அரசுத் துறைகளானாலும் சரி தனியார் துறைகளானாலும் சரி, அதிகாரம் உடைய, மிகுந்த ஊதியம் தரும், உடலுழைப்பு தேவைப்படாத, நாட்டின் அனைத்து வேலைகளிலும் பார்ப்பனர்கள் நிரம்பி வழிகின்றனர். அவர்கள் அனைவரும் திறமைசாலிகள் என்பதால் அப்படி முடிகிறதா? நிச்சயமாக இல்லை. பார்ப்பன அரசு எந்திரத்தின் அயோக்கியத்தனமான செயல்பாடுகள் தான் பார்ப்பனர்கள் உயர்நிலைகளுக்குச் செல்வதற்கும், அங்கேயே நிலைகொண்டு இருப்பதற்கும் அடிப்படையாக இருக்கின்றன. எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீட்டின் மூலம் வெற்றி பெற்று உயர் நிலைகளுக்குச் சென்றிருக்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் பார்ப்பனர்களை விடத் திறமைசாலிகள் என்று காலப் போக்கில் ஐயந் திரிபற மெய்ப்பித்து இருக்கிறார்கள்.
 
     ஆனால் பார்ப்பனர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இருப்பதால், தங்களுடைய உரிமை பாதிக்கப்படுகிறது என்றும் தங்களிடையே உள்ள திறமைசாலிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றும் தங்களை விடத் திறமை குறைவான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுகிறார்கள் என்றும் நேரம் கிடைத்த பொழுதெல்லாம் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். ஒடுக்கப்பட்ட மக்களில் மிகப் பலருக்கு உண்மை நிலவரங்கள் சரியாகத் தெரியாத நிலையில், பார்ப்பனர்களின் புலம்பல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒரு கருத்துப் பரவலாக அமைந்து விடுகிறது.
 
     பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்கள் இருப்பார்களே! அப்படிப்பட்ட திறமைக் குறைவான பார்ப்பனர்களும், அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த தொழில்களைச் செய்வதில் இருந்து தப்பி, சொகுசான வேலைகளுக்குச் சென்று நிலைகொள்ளவும் முடிகிறதே? இது எப்படி முடிகிறது என்று கேட்டால், தங்கள் புலம்பல்களை திடுதிப்பென்று நிறுத்தி விட்டு, வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் பார்ப்பனர்களுக்கு எதிரான வினாக்களைச் சரியாகத் தொடுப்பவர்கள் இல்லை என்றால், அங்கே அவர்களது புலம்பலை - அதாவது பொய்ப் பிரச்சாரத்தை எடுத்து விடத் தவறுவது இல்லை. ஏனெனில் பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் ஏற்படுத்தும் கருத்துப் பரவல் தான் தங்களுடைய ஆதிக்கத்தின் உயிர்நாடி என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்து இருக்கின்றனர்.
 
     தன்னந்தனியாகவே துணிச்சலுடன் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், தங்களுக்குச் சார்பான நிறுவனங்கள் மூலம் செய்யாமல் இருப்பார்களா? அப்படிப்பட்ட ஒரு செயலைத் தான் இந்திய தொழில்களின் கூட்டமைப்பு (Confederation of Indian Industry) என்ற இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பு, ப்ரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (Pricewaterhouse Coopers) என்ற நிறுவனத்துடன் இணைந்து செய்திருக்கிறது. இந்நிறுவனங்கள் நாளைய உழைப்போரை (இன்றைய மாணவர்கள்) மேலாண்மை செய்தல் என்பதைப் பற்றி ஆய்வு செய்தனவாம். அந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளை 16.9.2011 அன்று சென்னையில் அவர்கள் வெளியிட்டனர்.
 
     நாளைய உழைக்கும் கூட்டத்தினர் (அதாவது இன்றைய மாணவர்கள்) ஒரே மாதிரியான வேலையைச் செய்வதை விரும்பவில்லை என்றும், பல தரப்பட்ட வேலைகளைச் செய்ய விரும்புவதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
    அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்தும் படித்தும் அனுபவம் பெற்று இந்தியாவிற்குத் திரும்பி வரவே விரும்புகின்றனர் என்றும், வெளிநாட்டிலேயே தங்க விரும்வவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
 
     அவர்கள் தங்களுக்கு வேலை தருபவர்கள் மீது விசுவாசமாக இருப்பது, அவர் தங்களுக்கு அளிக்கும் மன நிறைவின் அடிப்படையில்தான் இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
 
     முத்தாய்ப்பாக இந்த ஆய்வை மேற்கொண்டதன் உண்மையான நோக்கம் வெளியிடப்பட்டு உள்ளது. தங்களை விடத் திறமை குறைந்தோரைப் பணிக்கு எடுத்துக் கொள்வதும், அவர்களுக்குப் பதவி உயர்வு அளிப்பதும் தங்களுக்குப் பிடிக்காது என்றும் அப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு விசுவாசமாக இருக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.
 
     அதாவது உயர்நிலைப் பணிகளில் பார்ப்பனர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றும் அதை மீறி ஒடுக்கப்பட்ட மக்களிடம் திறமை இருக்கிறது என்பதற்காக அவர்களுக்கு உயர்நிலை வேலைகளைக் கொடுத்து விடக் கூடாது என்றும், அப்படிக் கொடுத்தால் அந்நிறுவனங்களைப் பாழடித்து விடுவோம் என்றும் இந்த ஆய்வின் மூலம் மிரட்டலை விடுத்து இருக்கிறார்கள். தனியார் நிறுவனங்களில் திறமை இல்லாதோர் நிலைத்து இருக்க முடியாது என்று கூப்பாடு போடும் பார்ப்பனர்கள், திறமை இல்லாதவர்களுக்கு வேலை கொடுப்பதும், அவர்களுக்குப் பதவி உயர்வு கொடுப்பதும் தங்களுக்குப் பிடிக்காது; அப்படிப்பட்ட நிறுவனங்கள் மீது விசுவாச‌மாக இருக்க மாட்டோம் என்று கூற வேண்டிய அவசியம் என்ன?
 
     உண்மையில் இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் பார்ப்பனர்களை விடத் திறமைசாலிகள் என்று தொடர்ந்து மெய்ப்பித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து, கதிகலங்கிப் போயிருக்கும் பார்ப்பனர்கள், ஆய்வு என்ற போர்வையில் புகுந்து கொண்டு, இப்படிப் பட்ட ஒரு கொடூரமான மிரட்டலை விடுத்து இருக்கிறார்கள்.
 
     ஒடுக்கப்பட்ட மக்களே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடுவதைத் தடுத்தே தீர வேண்டும் என்ற விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் ஏற்படுத்த வேண்டாமா? நாம் இந்தத் திசையில் செயல்படாமல் இருந்தால் பார்ப்பனர்களின் பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப்படாமலேயே போய்விடும் அல்லவா?
 
     திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் அமர்வதால், நிர்வாகம் சீர்கெட்டுப் போகிறதே! இது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் தேசத் துரோகச் செயல் அல்லவா? திறமைக் குறைவான பார்ப்பனர்களைக் கீழ் நிலை வேலைகளுக்கு அனுப்பாமல் உயர்நிலைகளில் பாதுகாத்து வைத்துக் கொள்ளும் மற்ற பார்ப்பனர்கள் நிர்வாகச் சீர்கேடுகளுக்குத் துணை போகும் தேசத் துரோகிகள் அல்லவா? அப்படிப்பட்டவர்கள் உயர்நிலைகளில் இருப்பதும் தேசத்திற்குப் பெரிய அபாயம் அல்லவா?
 
     இந்நிலையில் மண்ணின் மைந்தர்களாகிய நம் கடமை என்ன?
 
     திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி விடக் கூடாது என்றும் இதற்கு ஒத்துழைக்காத மற்ற பார்ப்பனர்கள் அப்படிப்பட்ட தேசத் துரோகக் குற்றத்திற்காகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் ஏற்படுத்த வேண்டும். பார்ப்பனர்கள் நமக்கு எதிராகப் பயங்கரமான சதித் திட்டம் போட்டுக் கொண்டு இருக்கும் பொழுது நாம் தூங்கிக் கொண்டு இருப்பது நம் இந்திய நாட்டிற்கும் நம் குழந்தைகளுக்கும் நாம் செய்யும் கொடூரமான துரோகம் ஆகும். நம் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் நம் சந்ததிகளின் அடிப்படை உரிமைகளுக்காகவும் நாம் இதைச் செய்தே ஆக வேண்டும்.

- இராமியா

Pin It