முன்பெல்லாம் ரஷ்யாவுக்கு பன்றித் தோளைத் தான் ஏற்றுமதி செய்வார்கள்; இப்பொழுது பன்றியைவே ஏற்றுமதி செய்கிறார்கள் என்று காமராஜர் முதலமைச்சராக பதவி ஏற்று, ரஷ்யா செல்லும்போது அவர் கருப்பா இருந்தார் என்கிற காரணத்துக்காக காமராஜரை 'பன்றி' என்று வசைபாடியவர்தான் கருணாநிதி.

evks elangovan'எங்கே இருக்கிறது திராவிட நாடு' என்று காங்கிரஸ் பெண் எம்.ல்.ஏ. அனந்தநாயகி சட்டமன்றத்தில் கேட்டபோது, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி அளித்த பதில், "நாடாவை அவிழ்த்து, பாவாடை தூக்கினால் திராவிட நாடு தெரியும்". இதற்கு கருணாநிதி தந்த விளக்கம் "நாடாவால் கட்டி வைக்கப்பட்டுள்ள நூலை அவிழ்த்து, பக்கங்களை புரட்டிப் பார்த்தால் திராவிட நாடு தெரியும்".

அஇஅதிமுக இதற்கு கொஞ்சமும் சளைத்த கட்சி இல்லை. ஆளுநர் சென்னாரெட்டியை சந்தித்தபோது அவர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என்று வாய் கூசாமல் பொய் சொன்னவர்தான் ஜெயலலிதா. இதுமட்டுமா? நீதிமன்றத்திலேயே சுப்ரமணியசுவாமிக்கு பாவடையைத் தூக்கிக் காட்டியவர்கள்தான் அஇஅதிமுகவின் மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள்.

இதையெல்லாம் சொல்லுவதானால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதை சரி என்று வாதம் செய்வதற்கு இல்லை. அவர் இதைவிட இன்னும் கேவலமாகப் பேசியவர். 'நான் பெரியாரின் கொள்கை வழிப் பேரன்' என்று சீமான் கூறியதற்கு, நான் தான் பெரியாரின் அதிகாரப்பூர்வமான பேரன் என்றும், பெரியார் சிறு வயதில் செய்த தவறு காரணமாக சீமான் பிறந்திருக்கலாம் என்றும் பெரியாரை கொச்சைபடுத்தி பேசியவர் இந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

மகாபாரதத்தில் ஒரு இடம் வரும். எல்லோருக்கும் மூத்தவனான யுதிர்ஷ்டிரன் அர்ஜுனனைப் பார்த்து ‘பேசாமல் உன் காண்டீபத்தை தேரோட்டியிடம் கொடுத்து விட்டு அவனுக்குப் பதிலாக நீ தேரோட்டியாக இருந்திருந்தால் இந்நேரம் கர்ணனைக் கொன்றிருப்பான்.' என்றார். அர்ஜுனன் உடனே வாளை எடுத்து விட்டான். ஏனென்றால், ‘காண்டீபத்தை இன்னொருவரிடம் கொடு’ என்று யார் சொன்னாலும் அவர் தலையைக் கொய்து விடுவதாக அர்ஜுனன் ஒரு சபதம் போட்டிருக்கிறான். இப்போது என்ன செய்வது? சபதம் நிறைவேறியாக வேண்டும். ஆனால் சகோதரர்களில் யாரும் சாகவும் கூடாது. கிருஷ்ணன் ஓர் உபாயம் சொல்கிறான். ‘அர்ஜுனா, யுதிர்ஷ்டிரனை இகழ்ந்து பேசு. மூத்தோரை இகழ்தல் கொலைக்குச் சமம்.’ ‘சரி. நான் இகழ்ந்ததற்கான தண்டனை?’ ‘உன்னையே நீ புகழ்ந்து கொள். தற்புகழ்ச்சி மரணத்துக்குச் சமானம்.’

'நான் பேசியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்' என்று ஒரு வரி சொல்லி இருந்தால் இந்த பிரச்னை எப்போதோ முடிந்து போயிருக்கும். இதை எல்லாம் நாம் எப்படி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் எதிர்பார்க்க முடியும்?

'அண்ணா நாமம் வாழ்க.! எம்.ஜி.யார் நாமம் வாழ்க.!' என்று மேடை தோறும் முழங்கும் ஜெயலலிதா ஏனோ அண்ணா சொன்ன 'மறப்போம், மன்னிப்போம்', 'வாழ்க வசவாளர்கள்' என்பதை முற்றிலும் மறந்து போனார்.!!!

- தங்க.சத்தியமுர்த்தி

Pin It