகின்றது. விளையும் பயிரை முளையிலேயே கண்டுபிடித்து இருக்கின்றார்கள்.

கொலை செய்யும் அளவுக்கு பினராயி விஜயன் என்ன செய்துவிட்டார் என்று உங்களுக்குத் தோன்றலாம். இந்துத்துவ அமைப்பின் கடும் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் மங்களூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்கப் பேரணியில் கலந்துகொண்ட பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அயோக்கியத்தனங்களை ஆதி முதல் அந்தம் வரை அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்தி பேசியிருக்கின்றார். தீக்கதிரில் வெளிவந்துள்ள அவரது முழுப் பேச்சையும் படித்தீர்கள் என்றால் இது தெரியும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எப்படி தொடங்கப்பட்டது, முசோலினி மற்றும் ஹிட்லர் உடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குள்ள தொடர்பு, சவர்க்கர் எப்படி ஆங்கில ஏகாதிபத்தியத்தை நக்கிப் பிழைக்கும் நாயாக இருந்தார், காந்தியைக் கொல்ல கோட்சேவை வைத்து எப்படி திட்டமிட்டார்கள், தலித்துகள், சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் நடத்திய படுகொலை சம்பவங்கள், இடதுசாரி எழுத்தாளர்களான கல்புர்கி, தபோல்கர், கோவிந்த் பான்சரே ஆகியோரின் படுகொலைகள், பெருமாள் முருகனுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காலித்தனம் என விலாவரியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அம்மணமாக்கி பேசியிருக்கின்றார். அந்தக் கோபம் தான் இந்தக் குண்டனை தலையை வெட்டுவேன் என பேச வைத்திருக்கின்றது.

இவன் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த ஆர்.எஸ்.எஸ் கும்பலும் இன்று நாட்டு மக்களுக்கு எதிரான அமைப்பாகவே செயல்பட்டு வருகின்றது. பார்ப்பனியத்துக்கு எதிராக சிந்தனை கொண்டவர்களை மட்டும் அல்லாமல் முதலாளிகளுக்கு எதிராக, இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகப் போராடுபவர்களுக்குக் கூட இன்று ஆர்.எஸ்.எஸ் தனது கோரமுகத்தையும் வேசித்தனத்தையும் காட்டிவருகின்றது. ஜல்லிக்கட்டு போராட்டம், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிரான போராட்டம், பொறுக்கி சாமியார் ஜக்கி வாசுதேவுக்கு எதிரான போராட்டம் போன்றவற்றில் பங்கேற்றவர்களை இங்கிருக்கும் பார்ப்பனப் பொறுக்கிகளான எச்சிகலை ராஜா போன்றவர்கள் தீவிரவாதிகள் என்றும், நக்சலைட்டுகள் என்றும் முத்திரை குத்துகின்றார்கள். இல.கணேசன் நாட்டின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டை தியாகம் செய்யச் சொல்கின்றான். இன்னும் சூத்திரன் பொன்னார், சூத்திரச்சி தமிழிசை போன்ற மானங்கெட்ட ஜென்மங்களும் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் எதிராக செயல்படுவதையே தனது தொழிலாகக் கொண்டிருக்கின்றார்கள். மாநில அரசோ இது போன்ற அயோக்கியர்களுக்கு ஆதரவாக செயல்படுவதையே தனது பெருமைமிகு நடவடிக்கையாகக் கருதுகின்றது. ஈஷா யோகாமையத்திற்கு மோடி வருவதை எதிர்த்து இங்கிருக்கும் பெரியாரியவாதிகளும், மார்க்சியவாதிகளும் போராடிக் கொண்டிருக்கும் போது எடப்பாடி பழனிசாமி அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்கின்றார். இப்போது தமிழக அரசு ஈஷா யோக மையம் ஆதியோகி சிலையையும், கட்டிடங்களையும் அனுமதி பெறாமல் கட்டியுள்ளது என நீதிமன்றத்தில் அறிக்கை கொடுக்கின்றது. இப்படி வெட்கம்கெட்டத்தனமாக நடந்து கொள்ளும் ஒரு பார்ப்பன அடிவருடி அரசு எப்படி இங்கிருக்கும் பார்ப்பன பொறுக்கிகளை அடக்கும் எனத் தெரியவில்லை.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையே தலையை வெட்டுவேன் என சொல்லும் அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தைரியம் எங்கிருந்து வருகின்றது என்றால் அது மோடியிடம் இருந்து வருகின்றது. ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை கொன்று குவிப்பதற்குச் சூத்திரதாரியாக இருந்த மோடி என்ற மனித முகமூடி அணிந்த ரத்தக் காட்டேரியிடமிருந்து வருகின்றது. அது கொடுக்கும் தைரியம் தான் இந்த தீவிரவாத கும்பலை எழுச்சியோடு செயல்பட வைக்கின்றது. எதை வேண்டும் என்றாலும் செய்துவிட்டு அதை மூடி மறைத்து விடலாம் என்பதுதான் அவர்கள் எப்போதுமே கடைபிடிக்கும் உத்தி. கோட்சேவை வைத்துக் காந்தியை கொல்வார்கள்; கொன்றுவிட்டு கோட்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பே கிடையாது என்பார்கள். மாட்டுக்கறி தின்பவர்கள், வந்தே மாதரம் சொல்ல மறுப்பவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் என்பார்கள்; பிறகு எதிர்ப்பு வந்தால் அது பேசியவர்களின் சொந்தக் கருத்து என்பார்கள். இது கோழைகள் வழக்கமாக கடைபிடிக்கும் உத்தி. அதே உத்தியைத்தான் இப்போது குண்டனின் பேச்சுக்கும் அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றார்கள். குண்டனின் கருத்து அவனது தனிப்பட்ட கருத்தாம். ஆர்.எஸ். எஸ் அமைப்பிற்கு எப்போதுமே வன்முறையில் நம்பிக்கை இல்லையாம். பார்ப்பன அடிமைகளின் வீரத்தின் லட்சணம் எப்படி பல்லிளித்துக் கிடக்கின்றது என பாருங்கள்.

எனவே நமது பெரியாரியவாதிகளும், அம்பேத்கரியவாதிகளும், மார்க்சியவாதிகளும் எந்தத் தயவுதாட்சணியமும் பார்க்காமல் சகட்டு மேனிக்கு இந்த அயோக்கியர்களுக்கு எதிராக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். இவர்களை இப்படியே விட்டால் நாட்டில் எந்த ஒரு சாமானிய மனிதனும் நிம்மதியாக வாழமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி விடுவார்கள். அன்று மன்னர்களுக்கும், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகத் திரண்டதுபோல், இன்று பன்னாட்டுப் பெரும் முதலாளிகளுக்கும், இந்திய தரகு முதலாளிகளுக்கும் மாமா வேலை பார்க்கும் இந்தப் புல்லுருவிகளுக்கும் எதிராக ஒரே அணியில் களம் காண வேண்டும். ஆர்.எஸ்.எஸ் காலிகளால் தலையை அல்ல, தலை மயிரைக் கூட ஒன்றும் செய்யமுடியாது என்பதை இவர்களுக்குப் புரியும்படி நாம் விளக்க வேண்டும்.

- செ.கார்கி

 

Pin It