காமன்வெல்த்-3

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல நாடுகளும், அரசியல் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இறுதிகட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது அதை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்றும், இனப்படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

முக்கியமாக காமன்வெல்த்தின் உள் அமைப்புகளிலிருந்தே மாநாட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காமன்வெல்த்தின் 18வது சட்ட வல்லுநர் சங்க மாநாடு கடந்த ஏப்ரல் 14-18, தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்றது. அதில் காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் 27 பேர் ஒன்று கூடி காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.
http://www.radioaustralia.net.au/international/radio/program/asia-pacific/commonwealth-lawyers-call-for-chogm-boycott/1161618

இறுதிக்கட்ட போரில் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம்(Human Rights Watch)வும், ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1)http://www.firstpost.com/world/human-rights-watch-slam-sri-lankas-chilling-media-code-887335.html
2)http://www.amnesty.org/en/news/commonwealth-giving-sri-lanka-carte-blanche-human-rights-abuses-2013-09-27

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டேசுமாண்ட் டூட்டு-வும்,முன்னாள் ஐரீசு நாட்டு அதிபரும், முன்னாள் ஐ.நா மனித உரிமை ஆணைய தலைவருமாகிய ராபின்சனும் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தகூடாது அதை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்றும், இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் கோரியுள்ளனர்.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36117

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது போல 2011 மாநாட்டில் உறுப்பு நாடான கனடா தனது எதிர்ப்பை தெளிவாகவும், உறுதியாகவும் பதிவு செய்ததை பார்த்தோம்.

கனடா பிரதமர் சிடீபன் கார்பர் கூறுகையில் “ The Commonwealth is fundamentally about values of freedom, democracy, human rights, rule of law, good governance.The Government of Colombo has failed in all those respects” என குறிப்பிட்டார்.(அதாவது காமன்வெல்த்தின் அடிப்படை விதிகளை கடைப்பிடிப்பதில் இலங்கை தோற்றுவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.). மேலும் கனடா அரசு சார்பாக காமன்வெல்த்திற்கு அளித்து வரும் 20 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

1)http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36727
2)https://www.colombotelegraph.com/index.php/canada-fury-at-sri-lanka-choice-for-commonwealth-talks/

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பெய்ர்ட் ”இலங்கையை ஒரு பேய்” என்று குறிப்பிட்டுள்ளார்.கனடாவில் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் ஒருமித்த குரலில் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கின்றன

தற்போது ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் பிரேசர் காமன்வெல்த் மாநாட்டை ஆஸ்திரேலியா புறக்கணிக்க வேண்டும் எனக் கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவின் கீரின் கட்சி (Australian Greens) தலைவர் லீ ரியானனும் இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். http://www.news.com.au/breaking-news/national/fraser-leads-sri-lanka-chogm-boycott-call/story-e6frfku9-1226629948027 ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் நடைப்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் டோனி அப்போட் ஆஸ்திரேலியா பங்கேற்கும் என்றே அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் காமன்வெல்த் இலங்கையில் நடப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முக்கியமாக கூட்டமைப்பின் தலைவியான இங்கிலாந்து இராணி எலிசெபத்துக்கு பதிலாக அதிகாரமற்ற இளவரசர் சார்லஸ் பங்கேற்பார் என்ற அறிவிப்பு இலங்கைக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இலங்கை, இங்கிலாந்து ஊடகங்கள் பல இராணியின் உடல்நிலையை காரணம் காட்டினாலும்,இனப்படுகொலை மற்றும் மனித உரிமை குற்றச்சாட்டுகளை கொண்ட ஒருவருடன் ஒரே மேடையில் பங்கேற்க விரும்பாததன் காரணமாக தான் எந்தவொரு அரசியல் அதிகாரமும் அல்லாத இளவரசரை தனது சார்பாக அனுப்புவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாநாட்டில் தான் பங்கேற்பதா வேண்டாமா என்ற பிரதமர் கேமரூனிடம் இராணி கலந்தாலோசித்ததாக ”டெலிகிராப்” என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36291
http://www.telegraph.co.uk/news/uknews/queen-elizabeth-II/10028725/Queen-faces-conflict-on-Sri-Lanka-summit.html

இங்கிலாந்து பிரதமரோ “ உலகத்தலைவர்கள் மற்றும் ஊடகங்களின் பங்கேற்பது இலங்கையின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பசப்பு வார்த்தைகளில் தனது தரப்பு வாதத்தை நியாயப்படுத்துகிறார். கேமரூனின் இந்த நிலைப்பாட்டை மாற்ற வலியுறுத்தி நடுநிலையாளர்கள் பலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். துணைப்பிரதமர் நிக் கிளெக், பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் முடிவு சர்சைக்குரியது.அதை நான் ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிகள் பலரும் மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை பிரதமர் மாற்றிக்கொள்ள வெண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அனைத்துக்கட்சிகளின் பாராளுமன்ற குழு உறுப்பினரான சியோபன் மெக்டோனாக், வரலாற்றில் இராசபட்சேவின் அரசாங்கம் என்றுமே அழுத்தங்களுக்கு அடிபணிந்ததில்லை என்றும், இலங்கை ஒரு மோசமான நாடு என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை இங்கிலாந்தின் நிலைப்பாடு தெரிவிக்கப்படவில்லை.

சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கான இலங்கைத்தூதர் ”பண்டுலா செயசேகரா” “NO FIRE ZONE” ஆவணப்பட இயக்குநர் கேலம் மெக்கரேவைப் பற்றி டிவிட்டரில் கூறியுள்ளது இங்கிலாந்து, ஆஸி போன்ற உறுப்பு நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் கேலம் மெக்கரே ஒரு LTTE தீவிரவாதி என்றும், தன்னால் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கேலம் மெக்கரேவை கலந்துக்கொள்ள விடாமல் தடுக்க முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார். இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளரை மிரட்டும் விதத்தில் சிங்களத்தூதர் பதிவிட்டுள்ளது பத்திரிக்கை சுதந்திரத்துக்கு எதிராக விடப்பட்ட சவலாக தோன்றுவதாக ஊடகவியலாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36459

தமிழகத்திலிருந்தும் வலுவான எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும், 2013 மாநாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை தெளிவுப்பெற்றுள்ளது. தமிழக மாணவர்கள் ஆங்காங்கே போராட்டங்களை வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால், டெசோ போன்ற சில துரோக அமைப்புகள் இந்தியா பங்கேற்காமல் இருந்தால் போதும் என்றளவில் தவறான கோரிக்கைகளை முன்வைத்து மக்களை குழப்பிக் கொண்டிருக்கின்றன. தமிழர்களுக்கு எதிராகவே எப்போதும் முடிவெடுக்கும் வடஇந்திய கட்சிகளான ஆளும் காங்கிரசும், பா.ஜ.க முடிவை அறிவிக்கவில்லை. மலேசியாவிலிருந்தும் எதிர்ப்புக்குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36467

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது. உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் இருந்த தோழர்.தியாகு கைதுசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போதும் தனது உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். அவருக்கு ஆதரவு வலுத்து வருகிறது.

பல மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆசிய மன்றம், குடிமக்கள் பங்கேற்கும் உலகக் கூட்டமைப்பு, காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு, ஆஸ்திரேலிய மனித உரிமை சட்ட மையம், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு, அமைதி மற்றும் நீதிக்கான இலங்கைப் பிரசார இயக்கம், பிரிட்டன் ஐ.நா. சங்கம் போன்ற மனித உரிமை அமைப்புகள் காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்தக்கூடாது என வற்புறுத்தி வருகின்றன.

இனப்படுகொலை கூட்டுக்குற்றவாளிகளான அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இத்தகைய எதிர்ப்புகளை மீறியும் காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்த மும்முரமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு துணையாய் காமன்வெல்த் கூட்டமைப்பும் அதன் அடிப்படை விதிகளை கூட கடைப்பிடிக்காத நாட்டில் உச்சி மாநாட்டை நடத்த முனைபவர்களுக்கு துணை போவதன் மூலம் அதன் உண்மை முகம் வெளிப்பட்டிருக்கிறது.

காமன்வெல்த்தின் விதிகளை எவ்வாறு இலங்கை மீறியிருக்கிறது என்பதை அடுத்த கட்டுரையில் காணலாம்.

- த.ஆனந்த், ஒருங்கிணைப்பாளர், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., +91-9677226318)

Pin It