திருப்பதியில் வீற்றிருக்கும் பாலாஜி அவர்களுக்கும்,
அவர் பக்தகோடிகளுக்கும்,
நமஸ்தே.

rajapaksaஇலங்கை அதிபர் அடுத்த மாதம் வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் தானே வெற்றி பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் இலங்கை அதிபர் தேர்தலுக்கான விண்ணப்பம் கொடுத்தவுடன் திருப்பதி பாலாஜியைக் கும்பிட வந்துவிட்டு போயிருக்கிறார். எப்படியும் அவர் கோரிக்கையை பாலாஜி நிறைவேற்றி வைக்கலாம்! அதற்காக பாரதப் பிரதமர் மோதி போல நாமும் இப்போதே அவர் வெற்றி பெற வாழ்த்தெல்லாம் சொல்ல முடியாது.

திரு பாலாஜியும் அவர் பக்தர்களும் கவனிக்க வேண்டியது என்னவென்றால் "நான் கோவில் கருவறையில் வீற்றிருக்கும் கடவுளை நம்புகிறேன்" என்று கோவில் மற்றும் இந்திய சட்டப்படி இந்து அல்லாத பிற மதத்தவரான புத்த மதம் சார்ந்த ராஜபக்ஷே அதற்கான குறிப்பேட்டில் கையெழுத்துப் போட்டு உறுதிமொழி அளித்துவிட்டு தான் கோவிலுக்குள் போயிருக்க முடியும்.

Now, the TTD authorities have made it compulsory as per the government order (GO MS No. 311 of AP Revenue Endowments-1) under Rule no. 16. "It is now a mandatory rule for all those belonging to various faiths other than Hinduism to sign a declaration form before entering the hill temple stating that they have faith in the presiding deity,"

100 கோடி இந்துக்கள் வாழும் இந்தியாவில் 'இந்தியா இந்துகளின் தேசம்' என்று கூப்பாடு போடும் கூட்டங்களும் அதன் தலைவர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இத்தருணத்தில் இந்திய சட்டப்படி இன்றுவரை "இந்துவாகவே" இருக்கும் எனக்கு இப்போது சில சந்தேகங்கள்... நான் முதல் முறையாக என் பார்வையை உங்கள் பக்கமிருந்து பார்க்கிறேன். தரவுகளைக் கூட உங்கள் வசமிருந்து தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும்.. சிக்கல்கள் தீரவில்லை.

என் கேள்விகள்:


இலங்கையில் 2076 இந்துமதக் கோவில்களை இடித்து தரைமட்டமாக்கிய ராஜபக்ஷே திருப்பதி பாலாஜியை மட்டும் பக்தியுடன் வந்து கும்பிடுவது ஏன்?

அப்படியானால் அந்த 2076 கோவில்களும் இந்துக் கோவில்கள் இல்லையா?

அல்லது

திருப்பதி கோவில் இந்துக் கோவில் இல்லையா?

தமிழர்கள் இந்துக்கள் இல்லையா?

ஒருவேளை இப்படி இருக்குமோ..

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய 'இந்து மதம் எங்கே போகிறது?" நூலில் குறிப்பிட்டபடி திருப்பதியில் வீற்றிருப்பது சாட்சாத் புத்தபகவான் தானோ! புத்தர் கோவில் தான் சிவன் கோவிலாகி அதன் பின் விஷ்ணுதளமாக... அந்த ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு புத்தமதத்தைச் சார்ந்தவரான ராஜபக்ஷ் அடிக்கடி திருப்பதிக்கு வருவதும் சாமி கும்பிடுவதும், கோரிக்கை வைப்பதும் அது நிறைவேறியவுடன் நன்றி சொல்ல வருவதும்..நடக்கிறதோ..!!!!!!

பாலாஜி பகதர்கள் திருப்பதியில் வீற்றிருப்பது புத்த பகவான் என்று இனி ஒத்துக்கொள்ள வாய்ப்பில்லை. எனவே, இலங்கையில் இடிக்கப்பட்ட 2076 கோவில்களும் இந்துக் கோவில்களே அல்ல என்றும் தமிழர்களும் இந்துக்களே அல்லர் என்பதையுமாவது ஒத்துக்கொள்ளுங்களேன்.... டா.. ...

Pin It