“சொர்க்கத்தை படைத்தவர் யார்? “ கடவுள் என்பீர்களே ! அதுதான் இல்லை. “ஜான் மில்டன் “. பார்வையற்றவரான அவர்தான்இழந்த சொர்க்கம் ( பெரடைஸ் லாஸ்ட்) . எனும் இலக்கியம்  படைத்தார்.அந்த இலக்கியத்திற்குவாசகர்கள் சூட்டிய பெயர் “சொர்க்கம்“ !

உலகின் அதிகாரமிக்க சொல் – சித்தாந்தம் - நூல் எது தெரியுமா? “அரசியல் (politics) தான் “.அரசியல் என்பது அரிஸ்டாடில் எழுதிய ஒரு தத்துவ நூல். அதுதான் இன்று குடும்பம், கிராமம்,நாடு,கண்டம்,பூமி,பிரபஞ்சம்என எல்லாவற்றையும்ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.

“மனிதன் என்பன் அரசியல்  விலங்கு“என்ற தத்துவம்தான் அரசியல் தத்துவங்களின் முன்னோடியானது.பிளேட்டோவின் சீடர்   அரிஸ்டாடில். ப்ளேட்டோ எழுதிய குடியரசு தத்துவங்களை தழுவிதான் அரிஸ்டாட்டில் அரசியல் படைத்தார்..ஆனால்குடியரசு நூலை விடஅரசியல்  நூலே சிறந்ததாககருதப்படுகிறது. காரணம், குடியரசு ஜனநாயகத்தின் மனசாட்சி.அரசியல் மக்களாட்சி,மன்னராட்சி இரண்டிற்குமான வழிகாட்டி.முடியாட்சி  தலைவன் என்பவன் முட்டாள்களின் தலைவன் என கூறும் அரசியல்  ;மக்களாட்சி தலைவன் என்பவன் அறிவாளிகளின் வேலைக்காரன் என சொல்கிறது.    முதல் தத்துவத்தின் கீழ் ஹிட்லர் , இடி அமின் போன்றவர்கள் செயல்பட்டார்கள்.   இரண்டாவது  தத்துவத்தை ஆபிரகாம் லிங்கன், காந்திஜீ போன்றவர்கள் கொள்கையாக கொண்டார்கள்.அரசியல் நூல்  வெற்றிக்கான காரணம் இதுதான்.

ஐந்து கண்டங்களிலும்  தனது ஆளுமையை அரங்கேற்றியவர் அலெக்ஸாண்டர். கிமு 325 ஆம் ஆண்டு அவர் பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் நுழைகையில்ஆக்சித்ரேசியா பழங்குடி மக்களால் விரட்டியடிக்கப்பட்டார்.பின்வாங்கியஅவர்  எதையும் இந்தியாவிலிருந்து எடுத்துச்செல்லவில்லை.ஆனால்அரசியல்தத்துவங்களைபரப்பிவிட்டுச்சென்றார்.அலெக்ஸாண்டர் படையெடுப்பின் முக்கிய நோக்கம்  நாடு பிடிப்பு அல்ல.அரிஸ்டாடிலின் அரசியல் தத்துவங்களை பரப்புவதே.இன்று கண்டங்கள் தாண்டி எல்லா நாடுகளிலும்  அரசியல் இடம் பிடித்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அரசியல் நூலின் வீரியமும் அலெக்ஸாண்டரின் வீரமும்தான்.

தொழிலாளர்களின் பைபிள் என அழைக்கப்படும் நூல்  மூலதனம்.இன்று உலகில் கட்டமைக்கப்பட்டுள்ள குடும்பம், கூட்டமைப்பு, சங்கம், கூட்டணி எல்லாவற்றிருக்கும் அடித்தளம் கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம்தான்.நேரு உடனான  ஒரு பாராளுமன்ற விவாதத்தில் “ நாக்கு எங்கள் மூலதனம்“ என பெருமைப்பட்டுக்கொண்டார் பேரறிஞர் அண்ணா. தாராபாரதி ஒரு கவிதையில் “வெறும் கை என்பது மூடத்தனம்,  பத்து விரல்களும் மூலதனம் “ என்கிறார் .  அத்தகைய சிறப்புமிக்க இந்த  மூலதனம் முதலாளித்துவ நாடுகளில் கலகமூட்டும் நூலாககுற்றம் சாட்டப்பட்டு ,தடை செய்யப்பட்டிருந்தது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

உலக   நாடுகளை  தனது ஏகாதிபத்தியத்தின் கீழ்  வைத்திருந்த நாடு பிரிட்டிஷ்.  ஒரு முறை அந்த நாட்டு மக்களிடம் பிபிசி வானொலி ஒரு கேள்வி கேட்டது.ஒரு வேளை பிரிட்டிஷ்சாம்ராஜ்யம்வேறொரு நாட்டிடம் அடிமைப்பட்டால் , தாங்கள் எதை அந்நிய சக்தியிடம் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்? “ . இந்தக்கேள்விக்கு   பெரும்பான்மையான  மக்கள் சொன்ன பதில் “ஷேக்ஸ்பியர் நாடகங்கள்“ஒரு நூலுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்தீர்களா!  “ உலகம் ஒரு நாடக மேடை.  நாம்  ஒவ்வொருவரும் நடிகர்கள்“என சொன்னவர் அல்லவா ஷேக்ஸ்பியர்.. அத்தகைய  சிறப்புமிக்க ஷேக்ஸ்பியர் நாடகங்களை  ஏற்றுக்கொள்ளாத எழுத்தாளர்கள்அன்றும் , இன்றும் உண்டு.

மக்களின்  எதார்த்த வாழ்க்கையை காட்டாமல் கலாச்சார பிற்போக்குத்தனத்தை பரப்பியவர் ஷேக்ஸ்பியர் என்றார் பெர்னாட்ஷா. இலக்கியத்திற்காக கிடைத்த  நோபல் பரிசை வாங்க மறுத்தவர் ஷா மட்டுமே.  ஷெக்ஸ்பியர் எழுதிய ஹாம்லெட் நாடகம்தந்தையைக்கொன்று தாயை மணந்து சிம்மாசனம் ஏறும்சித்தப்பா கதை என்றால் ஷைலக் வட்டிக்காக ஒரு பவுண்ட் இதயத்தை ஈவு இரக்கமில்லாமல் கேட்கும் பாத்திரப்படைப்பு என்கிறார் ஷா. நாடகங்கள் பார்வையாளர்களின் வாழ்க்கையை, கலாச்சாரத்தை  பிரதிபலிப்பதாக இருக்க வேண்டுமே தவிரபடைப்பாளி தன் கற்பனையை அள்ளி வீசுவதாக இருக்கக்கூடாது  என்றார் அவர்.   அவரது கருத்திற்கு பிறகுதான் நாடகக்கலை எதார்த்த நிலைக்கு வந்தது.

உலக நாடகங்களில்ஒரு பாமர தம்பதியை கதை மாந்தர்களாக வைத்து  படைக்கப்பட்ட முதல்  இலக்கியம் சிலப்பதிகாரம்தான். அந்நூல் உணர்த்தும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் எனும் வாசகம் ஜெர்மன் நாடாளுமன்ற அவையில்  பொறிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டில் பல்கலை மாணவர்களுக்கு  விருப்பப்பாடமாக சிலப்பதிகாரம்இருந்துக்கொண்டிருக்கிறது.அதேபோன்றுபொதுவுடைமைகருத்துகளின்முன்னோடி  தத்துவம் என்றால் அது கணியன் பூங்குன்றனார்  எழுதிய “ யாதும் ஊரே யாவரும் கேளிர்“என்பதுதான்.இந்தத் தத்துவம் ஐ.நா பெருமன்றத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. உலக படைப்புகளில் அதிக பக்கங்கள், அதிக பத்திகள், அதிக கதாப்பாத்திரங்கள் கொண்ட  நூல் மகாபாரதம்.அந்த நூல் சமீபத்தில்ரஷ்யாவில் தடைசெய்யப்பட்டு ,பிறகு தடையை நீக்கிக்கொண்டது யாம் அறிந்ததே!

 உலகில் பல நூலகள்  அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயே  கவிஞர் கதேயின் நாவலான “ இளம் வெர்தரின் துயரங்கள்“ எனும் நூல் வெளிவந்த ஒரு மாதத்தில்  முற்றிலுமாக தடைசெய்யப்பட்டது. அதில்  கதாநாயகன் வெர்தர் காதல் தோல்வின் காரணமாகத் தன்னை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொள்கிறான். இதை வாசித்த வாசகர்கள் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட சம்பவத்தால் அந்த நாவல் உடனடியாக தடை செய்யப்பட்டது.  இன்று வரை அந்த தடை நீடிக்கிறது

இந்தியாவில் 1919ஆண்டு காந்தியடிகளின் தலைமையில் சத்யாக்கிரகம் உச்சத்தை எட்டிக்கொண்டிருந்த நேரம்.  நடுத்தர மக்களிடம் சுதந்திர உணர்வை ஊட்டுவதற்காக காந்தி  “இந்தியச் சுய ஆட்சி “ எனும் நூலை எழுதினார். இந்நூல் அன்றைய ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்டது.இந்நூலுடன் சர்வோதயம் ஓர்உலகம் தழுவிய விடிவு, சத்தியாக்கிரகத்தின் கதை, முஸ்தபா கமால் பாஷா வாழ்க்கையும் சாதனைகளும் என்கிற மூன்று நூல்களும் சேர்த்து தடை செய்யப்பட்டன.

நூல்கள்  சாகா வரம் பற்ற  பொக்கிஷங்கள் என்றார் இப்சன். “ நூல் கலையைக்கொண்டது. கலை கலகம்  செய்வது“ என்கிறார்  மெக்ஸிகோ அறிஞர் அக்டேவியொ பாஸ்..நூல்கள் பலபுரட்சிகளை தோற்றுவித்திருக்கிறது.நேரு  தன் மகளுக்கு எழுதிய  இந்தியாவின் கண்டுபிடிப்புகள் (டிஸ்கவரி ஆப் இன்டியா)நூலில் அமெரிக்க பெண் எழுத்தாளர்   ஹேரியட் பீச்சர் ஸ்டவ் எழுதிய   Uncle Tom’s cabin (கறுப்பு அடிமைகளின் கதை )எனும் நூலை மேற்கோள் காட்டிருக்கிறார். ஆபிரகாம் லிங்கன்அந்த நூலைஉள்நாட்டு யுத்தத்தை உருவாக்கி, புரட்சிச் செய்த நூல் என புகழாரம் சூட்டினார். ரஷ்யாவில் ஜார் மன்னருக்கு எதிராக மாக்சிம் கார்க்கியின் “தாய் “நூலும் ,பிரெஞ்ச் நாட்டில்  லூயி மன்னனுக்கு எதிராகஎட்வர்ட் கிப்பன் எழுதிய “ரோம சாம்ராஜ்ஜியத்தின் சீரழிவு“ நூலும் மக்களாட்சிக்கு வித்திட்ட நூல்கள் எனலாம்.

நூல்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று படித்து முடிக்கக்கூடிய புத்தகம் . மற்றொன்று படித்துக்கொண்டே இருக்க வேண்டிய புத்தகம்.இரண்டாவது வகை புத்தகம்தான் ஒரு நாட்டின் நீதி, தர்மம், கொள்ளையை நிர்ணயிக்கிறது.திருக்குறள் இரண்டாம் வகையை சார்ந்தது.இன்று திருக்குறள் பைபிள்க்கு அடுத்ததாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக இருந்துக்கொண்டிருக்கிறது. உலகப் பொதுமறை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.இந்த திருக்குறள் ஐரோப்பியகண்டங்களில் கவனிக்கப்பட காரணமாக இருந்தவர் ரஷ்ய எழுத்துலக மன்னன் டால்ஸ்டா

 உலக  நூல்களில் மரணம், பிறப்பு இரண்டிற்கும் சரியான வரையறையை கொடுத்த நூல் திருக்குறள்தான் என்கிறார் டால்ஸ்டாய். மரணம் ( உறங்கு வதுபோகும் சாக்காடு) , பிறப்பு (உறங்கி விழிப்பது போலும் பிறப்பு) .  இதை அவர் காந்தியடிகளிடம்  சொல்லி  பெருமைப்பட்டுக்கொண்டார்.  அதன்பிறகுதான்  காந்தியடிகள் தமிழ் கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தார்.

டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் எனும் நூல்உலக வரலாற்று நாவலுக்கான முன்னோடி.அது உலகத்தில் படைக்கப்பட்டுள்ள  நாவல்களில் மிகச்சிறந்த ஒன்று.இருப்பினும் அவரது படைப்பில் பெரிதும் கொண்டாடப்படுவது “ ஆறடி நிலம்“  எனும் சிறுகதைதான்.உலகின்சிறந்த பத்து சிறுகதைகளில் முதல் இடத்தை பிடித்திருக்கும் சிறுகதை அது.

நூல்கள் நாவல், கட்டுரை, விமர்சனம், கவிதை, உரைநடை, செய்யுள். இலக்கணம், நாடகம், ஹைக்கூ, நகைச்சுவை.............. என நிறைய இருந்தாலும் சிறுகதைகளே வாசகர் இடத்திலும், நூலகங்களிலும் முக்கிய இடத்தை பிடிக்கின்றன.சிறுகதையில்  உள்ள ஒரு பாத்திரம் மற்றொரு பாத்திரத்தை நல்வழி படுத்துமானால் அந்தக்கதை வாசகர்களை நல்வழிப்படுத்தும் என்கிறார் சிறுகதை மன்னர் மாப்பசான் .இதுவரையிலான சிறுகதைகளில் மிகச்சிறிய சிறுகதை  ஆங்கில எழுத்தாளரான எம். ஸ்டேன்லி எழுதிய  “ கரடி வேஷம் போட்டவன் வாழ்வில் ஒரு நாள் “ எனும் கதைதான். இரண்டு வார்த்தையில் அந்தக்கதை முடியும் . “ என்னை சுட்டுடாதே“.

வாழ்க்கையின்  அர்த்தத்தைச் சொல்வது தத்துவம், வாழ்க்கையைச் சொல்வது, அதன் ரசனையைச் சொல்வது இலக்கியம்  என்கிறார் புதுமைப்பித்தன். படைக்கப்பட்ட நூல்களில் அதிகப்பட்ச நூல்கள் தத்துவம், அறிவியல் சார்ந்த நூல்களே!கடந்த சுதந்திர தின உரையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் “செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பப்படும்“  என கூறியிருந்தார். இதன்படி  வரும் அக்டோபர் மாதம் ஒரு செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி –எக்ஸ்.எல் என்ற ராக்கெட்ட் மூலமாக அனுப்ப இருக்கிறது .இதற்கு முன்னோடியாக இருப்பது எது? எச்.ஜி.வெல்ஸ் எழுதிய உலகங்களிடையே போர் ( The war of the Worlds) எனும் செவ்வாய்க்கிரக வாசிகள் பற்றிய நூல்தான். ரஷ்யா முதன் முதலில்ஸ்புட்னிக் எனும் ஒரு விண்கலத்தை வின்வெளிக்கு அனுப்பியது .ஸ்புட்னிக் என்கிற சொல் விண்வெளி இயலின் தந்தை என அழைக்கப்படும் “கான்ஸ்டன்டைன் சியொல்ஸ்கோவ்ஸ்கி “ எழுதிய “ ஏவூர்த்தி உந்து வாகனங்களால் அண்டவெளி ஆராய்ச்சி “ என்கிறநூலில் இடம்பெற்ற ஒரு கலைச்சொல் அல்லவா!

சமீபக்காலமாக நூல் வெளியிடுவதில் முக்கிய பணியாக கொண்டுள்ளது இந்திய பல்கலைக்கழகங்கள். இதற்கு முன்னோடியாக இருந்தது  இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.1838 ஆம் ஆண்டு  அந்த பல்கலைக்கழகம் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டது.  46 ஆண்டுகள்  தொடர்ந்து முயற்சி செய்து  1884 ஆம் ஆண்டு  ஒருபகுதியை மட்டுமேவெளியிட்டது. மொத்த அகராதியும் தயாரிக்க 50 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. அதற்காக அந்தப்பல்கலைக்கழகம் 3 லட்சம் பவுன்களை செலவிட்டது. set  என்ற சொல்லின் சரியான பொருளை அமைப்பதற்கு  40 மணிநேரம்செலவிட்டது. setout  எனும் சொல்லிற்கு 51 தனிப்பொருட்களும்,  83 சொற்றொடர்களையும் அமைத்தது. அகராதி தயாரிப்பு குழுவில் இடம் பெற்றிருந்த டாக்டர் மர்ரேஆங்கில வார்த்தைகளில் set out என்கிற வார்த்தையே  மிகவும் கடினமான வார்த்தை என்றார் .

தன் வாழ்நாட்களின்  பெரும்பாதியை  அரிச்சுவடிகளை  சேகரித்து நூல் வடிவமாக்க செலவிட்டார் உ.வே. சாமிநாத அய்யர். தன்  வாழ்நாட்கள் முழுமையையும் புத்தகம் படிப்பதற்கென்றே செலவிட்டார் அண்ணல் அம்பேட்கர். உலகின் மிகப்பெரிய நூலகத்தை உருவாக்க முயற்சித்தார்  ஸ்டாலின். நூல் படைப்பவர்களுக்கு உதவி செய்து தனது செல்வத்தை கரைத்துக்கொண்டார் பிரெஞ்ச் இளவரசி சோபியா மேரி.கார்ல் மார்க்ஸ் மூலதனம் படைக்க  பக்கப்பலமாக இருந்தார் பிரடெரிக் ஏங்கல்ஸ்.போர் புரிந்த இடங்கிளில்  ஒரு நூலக அரிச்சுவடியை உருவாக்கி வந்தார் அலெக்ஸாண்டர்.  போர் புரிந்த இடங்களில் நூலகத்தை தவிர மற்ற இடங்களை சிதைத்தார் மாவீரன் நெப்போலியன்.உலகம் அழிந்தாலும் நூல்கள் அழியாமல் இருக்க பாதாளத்திற்குள் நூலகம் அமைத்திருக்கிறது ஆஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழகம். 

ஆசியா நூலகங்களில் முன்னோடி தஞ்சாவூர் சரபோஜி நூலகம்.இத்தகைய சாதனைக்களுக்கிடையில்நூல்களுக்குஎதிரானநடவடிக்கைளும்இங்குநிகழ்ந்திருக்கிறது.அதில் மிகவும் வெட்கக்கேடான நிகழ்வு ,இரண்டாம் உலகப்போர் காலங்களில் ஹிட்லர் ஆதரவாளர்கள்புத்தகங்களைகொழுத்துவதைஒருவிழாவாககொண்டாடினார்கள். 1981ஆம்ஆண்டுபலநூற்றாண்டுதலைமுறைகொண்டயாழ்ப்பானநூலகத்தைசிங்களர்கள்தீக்கிரையாக்கினார்கள்.ஏன்இத்தகைய நிகழ்வு நிகழ்ந்தது..........? நூல் ,கலகம் செய்வது. உண்மையை  இயம்புவது , தலைமுறையை தாங்கிப்பிடிப்பது, கலாச்சாரத்தைதலைமுறைகளுக்கு கடத்துவது…..

ஒரு நூலைக்கொண்டு ஒரு ஆட்சியை  அழித்து ,மற்றொரு ஆட்சியை நிலைநாட்டிட முடியும். ஆப்பிரிக்க நாடுகளில் உலவும்பிரசித்திப்பெற்றகவிதை இது. ஒருகாலத்தில் இந்த நிலங்கள் எம்மிடம் /பைபிள் அவர்களிடம்  /இன்று பைபிள்எம்மிடம் /நிலங்கள்அவர்களிடம்...................../.

Pin It