பார்ப்பனிய ஆதிக்கத்தைப் பற்றிச் சாமானிய மக்களிடமும் கொண்டு சென்று மகத்தான வெற்றி பெற்ற மாபெரும் புரட்சியாளர் தந்தை பெரியார்!

பெரியார் கருத்துகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவையே! இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டும்

‘தில்லி பார்வேர்டு பிரஸ்’ இதழின் படப்பிடிப்பு

“பார்ப்பனிய ஆதிக்கத்தைப் பற்றிச் சாதாரண மக்களிடமும் கொண்டு சென்று மிகப்பெரிய வெற்றி யை ஈட்டியவர் தந்தை பெரியார்; அவர் கொள்கைகள் இன்றைக்கும் தேவையே; இந்தியா முழுமையும் கொண்டுசெல்ல வேண்டும், என்று, தில்லியிலிருந்து மாதம் இருமுறை இந்தி, ஆங்கிலம் இருமொழிகளிலும் வெளிவரும் ‘Forward Press’ ஏடு 2015 சூன் இதழில் ஆய்வு நோக்கோடு எழுதியுள்ளது.

அதிகரித்துவரும் இந்துத்துவ வெறி, வர்ணபேதம், அரசியலில் புகுந்துவிட்ட காவிக்கொள்கைகளின் தாக்கத்தால் நடுநிலை வகிக்கும் மக்களும், சமூக அமைதியை விரும்பும் மக்களும் தற்போது பாபாசா கேப் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு சோசலிசக் கொள்கைகளை உயிர்மூச்சாகக் கொண்டு தூய நாத்திகனாகத் திகழ்ந்த பகத்சிங் போன்றோரின் கருத்து களை மீண்டும் புதுப்பிக்க வேண்டிய காலத்தை உணர்ந்துள்ளனர்.

இந்தியாவில் நீண்ட நெடுங்காலமாக மதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு சாதி பேதத்தை உரு வாக்கி அதன் மூலம் மக்களை, ஒரு பிரிவினர் துண் டாடி, தங்கள் பிழைப்பை நடத்தி வந்தனர். இதனால் கடந்த நூற்றாண்டு வரை, இந்தியாவில் சமூக ஒற்று மை இல்லாமலிருந்தது. அடிமைத்தனமே சாதிரீதியாக மேலோங்கி இருந்தது. இவற்றை எல்லாம் கண்டு பொங்கி எழுந்து, சமூக நீதியை மீட்டுக் கொடுத்தவர் களில் பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா புலே போன் றோருடன் தென் இந்தியாவில் புகழ் பெற்ற ஈ.வெ. இராமசாமி என்ற பெயர் கொண்ட தந்தை பெரியாரும் முக்கியமானவர்.

வடஇந்தியாவில் மிகவும் குறைந்த அளவு மக்களே ஈ.வெ. இராமசாமி என்ற பெரியாரை அறிந்துள்ளனர். தென்இந்தியாவில் தந்தை பெரியார் என்ற பெயரை மக்கள் அதிகம் அறிந்திருக்கின்றனர். பெரியார் தென் இந்தியாவில் திராவிடர் கழகத்தை உருவாக்கியவர். திராவிடர் கழகத்தின் மூலம் பார்ப்பனரல்லாத மக் களை ஒன்றிணைத்தவர். சமூகத்தில் நிலவிவந்த சாதி பேதம், சமூகக் கொடுமை, பெண்ணடிமை போன்ற வற்றைத் துணித்து நின்று எதிர்த்தவர். அக்கால கட்டத்தில் சாதிய வாதம் வேர்விட்டுத் தனது கொடிய நச்சுக் கிளைகளைப் பரப்பிய வேளையில் பெரி யாரின் பணி தொடங்கியது.

சுயமரியாதை என்னும் ஆயுதம்

பெரியாரின் முதல் வேலை, நச்சுக் கிளைகளைப் பரப்பி வந்த சாதிபேத மரத்தின் வேரை வெட்டி எரித்துப் பொசுக்க வேண்டிய கட்டாயமிருந்தது. அது அவ்வளவு எளிதான வேலையில்லை. தனது வீட்டில் இருந்து ஆரம்பித்து, தனது ஊர், நகரம், மாவட்டம் என நீண்ட பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டி இருந்தது. பெரியார், சுயமரியாதை என்னும் ஆயுதத் தைக் கையிலெடுத்தார்; அவர் கூறினார் : ‘ஒருவன் தனக்கு எவ்வளவு மரியாதையை எதிர்பார்க்கிறானோ அதையே மற்றவருக்கும் கொடுக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும், சுயமரியாதை இயக்கம் ஒரு புரட்சிகர இயக்கமாகும், சமூகநீதி என்பது உட்கார்ந்து தன்னுடைய எசமானர்களிடம் கெஞ்சிப் பேசிப் பெறும் ஊதியம் கிடையாது. புரட்சியால், மலரவேண்டிய மாற்றம்’ என்று பெரியார் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது : உலகில் திருத்த முடியாதவை மிகச்சிலவே. அதில் முக்கியமானவை பார்ப்பனச் சித்தாந்தம் - அவர்கள் கொடுத்த இந்து மதம் என்று அடித்துக் கூறினார். உண்மையைச் சொல்ல அவர் எந்த இடத்திலும் தயங்கவில்லை. அதேநேரத் தில் தான் கூறியதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

அரசியல் விழிப்புணர்வு

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியா முழுவதும் அரசியல் விழிப்புணர்வு, சமூக நீதிப் போராட்டம் நிறைந்திருந்தது. எந்த இடத்திலும் பார்ப்ப னர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. 1870 முதல் 1900 வரை கல்லூரியில் படித்து வெளிவரும் மாணவர்களில் 80 விழுக்காடு பேர் பார்ப்பனர்களே இருந்தனர். மீதமுள்ளவர்களில் உயர் சாதியினர் ஆக்கிரமித்திருந்தனர். ஆனால் சுதந்தரப் போராட்டத் தில் பார்ப்பனர்களின் பங்கு 3 விழுக்காடு மாத்திரமே இருந்தது.

1912ஆம் ஆண்டில் 55 விழுக்காடு துணை மாவட்ட ஆட்சியாளர்கள், 82 விழுக்காடு நீதிபதிகள், 72 விழுக்காடு நகர நிர்வாக அதிகாரிகள் பதவியில் பார்ப்பனர்களே நிறைந்திருந்தனர். ஆனால் சமூகத் தில் பார்ப்பனரல்லாதார் மிகவும் அதிகமாக இருந்த னர். அதேபோல் 80 விழுக்காடு பார்ப்பனர்கள் ஆங்கில வழிக் கல்வி கற்று ஆங்கிலேய அரசாங்கத்தில் பெரும் பான்மையான பதவிகளைப் பெற்றிருந்தனர்.

இந்த நேரத்தில் பெரியார் தனது இயக்கத்தின் மூலம் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் கல்வி முதல் எல்லாப் பதவிகளிலும் இடஒதுக்கீடு வேண்டுமென்ற போராட்டத்தில் இறங்கினார். போராட்டத்தின் அதிர்வு ஆங்கிலேய அரசாங்கத்தை அசைத்துப் பார்த்தது. இதன் விளைவாக 1928ஆம் ஆண்டு மதராசு மாகாணத்தில் (தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, தெற்குக் கர்நாடகா, கேரளா அடங்கிய பகுதி) இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது. இந்தியாவில் முதன்முதலாகச் சமூகநீதிக்கான ஒரு போராட்டம் வெற்றிப் பாதையைத் திறந்து வைத்தது.

பெரியாரால் திறந்து வைக்கப்பட்ட அந்த வெற்றிப் பாதை!

பெரியாரால் திறந்து வைக்கப்பட்ட, அந்த வெற்றிப் பாதையில் வீரநடைபோட்டுப் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்றுதிரண்டு தங்கள் உரிமைக்காகப் பெரியார் தலைமையில் போராட ஆரம்பித்தனர். இதன் விளை வாக இந்தியாவெங்கும் சமூகநீதிக்கான போராட்டம் பற்றிக் கொண்டது. அரசுகள் வேறு வழியின்றிப் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையை வகுக்க முன்வந்தது. பெரியார் எந்த ஒரு இடத்திலும் தம் மக்களுக்கான உரிமையை மீட்டுத்தரப் பின்வாங்கியதில்லை. பெரியார் தீவிர கடவுள் மறுப்பாளர். தான் கடவுள் மறுப்பாளராக இருப்பினும் கோவில்களில் பூசைசெய்யும் உரிமை யைப் பார்ப்பனர்கள் மட்டும் வைத்திருப்பதைக் கடுமை யாக எதிர்த்தார். பார்ப்பனரல்லாதவர்களும் கருவறைக் குள் சென்று பூசை செய்யும் உரிமை வேண்டும் என்று கோரி இறுதிமூச்சு வரை போராடினார்.

இந்து மதத்தில் உள்ள வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்றவை தான் சாதிபேத முறையைப் பரப்பும் முக்கியக் கருவிகள் என்பதை அறிந்துகொண்ட பெரியார், அந்தப் புராணப்புரட்டு நூல்களில் புதைந் துள்ள மோசடிகளை மக்களிடையே கொண்டு சென் றார். பெரியார் மற்றும் திராவிடர் கழகம் இந்த நூல் களில் மறைந்துள்ள பிரிவினைவாதக் கருத்துக்களைச் சாமானிய மக்கள் வரை கொண்டு சேர்த்தனர். மக்களிடையே சிந்திக்கும் ஆற்றலை ஏற்படுத்தும் இராமாயணப் புரட்டு என்ற நூலையே திராவிடர் கழகம் வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டியது, பெரியார், ஆரியர்களுக்கும் திராவிடர்களுக் கும் நடந்த போராட்டமே இராமாயணக் கதையாக மாற்றப்பட்டது என்று அடித்துக் கூறினார். பிற்காலத் தில் பல்வேறு ஆய்வுகளின் மூலம் பெரியாரின் கூற்று உண்மை என நிரூபிக்கப்பட்டது.

இராவணக் காவியம்

இராவணனே இராமாயண நாயகன் என்று திராவிடர் கழகம் மக்களிடையே கொண்டு சென்றது; இதற்காகப் பல நூல்கள் வெளிவந்தன. அதில் ‘இராவணக் காவியம்” என்ற நூலும் முக்கியமானதாகும். திராவிடர் கழகம் குறித்து ஆய்வு செய்த எம்.எஸ்.எஸ். பாண்டியன் கூறும் போது, “திராவிடர் கழகம் இராவணனை திராவிடர்களின் நாயகனாக மக்களிடையே சித்திரித்தது. ஆரியர்களால் மறைத்து எழுதப்பட்ட இராவணனின் உண்மையான குணநலன்களை இராவணக் காவி யத்தில் வெளிக்கொணர்ந்திருந்தது. அதேபோல் இராமனின் அயோக்கியத்தனத்தையும் மக்களிடையே பரப்பினர் (புலவர் குழந்தையால் எழுதப்பட்டது இராவணக் காவியம்).”

பெரியார் மூடத்தனம், மதத்தின் பெயரால் நடை பெறும் மூடநம்பிக்கைச் செயல்கள் மற்றும் மதநம்பிக்கை களைக் கடுமையாக எதிர்த்தார். அதேநேரத்தில் நவீன அறிவியல் குறித்து ஆர்வத்துடன் பல்வேறு கருத்து களை மக்களிடையே வைத்தார். மக்களின் உழைப் பால் வந்த பணத்தை மதநம்பிக்கையின் பெயரால் வீணாக்குவதைக் கடுமையாக எதிர்த்தார். பெரியார் தனது கருத்துகளை சாமான்ய மக்களிடையிலே எளிமையாகக் கொண்டுசேர்க்கும் வகையில் தமிழ் மொழி நடையை எளிமையாக்கினார்.

சி.என். அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. பெரியாரின் கனவை நனவாக்கினார்கள். அண்ணாதுரை ‘மதராஸ் ஸ்டேட்’ என்ற பெயரைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றினார். பெரியாரின் சிந்தனையில் எழுந்த புரட்சி கரத் திருமணமான சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக இயற்றினார். கலைஞர் கருணாநிதி அனைத் துச் சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைச் சட்ட மாக்கினார்.

பெண் விடுதலையும் பெரியாரும்

பெரியார் ஆயிரம் நூற்றாண்டுகளாக சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்டுவரும் கொடுமைகளைக் களையத் தவறவில்லை. கற்பு, புனிதம் போன்றவைகளின் பெயர்களால் பெண்களை அடிமைப்படுத்தும் முறை யைக் கடுமையாக எதிர்த்தார். ‘கற்பு’, ‘புனிதம்’ என்பது பெண்களுக்கு மட்டும் என்று எப்படிச் சொல்ல முடியும் என்று கேட்டு, பெண்ணடிமைத்தனத்தை ஆண் டாண்டு காலமாக வைத்திருக்கக் காரணமே, இந்தக் ‘கற்பு’, ‘புனிதம்’ போன்றவைதான் என்று கூறினார்.

ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கல்வி, வேலை போன்றவற்றில் ஆண்களோடு பெண்களும் சரிசம மாக இருக்க வேண்டும் என்று கூறினார். திராவிடர் கழகம் சமூகத்தில் பெண்ணடிமை ஒழிக்கப் பெரும் போராட்டமே நடத்தியது. அதன் பலனை இன்று தென்னகத்துப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அன்னை சாவித்திரி பாய் புலேவின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பெரியார், அவர் செய்ய மறந்த பல்வேறு பெண்ணுரிமைப் புரட்சிகளைத் தமிழக மண்ணில் நடத்திக் காட்டினார்.

தந்தை பெரியார் தன்னுடைய போராட்டங் களின் பலனைத் தனது கண்ணால் கண்டு மகிழ்ந்தார். பெரியார் போன்று உலகில் மிகச் சில தலைவர்களே உண்டு. பெரியார் தன்னுடைய கொள்கையில் எந்த அளவிலும் பிசகாமல் தன் னுடைய புரட்சிப் பயணத்தைத் தொடர்ந்தார்.

இந்தியா முழுவதும் பெரியார் தேவை

1879ஆம் ஆண்டு ஈரோட்டில் உதித்த பெரியார் என்னும் பகுத்தறிவுப் பகலவன் தன்னுடைய மரணத் திற்குச் சில நாள்கள் முன்கூட 94 வயதிலும் தன்னு டைய கொள்கைகளைப் பரப்புவதிலும் மக்களுக்காக வாழ்வதையுமே வாழ்நாள் இலட்சியமாகக் கொண் டார். பெரியாருக்கு யுனஸ்கோ அமைப்பு 1970-ஆம் ஆண்டு தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்ற பட்டத்தைக் கொடுத்துச் சிறப்பித்தது.

பெரியார் போன்ற தலைவர்களின் கருத்துகளால் இன்று இந்தியா சமூக நீதிக்களத்தில் முன்னேற்றம் பெற்று வீரநடை போடுகிறது. தற்போது இந்துத்துவக் கொள்கைகளைக் கொண்ட ஆட்சியாளர்களால் சமூக நீதிக்கு சிறிது பின்னடைவு ஏற்படத் துவங்கியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பெரியாரின் கருத்துகளை மீண்டும் உயிரூட்டம் கொடுத்து இந்தியா முழுவதும் கொண்டு செல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

- சத்ய சாகர், சமூக சேவகர், பத்திரிகையாளர், தலைநகர் டில்லியில் இருந்து வெளிவரும் ‘பார்வேர்ட் பிரஸ்’ என்ற ஆங்கிலம்-இந்தி இருமொழி மாத இதழின் சூன் பதிப்பில் எழுதியது.

நன்றி : விடுதலை, 12-6-2015

Pin It