jayalalitha sasikala 567

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவும் மற்ற மூன்று கூட்டுக் களவாணிகளும் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். நீதிபதி குமாரசாமி தனக்கு கொடுக்கப்பட்ட பணியை மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கின்றார். இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் நீதிமன்றங்கள் மீது முற்று முழுதாக நம்பிக்கை வைத்திருக்கும் படித்த மேட்டுக்குடி வர்க்கத்திற்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் இது ஒரு சாட்டையடி தீர்ப்பு!

 ஜனநாயகம் என்பது முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதி என்று நாம் சொல்லும் போது நம்மை ஏளனமாகப் பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை பரிசோதனை செய்து கொள்வதற்கான வாய்ப்பு இது.

 எந்த சாட்சியங்களின் அடிப்படையில் குன்ஹா ஜெயாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறையும், 100கோடி ரூபாய் அபராதமும் விதித்தாரோ அதே சாட்சியங்கள் அடிப்படையில் குமாரசாமி ஜெயாவையும் மற்ற நான்கு பேரையும் விடுவித்திருக்கின்றார். இந்திய நீதிமன்றம் என்பது ஆளும் வர்க்கத்தின் கூலிப்படை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக இப்போது தெரிந்திருக்கின்றது. ஊழல் என்பது நீதிமன்றத்திற்கு வெளியே நடக்கும் ஒரு அந்நியமான நடவடிக்கை அல்ல, அதை நீதிமன்றம் கட்டுப்படுத்துவதற்கு, அது நீதிமன்றத்திற்கு உள்ளேயும் நடக்கும் ஒரு உயிரோட்டமான பிரச்சினை. அதை இதே கட்டமைப்பிற்குள் நின்று ஒரு போதும் நம்மால் தீர்க்க முடியாது. இந்த ஜனநாயகம் சதவீதக்கணக்கில் ஊழலை அனுமதித்திருக்கின்றது. 10 சதவீதத்திற்கும் அதிகமான சொத்தை கணக்கில் வராமல் சேர்த்ததாக நிருபிக்கப்பட்டால் தான் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட முடியும். அது 10 சதவீதத்திற்கு குறைவு என்றால் உங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இதற்குப் பெயர்தான் ஜனநாயகம்!.

 ஜெயலலிதா உண்மையில் யோக்கியம் என்றால் என்ன மயித்துக்கு 18 வருடம் வாயுதா மேல வாயுதா வாங்கி வழக்கை இழுத்தடித்தார் என்று குமாரசாமியால் சொல்லமுடியுமா? கலைஞர் சரியாகவே சுட்டிக்காட்டி இருக்கின்றார், வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடக்கும் போது ஜெயா தரப்பு வழக்கறிஞர் குமார் இது அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டுள்ள பொய் வழக்குஎன்று சொன்னதற்கு இதே நீதிபதி குமாரசாமி குற்றவாளிகள் மீது கூறியுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் முழுமையாகக் காட்டாமல், வாய்வழியாக பொய்வழக்கு என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அரசுத் தரப்பில் 259 சாட்சிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். புகார் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் 2 ஆயிரத்து 341 ஆவணங்கள் தாக்கல் செய்து உறுதிபடுத்தியுள்ளனர். குற்றவாளிகளின் தரப்பில் 99 சாட்சிகளும் 385 ஆவணங்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளீர்கள். அதிலும் அரசுத்தரப்புக் குற்றத்தை முறியடிப்பதற்கான ஆதாரங்கள் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லைஎன்று கூறியிருக்கின்றார். இது ஒன்றே போதும் அங்கே என்ன நடந்திருக்கும் என்று ஊகிப்பதற்கு.

ஆனால் இந்தத் தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்று சொல்லி உள்ளதால் நாம் இன்னும் ஒரு பதினெட்டு ஆண்டுகள் காத்திருப்போம். ஏன் என்றால் இனி வழக்கு மெதுவாகத்தான் நடக்கும் சாத்தியக்கூறு இருக்கும். அப்படியே வேகமாக நடந்தாலும் தத்து போன்ற நேர்மையான(?) நீதிபதிகள் என்ன மாதிரி தீர்ப்பு வழங்குவார்கள் என்று நமக்குத் தெரியும்!

 ஜெயா விடுவிக்கப்பட்டதை அறிவித்தவுடன் தொண்டை கிழிய கத்தி தெருவில் வருபவன் போனவனுக்கெல்லாம் இனிப்பு கொடுத்து, பட்டாசு வெடித்து ஒரு திருவிழா போல கொண்டாடிய என் மானமுள்ள இனிய தமிழ்மக்களே! இந்த நொடியில் உங்களிடம் சொல்வதற்கு ஒன்று இருக்கின்றது என்னிடம்.

 வேதவள்ளி, வேதவள்ளி என்றொரு பெரிய பாப்பாத்தி தன் மகள் சின்ன பாப்பாத்தி கோமளவள்ளி உடன் கர்நாடகத்தில் இருந்து கிளம்பி தமிழகத்துக்கு பஞ்சம் பிழைக்க வந்தார். முதலில் திரைப்படத்துறையில் பெரிய பாப்பாத்தி வேதவள்ளிக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் தன் பெயரை ஸ்டைலாக சந்தியா என்று மாற்றிக் கொண்டார். பின்னர் குட்டி பாப்பாத்தி கோமளவள்ளிக்கும் கலைத்துறையில் சேவை செய்யும் பெரும்பாக்கியம் கிடைத்தது. அவரும் தன்னுடைய பெயரை ஜெயலலிதா என்று ஸ்டைலாக மாற்றிக்கொண்டார். பின்னர் பல திரைப்படங்களில் குத்துப்பாட்டுக்கு கலக்கல் நடனமாடி இரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதிலும் குறிப்பாக நம் நாடு படத்தில் அவர் பாடிய நான் ஏழு வயசுல இளநி வித்தவ, பதினேழுல நிலைச்சி நின்னவஎன்ற தத்துவப் பாடல், அவரை புகழின் உச்சியிலேயே கொண்டு போய் நிறுத்தியது.

 முதலில் நீங்கள் நிறுத்துங்கள், இந்த கருமத்த எல்லாம் எதுக்கு இப்ப எங்ககிட்ட சொல்லீட்டு இருக்கிறீங்க என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. கொஞ்சம் சிரமம் பாக்காமல் நான் சொல்வதைக் கேளுங்கள் என் இனிய தமிழ் மக்களே! சினிமாவிலே அயிட்டம் சாங்குக்கு ஆட்டம் போட்டவள், சினிமாவுக்கு நடிக்கவந்த பல பெண்களை தன்னுடன் படுக்கக் கூப்பிட்ட பொறுக்கிகள், பெண்கள் வயிற்றில் பம்பரம் விட்ட நாக்குத்துறுத்திகள், நிஜ வாழ்க்கையில் ஒன்றும், ஒன்றும் இரண்டு என்று கூட சொல்லத் தெரியாத கூமுட்டை கம்மநாட்டிகளுக்கெல்லாம் ஓட்டு போட்டு எம்.பிக்களாகவும், எம்.எல்.ஏக்களாகவும் தேர்ந்தெடுத்து அனுப்பிய என் இனிய தமிழ்மக்களே, கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள்.

 இன்று ரேசன் கடையிலே அரிசி இல்லை, கோதுமை இல்லை பாமாயில் இல்லை என்று ஏகத்துக்கும் கோபித்துக் கொள்ளும் மக்களே அன்று உங்களுக்குத் தெரியாதா, ஜெயா ஒரு மோசடிப் பேர்வழி! என்றும் கொள்ளைக்காரி! என்றும். ஒருமுறை ஏமாந்தால் அவனை முட்டாள் என்று சொல்லலாம் ஒவ்வொரு முறையும் ஏமாறும் உங்களை என்னவென்று சொல்வது. தொண்ணுத்தி ஆறில் இருந்து எத்தனை ஊழல் வழக்குகள் ஜெயாவின் மீது போடப்பட்டன. ஆனால் அதற்குப் பின்னரும் அவரையே நீங்கள் இரண்டு முறை தேர்ந்தெடுத்தீர்கள். அதற்குக் காரணம் நீங்கள் பிழைப்புவாதத்திலும், சுயநலத்திலும் மூழ்கிக்கிடக்கிறீர்கள், அரசியல் என்பதை பொறுக்கித் தின்பதற்கான ஓர் இடமாகவே நீங்கள் பார்க்கிறீர்கள். ஊழல் என்பது இந்திய ஜனநாயகத்தின் பிரிக்கமுடியாத ஓர் அங்கம் என்ற முடிவிற்கு நீங்கள் வந்துவிட்டீர்கள். இதை மாற்றுவதற்கான எந்த முயற்சியும் எடுக்காத, எடுக்க விரும்பாத கோழைகளாக நீங்கள் மாறி வெகு காலம் ஆகிவிட்டது. ஆனால் இலை அமைதியை விரும்பினாலும் காற்று விடாது, மக்களே!

 ஜெயாவின் மீது இதுவரை எத்தனை ஊழல் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றது என்பது அவருக்கே தெரியாது, அத்தனை வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. வண்ணத்தொலைக்காட்சி வழக்கு, டான்சி நில வழக்கு, பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு, டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கு, பிறந்த நாள் பரிசு வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு, வருமானவரி வழக்கு என அனைத்து வழக்குகளிலும் தன்னுடைய பண பலத்தாலும், அதிகார பலத்தாலும், பார்ப்பன சாதி பலத்தாலும் அவர் விடுதலை ஆகிவிட்டார். இந்திய நீதிமன்றங்களில் புரையோடிப்போய் இருக்கும் பார்ப்பன சனாதான தர்மத்தின் மேலாண்மையும், ஊழலும், ஜெயா என்ற ஊழல் பெருச்சாளியை சட்டத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் ஓடி ஒளிய அனுமதித்தது. அந்தப் பெருச்சாளியை தொடர்ந்து தமிழ்நாட்டை கொள்ளையடிக்க அங்கீகாரம் வழங்கியது.

 ஆனால் நீதியையே தங்கள் வாழ்க்கையாக கருதும் ஆச்சாரியா, குன்ஹா போன்ற நேர்மையான மனிதர்கள் ஜெயாவின் உச்சிக் குடுமியை பிடித்து தரதரவென்று நீதிமன்றத்திற்கு இழுத்து வந்தனர். நல்லதொரு தீர்ப்பும் தந்தனர். ஆனால் அனைத்து நீதிபதிகளும் அவ்வாறு இருப்பதில்லை. தத்துக்களும், குமாரசாமிகளும் தான் நீதிமன்றத்தில் 99 சதவீதம் இருக்கின்றனர்.

ஆளுநரை சந்தித்து ராமதாஸ் அளித்த மனுவில் கூறப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஜெயாவை சாகும்வரை தூக்கில் போட்டாலும் திருந்தாத ஈனப்பேர்வழி என்று காட்டுகின்றது என்பதை, ஜெயா விடுதலை அடைந்து விட்டார் என்று கொட்டம் அடிக்கும் அம்மா அடிமைகள் அறியமாட்டார்கள். கிரானைட் ஊழல், சட்டவிரோத தாதுமணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, மின்சாரம் கொள்முதல் செய்ததில் ஊழல், கட்டுமான மற்றும் கட்டட அனுமதி வழங்குவதில் ஊழல், பொதுவிநியோகத் திட்டத்திற்கான பருப்பு கொள்முதல் செய்தததில் ஊழல், முட்டை ஊழல், ஆவின்பால் ஊழல், போக்குவரத்து துறை பணியாளர்கள் நியமனத்தில் ஊழல், பொதுப்பணிதுறை ஊழல், கல்வித்துறை நியமனத்தில் ஊழல், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நியமனத்தில் ஊழல், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல், ஆசிரியர்களுக்கு இடம்மாறுதல் தந்ததில் ஊழல், பசுமை வீடு கட்டும் திட்டத்தில் ஊழல், மது விற்பனையில் ஊழல், ஸ்சோ அப்பா….. இப்பவே கண்ணக் கட்டுது. 

 சார் நாம எவ்வளவுதான் சொன்னாலும் கேக்கவே மாட்டேன் என்று அடம்பிடிக்கும் மக்களிடம் சொல்லி என்ன பயன்?.ஆனால் சொல்வது நம் கடமை என்பதால் சொல்லுகின்றோம். மானமும் அறிவும் மானிடர்க்கு அழகு என்றார் பாரதிதாசன். எம் மக்கள் அந்த நிலையை அடைவதற்கு இன்னும் ஒரு யுகம் தேவைப்படும் போல் இருக்கின்றது.

Pin It