நந்தவனம் என்றொரு சிற்றிதழ்.. படிக்கக் கிடைக்காதவர்கள் பாக்கியம் செய்தவர்கள்... தமிழினத் துரோகியாக உருவெடுத்துள்ள வதிலைபிரபா தன் உலகத் தமிழ் சிற்றிதழ் சங்க சார்பில் தமிழ் மாநாட்டிற்காக 2011 சனவரியில் செல்லும் இலங்கைப் பயணத்தை நியாயப்படுத்தியும், தான் எந்த வகையிலும் இதனால் தமிழினத் துரோகியல்ல என்பதையும்,  மாய்ந்து, மாய்ந்து எழுதி வருவதோடு...  

இலங்கையில் நடைபெறும் தமிழ் மாநாட்டை தமிழ் எழுத்தாளர்கள் புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்ததை  - கீற்று தனது இணையத்தில் வெளியிட்டதற்காக...  

கீற்று தன் பொருளாதாரம் காரணமாக வெளிவராமல் போய்.. நேயர்களிடம் உதவி கேட்டு.. அந்த உதவியின் மூலம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததையும் கூட அவர் தரம் தாழ்ந்த தன் எழுத்துகளின் மூலம் இழிவுபடுத்த முனைந்திருக்கிறார். 

தம் உலகத் தமிழ் சிற்றிதழ் சங்கத்தை செம்மொழி மாநாட்டுக் குழு மதித்து.. தம்மையும் அழைத்து கட்டுரை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று குற்றால கூட்டத்தில் தீர்மானம் போட்டார்.. அது எடுபடவில்லை.  

“ஈழத்திலே நடைபெற்ற படுகொலையை மறுக்கவில்லை.. ஆனால் சனவரி 2011 ல் நடைபெறும் தமிழ் மாநாட்டிற்கு தான் செல்வ‌தால் என்ன‌ தீமை ந‌ட‌ந்துவிட‌ப்போகிற்து? போகாத‌தால் என்ன‌ ந‌ன‌மை ந‌டைபெற‌ப்போகிற‌து?" என்று விட‌லைப் பைய‌னைப்போல் கேள்வி கேட்கிறார்..   

வ‌லிய‌.. வ‌லிய‌.. எழுதும் இவ‌ர‌து எழுத்தின் மூல‌ம் ந‌ம‌க்கு வ‌ரும் ச‌ந்தேக‌ம் என்ன‌வென்றால்.. ஈழ‌த்த‌மிழ‌ர் சாவுக்கு துணைபோய்.. த‌மிழுக்காக‌ செம்மொழி மாநாடு கூட்டிய‌வர்கள் போன்ற‌ ஏதேனும் ஒரு கூட்ட‌த்திட‌மிருந்து வதிலைபிரபா என்ன ஆதாயம் பெற்றார் என்ப‌துதான்..  

ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளையும்.. போராளிக‌ளையும் கொடூர‌மாக‌க் கொலை செய்தவர்‌ த‌ன்னை நியாய‌வாதியாக‌ காட்டிக் கொள்ள‌வும்.. இல‌ங்கையில் எந்த‌ போர்குற்ற‌ங்க‌ளும் ந‌டைபெற‌வில்லை என்று காட்டிக்கொள்ளவும் நாட‌க‌ங்க‌ளைத் தொட‌ர்ந்து ந‌ட‌த்துகிறார்..  

அத‌ற்கு ஆத‌ர‌வாக‌ இந்தியாவும் த‌ன் ப‌ங்குக்கு காம‌ன்வெல்த் போட்டி இறுதி நாளில் கொலைகார‌னை அழைத்து க‌வுர‌வித்த‌து...  

இப்ப‌டியாக‌ ம‌ற்றொரு க‌வுர‌வ‌த்தை ராஜ‌ப‌க்சேவுக்கு கொடுக்க‌க் கூடுவ‌தே 2011 ச‌ன‌வ‌ரி த‌மிழ் மாநாடு..  

இது துரோகிகளின் துரோக உச்சமல்லவா? 

வ‌திலைபிர‌பாவின் த‌ந்தை உட‌ல்ந‌ல‌மின்றி இருந்து சில‌ வார‌ங்க‌ளுக்கு முன் இய‌ற்கை எய்தினார்.. (எனது ம‌ன‌மார்ந்த‌ இர‌ங்க‌லை தெரிய‌ப்ப‌டுத்திக் கொள்கிறோம்)  

அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் சில‌ மாத‌ங்க‌ள் அவ‌ரின் ப‌த்திரிக்கை வெளிவ‌ர‌வில்லை..   

உங்க‌ள் ப‌த்திரிக்கை வ‌ராத‌தால் ச‌மூக‌த்திற்கு என்ன‌ இழ‌ப்பு.. வ‌ந்திருந்தால் ம‌ட்டும் என்ன‌ ந‌ன்மை என்று வ‌திலைபிர‌பாவிடம் கேட்டால்..  

கேட்ப‌வ‌ன் க‌ல்நெஞ்ச‌க்கார‌னாக‌ ம‌ட்டுமே இருக்க‌ முடியும்....  

இதே க‌ல்நெஞ்ச‌த்துட‌ன் வ‌திலைபிர‌பா இருக்கிறார்... இவ‌ரின் துரோக‌ப் ப‌ய‌ண‌ம் த‌டை செய்ய‌ இய‌லாத‌துதான்.. ஆனால், யார்..யார்.. த‌மிழின‌த்தின் துரோகிக‌ள்... ராஜ‌ப‌க்சேவின் கைக்கூலிக‌ள் என்ப‌தை இது ந‌ம‌க்குக் காட்டும்.

Pin It