[குறிப்பு: இது காமராசரின் [1903-1975] 109 ஆவது பிறந்த ஆண்டு. இவர் காங்கிரஸ் காராக , இந்திய தேசியவாதியாக வாழ்ந்தவர். எனினும் உண்மையான காந்தியவாதியாகத் திகழ்ந்தவர். இவரது இந்திய தேசியத்தால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் பல. என்றாலும் ஏழை எளிய மக்கள்பால் அவர் கொண்டிருந்த அன்பு, கல்வியின்பால் அவர் கொண்டிருந்த அக்கறை, பொது வாழ்வில் அவர் கடைப்பிடித்த நேர்மை. கட்டுப்பாடு, தன்னலமற்ற அர்ப்பணிப்பு ஆகியன இன்றைய தன்னலவாத அரசியல்வாதிகளை நோக்க பெரிதும் மதித்துப் போற்றத் தக்கவை ,மற்றோரும் பின்பற்றிக் கடைப்பிடிக்கத்தக்கவை. இந்நோக்கில் இன்றைய இளைய தலைமுறை அவரைப் பற்றி ஓரளவேனும் தெரிந்துகொள்ளும் வாகையில் அவரது வாழ்வில் நடைபெற்ற ஒருசில நிகழ்வுகள் இஙகு நினைவு கூரப்படுகின்றன.]
நெடியஉருவம், கூப்பிய கைகள் ,கருத்த தோற்றம், கள்ளமில்லா புன்னகை, மக்களோடு மக்களாய், பந்தா எதுவுமின்றி, தலைவனாய் உயர்ந்தபோது,மக்களின் விழிகள், வியப்பால் விரிந்தன.
தேச விடுதலைக்காக இளமையைத் தொலைத்தாய், ஒன் பது ஆண்டுகாலம் சிறையில் கழித்தாய், முதல்வர் பதவியில் ஒன்பது ஆண்டு காலம்..! பற்றற்ற நிலையிலேயே எப்போதும் உன் மனநிலை, பதவிவந்தபின்பும்எளிமையாய் வாழ்ந்தாய், கடமையே பெரிதென கர்ம வீரராய்த் திகழ்ந்தாய், வாழ்ந்த வரைக்கும் வரலாறு படைத்தாய் வாடகை வீட்டிலேயே வாழ்நாளைக் கழித்தாய்
உன் பேச்சில் அடுக்குமொழி இல்லை!எதுகை மோனை இல்லை!உண்மை மட்டுமே இயல்பாய் இருந்தது,மக்களின் தேவையை அறிந்தாய். மகத்தான மாற்றங்களைச் செய்தாய் மாற்றார் போற்றும் திட்டங்களை வகுத்தாய் ஆறுகளின் குறுக்கே அணைகளை அமைத்தாய் நாடு நகரெங்கும் தொழிலகம் தொடங்கினாய் முன்னு£று மக்களுக்கு ஒரு பள்ளி திறந்தாய்,இருளிலிருந்த கிராமங்களில் மின்னொளியை ஏற்படுத்தினாய் கல்லூரி வரையிலும் தாய்மொழிக் கல்வியைத் தரமாக அளித்தாய் தமிழ்மொழி வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் கொடுத்தாய் தமிழகமெங்கும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினாய்எஉன் வாழ்க்கையில் அன்புக்கும் எளிமைக் கும்தான்எடுத்துக்காட்டுகள் எத்தனை! எத்தனை!
தாம்பரத்தில் பள்ளி விழா தொகுதி சட்டமன்ற உறுப் பினர் ஜீவா. தோழரை அழைத்துச் செல்ல வாசலில் முதல்வரின் கார் கடிகாரமுள் வினாடிகளை விழுங்கியது என்ன? இவ்வளவு நேரம்? குடிசையின் மறு பகுதிக்குச் சென்றாய். அங்கே ஜீவா.. வேட்டியை மரத்தில் கட்டி உலர்த்திக் கொண் டிருந்தார். ஒரே ஒரு வேட்டிதான் உள்ளதா? என்னைக் கேட்டால் வாங்கித் தர மாட்டேனா? சீக்கிரம் வா.......! வெளியே வந்து உன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாய்
நடுநிசி தொலைபேசியின் அலறல். யார் இந்த நேரத்தில்..திடுக்கிட்டு விழித்தாய். மறு முனையில் ஜீவா! இடிபோல கர்ஜனை“எம் பகுதியில் குடிசைகள் அகற்றப்படு கின்றன.தடுத்து நிறுத்து!உடனே நடவடிக்கை எடுக்க ஆணையிடு சொன்னார் ஜீவா. சரி, நீ போய் நிம்மதியாய் தூங்கு! காலையில் பேசிக்கொள்ளலாம் என்றாய். சரி,சரி, பதிலுக்கு ஜீவா வும் உனக்கு இடையூறு தந்திட்டேன் நீயும் தூங்கு என்றார்.
விழா மேடை.. அருகே உன் அன்புத் தொண்டர்! உனக்கு வந்த துண்டுகளை மடித்து மடித்து ஓரமாய் வைத்தார்‘ பளிச்சென்று ஒரு துண்டு’ அவரை சலனப்படுத்தியது. சட்டென்று அதைத் தனியே வைத்தார் முடிவுறும் வேளையில் அந்தத் துண்டை ‘தன் பையில் வைத்துக் கொண்டார். ஓரக் கண்ணால் இக்காட்சியை உள் வாங்கிக் கொண்டாய்!மறு நாள் காலை அன்புத்தொண்டரைஅழைத்தாய்!எடுய்யா! துண்டை.!எடுத்துத் தந்தார். அந்த துண்டு. ‘பாலமந்திர் செல்லும் கட்டுக்குள்’ சென்றது உன் அன்புத் தொண்டரின்‘துண்டு’ ஆசையைக் கூட துண்டித்து விட்டாயே. ஏன்? ‘ஆசை’மனிதனை வழுக்கிவிடும் பாசி என்பதாலா?
விருதுநகரில் மணவிழா , வீட்டில் மகிழ்ச்சி, நாள்தோறும் உறவினர் கூட்டம். உன் தாய்க்கு எல்லையில்லா பூரிப்பு. உறவினர்களை உபசரித்தவாறே சிவகாமி அம்மாளின் அறிவு சிந்தித்தது பத்து நாளைக்கு நம்ம உறவுக்காரங்க தங்கிச் செல்ல... நம் வீட்டுல பாத்ரூம். கழிப்பிடமும் போதுமானதாக இல்லியே! பக்கத்து காலி ம¬னையை வாங்கினா ரெண்டையும் சேர்த்துக் கட்டிடலாமே...காமராசரின் காதுக்குச் செய்தி வந்தது! உதவியாளரிடம் சீறினார். காமராசர் வாங்கியுள்ள காலிமனையைப் பாரு.இதில் கட்ட போகும் பங்களா இதுவென பத்திரிக்கைக்காரன் படம் போடுவான்.நம்ம வீட்டில இருக்கிற வசதி போதும்போ.......பணமெல்லாம் இல்லை.தாயின் ஆசைக்கு தடை போட்டாய்!
காமராசரே உன்னைப் பெற்ற தாய் வாழும் வீட்டிக்கு குடிநீர் இணைப்பை வழங்கியது விருதுநகர் நகராட்சி.வீட்டுக்கு நீ வந்ததும் குடிநீர் இணைப்பைத் துண்டிக்கச் செய்தாய்!தெருவில் மையமான இடத்தில் போடச் செய்தாய்!தன் வீட்டுக்குத் தனியாக ஏன் குடிநீர் இணைப்பு.மற்றவர்களோடு சேர்ந்து தன் குடும்பத்தாரும் தண்ணீர்பிடித்துக் கொள்ளட்டும் என்று அறிவுரை வழங்கினாய்!
பேரன் கனகவேல் கையில் விண்ணப்பம் வாங்கிப் பார்த்தாய் அதிர்ச்சியுற்றாய்..!என்ன இது சென்னையில். என் வீட்டு முகவரியைப் போட்டுள்ளாய்? அதுவும் மருத்துவ படிப்புக்கு சேர்க்கை விண்ணப்பத்தில்.பேரன் ‘சென்னையில் நீங்கள்மட்டும் எனக்குத் தெரிந்த உறவு என்றார். இது கூட ஒரு வகை சிபாரிசு ஆகிவிடுமே. அஞ்சினாய். என் பெயரை நீக்கி விடு! உன் தகுதி அடிப்படையில் போட்டியிடு! நான் எதற்கும் சிபாரிசு செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டாய்
நாட்டு விடுதலைக்காக இருட்டுக் கொட்டடியில் நீ! இன்றோ? நாளையோ? அப்பச்சியின் (பாட்டியின்) உயிர் கேள்விக் குறியானது.பிணையில் என் பேரனை அழைத்து வா...! துடிதுடித்து பாட்டியின் உயிர்! என்றைக்கு என்னை வெள்ளையன் விடுவிக்கின்றானோ அன்றுதான்வெளியில் வருவேன் என்று மறுத்துவிட்டாய். கால தூதன் உன் கடமையுணர்ச்சியைச் கண்டு..அப்பச்சியின்உயிருக்குக்காலநீட்டிப்பு தந்தான்...பெண்டுல ஆட்டம் போல ஊசலாடியஉயிர்.உன்னைக் கண்டதும் ‘காமராசா’. என் செல்லமே என்று முணுமுணுத்தது. பாசத்தோடு அப்பச்சி என்று அழுது அரற்றினாய்! உனக்காகவே ஏங்கி காத்திருந்த உயிர்.... உன் புனிதக்கரம் தீண்டியவுடன். விடைபெற்றது.
ஒருநாள் தங்கை மகன், புத்தம் புதிய காரில், இவனுக்கு ஏது கார்? கார் வாங்க இவனிடம் வசதியில்லையே..!யோசித்தாய். உடனே கார் கம்பெனிக்கு தொலைபேசியில் பேசினாய்! உங்கள் கார் கம்பெனியின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளேன்.நிர்வாகம் அலறியது .‘நன்றிக் கடன்’ என்று கூறியது ‘அன்பளிப்பு’ என்று கெஞ்சியது‘ரத்து செய்த ஆணையை திரும்பப் பெற முடியாது’- என்று உறுதியாய்க் கூறினாய் தொழில் அதிபர் ஓடிவந்தார் மன்னித்து விடுங்கய்யா என்று உள்ளம் உருக.... வேண்டி நின்றார்.‘கையூட்டுக்காரை ’ எடுத்துச் செல் போ....! மன்னிக் கிறேன் என்றாய்.
கட்சியின் வரவு செலவிலும் கறார் நீ தனுஷ்கோடி.......! என்ன இது!அறுபத்தேழு ரூபாய்க்கு கணக்கு எங்கே?என்னது......? செலவு ஞாபகம்வரலியா....? அத நான் தள்ளுபடி பண்ணி ஒப்புதல் அளிக்கணுமா?முடியாது என்று மறுத்துவிட்டாய்.
தலையைச் சொரிந்து நின்றார்தனுஷ்கோடி! உன் அணுக்கத் தொண்டர் சரி! அரை மணி நேரம் உனக்கு டைம் தருகிறேன்......! ஞாபகப்படுத்தி கணக்கை எழுதி ஒப்புதல் வாங்கு. இல்லா விட்டால் உன் பையிலிருந்து ரூபா அறுபத்தேழை போட்டுக் கட்டி விடு.... என்று உறுதியோடு கூறிவிட்டாய்.
குமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் உச்சி வெயில் தகித்தது! டிரைவர் காரை அந்த குடிசையின் ஓரத்தில் நிறுத்து.! இறங்கினாய்.ஓலைக் கொட்டகை, ஓரத் திண்ணை, உரிமையாய் அமர்ந்தாய். அதிர்ச்சியில் மக்கள். ‘தலைவரு’ நம்ம குடிசையிலா....! வீட்டுக்குள் பரபரப்பு. அம்மாகொஞ்சம் நீச்சத்தண்ணி இருந்தா கொடும்மா. கஞ்சிக் கலயத்தை வாங்கிக் குடித்தாய் . அப்பா! வெயிலுக்கு இந்த தண்ணீர்தான் இதம், நன்றி கூறி விடை பெற கும்பல் கூடியது தலைவருன்னா இவருதான் “ மக்கள் தலைவருன்னு ” பேசி மகிழ்ந்தது.
அழைப்பு மணி.....ஒலித்தது.!மலாய் நாட்டு அரசாங்கம்... தலைவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தது.அந்நாட்டு ‘காமராசரின் தொண்டர் வேங்கடராசுலு’ பேசினார். ஐயா நான் எல்லா ஏற்பாடும் செய்திருக்கிறேன். மறுநாள் மலாய் நாட்டு ஆங்கில ஆளுநருடன் சந்திப்பு மகிழ்ச்சி நான் வந்து டுறேன். ஐயா, மீண்டும் பணிவாகத் தொண்டரின் குரல் ஆங்கில ஆளுநருடன் சந்திக்க மேற்கத்திய உடையோடு வந்தால்தான்¢ மரியாதையா இருக்கும்.சரி! சரி! அதெல்லாம் அங்க வந்த பெறகு பார்த்துக்கலாம், மலாய் வந்து இறங்கினார். தலைவர் வேங்கடராசுலு மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.ஐயா. நாளைக்கு ஆங்கிய ஆளுநர் மிஸ்டர் டெம்ப்ளரை ச்சந்திக்கணும் பொழுது விடிந்தது. ஆங்கிலஆளுநரை சந்திக்க கதர் உடையோடு நின்றிருந்தார் காமராசர். ‘வேங்கடராசு...... என்ன போகலாமா?’தொண்டருக்குத் தயக்கம்.? “தலைவரின் பிடிவாதம்”. “ஆங்கில ஆளுநர் பேசுவாரா?” ஏதோ ஐயம் .ஆங்கில ஆளுநர் காமராசரை வியப்புடன் நோக்கினார் ரியலி இன்டியன் கிங் மேக்கர் இருவரும் ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கினர் இரண்டரை மணி நேரம் உரையாடல் காமராசர் எளிமையின் சின்னம் என்று வியந்து பாராட்டினார் ஆங்கில கவர்னர்.
தஞ்சைத் தரணியில் சுற்றுப் பயணம், உன்னையே தன் மூச்சுக் காற்றாய் சுவாசிக்கும் சுப்பையா, ‘ஐயா நாளைக்கு எங்கள் வீட்டில் மணிவிழா நீங்க வந்து ஆசிர்வதிக்கணும்’ பணிவாய் வேண்டுதல், சற்றுக் கடுப்பாய் நீ, அதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை பாக்கலாம்! மறுநாள் காலையில் சுப்பைய்யா வீட்டுக்கு முன் உன் கார் , தொண்டருக்கு ஒன்றும் புரியவில்லை வெற்றிலைப் பாக்குத் தட்டு சந்தன பேலா தடுமாறி கீழே விழ ஐயா என்னய்யா சொல்லாம, கொள்ளாம இப்படி வந்துட்டீங்களே! மேள தாளத்தோடு கௌரவாக வரவேற்க முடியலியே பதைபதைப்பாய் சுப்பைய்யா. ஆமாய்யா நேத்திக்கு நா வரேன்னு உங்ககிட்டச் சொல்லி இருந்தா கடனவுடன வாங்கி. கையிலுள்ள காசையெல்லாம் கரைச்சிருப்பே. உன் அன்பு எனக்கு புரியும். அதான் திடீர்னு வந்தேன். “மணமக்களை அழைத்து வாழ்த்தி விடை பெற்றாய். ஏழை சுப்பையாவின் உள்ளத்தில். மனித தெய்வமாய்’ மாறி வாழ்ந்தாய்!
இப்படி எண்ணற்ற நிகழ்வுகள் எத்தனையோ உன் வாழ்வில். நீ மறந்தாலும் மக்களின் நினைவுகளில் மறவா அந்நிகழ்வுகள். பொது வாழ்வின் இலக்கணமாய் அமைந்திட்ட உன் வாழ்வு, உன் பேர் சொல்லும் எந்நாளும். புகழ் மணக்கும் நாள்தோறும்.