அனைத்து இந்திய ரயில் கார்டுகள் கவுன்சிலின் (AIGC) பொது செயலாளராக தோழர் ஏ.கே.ஸ்ரீவத்சவா (ஏ.கே.ஸ்ரீ) உள்ளார். பொருளாதார சீர்திருத்த கொள்கைகளின் 20 ஆண்டுகால விளைவைப் பற்றி அவருடன் நேர்முகம் காணவும் இந்த முக்கியமான துறையில் பணி நிலைமைகள் குறித்த தகவல்களைப் பெறவும் நமது நிருபர் அவரை சந்தித்தார்.

தொழிலாளர் ஒற்றுமை குரல் நிருபர் (தொ.ஒ.கு) - கடந்த ஆண்டு, தனியார்மயம் தாராளமயம் மூலம் உலகமயமாக்கல் கொள்கையை நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமல்படுத்தி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அந்த நேரத்தில், தற்போதைய பிரதமர், திரு மன்மோகன் சிங், நிதி அமைச்சராக இருந்தார். இந்த கொள்கையின் விளைவுகள் எப்படி உள்ளது?

ஏ.கே.ஸ்ரீ- தனியார்மயம் தாராளமயம் மூலம் உலகமயமாக்கல் கொள்கையினால் தொழிலாளிகள் குறைக்கப்பட்டுள்ளனர், வேலையின்மை அதிகரித்துள்ளது. இந்த கொள்கைகள் நடுத்தர வர்க்கத்தை அழித்து அவர்களைத்  தொழிலாளி வர்க்கத்திற்கு தள்ளியுள்ளது. சிறிய எண்ணிக்கையிலான மேட்டுக்குடி மக்களை மட்டும் அனைத்து பணத்தையும் கொண்டுள்ளனர். அவர்கள் நாளுக்கு நாள் மேலும் பணக்காரர்களாக வளர்ந்து வருகின்றனர். மற்றவர்கள் ஓட்டாண்டிகளாக இருக்கிறார்கள் மேலும் அவர்களுடைய ஏழ்மை வளர்ந்து வருகிறது. அரசாங்க வேலைகள் ஒப்பந்ததாரர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் அவர்கள் பெறும் ரூ.3000-5000 சம்பளத்தில் உயிர்பிழைப்பது முடியாததாகி வருகின்றது. குற்றங்களும் அதிகரித்து உயர்ந்து வருகின்றன. சட்டப்படி சம்பாதிக்க முடியாத போது மக்கள் என்ன செய்ய முடியும்?

தொ.ஒ.கு- இந்த கொள்கைகள் ரயில்வேவை எப்படி பாதித்துள்ளது, குறிப்பாக ரயில்வே கார்டுகளை எப்படி பாதித்துள்ளது?

ஏ.கே.ஸ்ரீ- கடந்த சில ஆண்டுகளாக, ரயில்களை இயக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் துணை சேவைகளையும் தனியார் ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தோராயமாக 15000 ரயில்கள் ஓடுகின்றன. அவைகள் தினமும் சுமார் 10 லட்சம் டன் பொருட்களையும் 1 கோடி மக்களையும் ஏற்றிச் செல்கின்றன. 65000 கிமீ அவைகள் கடக்கின்றன. இப்போது ரயில்வேயில் 15.2 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் இந்த எண்ணிக்கையை 8 லட்சத்திற்கு குறைக்க எண்ணுகிறார்கள், மென்மேலும் ஒப்பந்தக்காரர்கள் மூலம் வேலையை நடத்த விழைகிறார்கள். இதனால் முதலாளிகள் பயனடைவார்கள், தொழிலாளர்களுக்கோ விளைவு பேரழிவாக இருக்கும். உலக வங்கியின் கொள்கைகளால் தொழிலாளிகள் குறைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 36000 ரயில் கார்டுகளும் 72000 என்ஜின் டிரைவர்களும் உள்ளனர். இந்தப் பணியில் மட்டும் 10000-15000 காலியிடங்கள் உள்ளன. இப்படிப்பட்ட அதிக எண்ணிக்கையிலான காலியிடங்களினால் வேலை நேரம் அதிகப்படுத்தப்படுவதோடு பாதுகாப்பு குறைபாடும் ஏற்படுகிறது. இதுவரை செய்யப்பட்ட அனைத்து விசாரணைகளும் அதிகப்படியான வேலை நேரத்தை திணிப்பதே விபத்துக்களுக்கு காரணமென வெளிப்படுத்தியுள்ளது. இந்த பிரச்சினை பற்றி இதுவரை எதுவும் செய்யப்படவில்லை.

தொ.ஒ.கு- ரயில்வே கார்டின் பொறுப்புகளைப் பற்றி விளக்குங்கள்.

ஏ.கே.ஸ்ரீ- ஒரு ரயில் கார்டு ஒரு ரயிலுக்கு பொறுப்பானவராவார். ஆபத்து சமிக்ஞையை கடந்து சென்றால் அது தண்டனைக்குரியது: இது ரயில்வேயில் "விபத்து" என கருதப்பட்டு அதன்படி அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

ஒரு ரயில்வே கேட் மூடப்பட்ட பின்தான் பச்சை சமிக்ஞை ரயிலுக்கு கிடைக்கும். கேட்டை மூட முடியாது என்றால், ரயில் நிறுத்தப்பட்டுவிடும். கேட் சமிக்ஞை நீண்ட நேரமாக ஆபத்து (சிவப்பு) என உள்ளது என்றால், ரயில் ஓட்டுனர் கார்டுக்குத் தெரிவிக்க வேண்டும். கார்டு ரயில் முன் வரை நடந்து சென்று, ரயில்வே கேட்டின் நிலையை சரிபார்த்து, சரியாக இருக்கும் பட்சத்தில் ரயில் செல்லலாம் என்று சான்றளித்து பின் ரயில் ஓட்டுனருக்கு ரயிலை இயக்கிச் செல்லச் செய்ய வேண்டும்.

ஒரு ரயில்வே கேட்டைக் கடக்கும் போது, அடுத்த பச்சை சிக்னல் வரும் வரை பகல் நேரத்தில் ஒரு மணிக்கு 15 கிமி வேகத்திலும் இரவு நேரத்தில் ஒரு மணிக்கு 8 கிமி வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும்.

ஒரு நபர் ரயில்வே கேட்டைக் கடக்கும் போது அடிபட்டுவிட்டால், ரயில் நிறுத்தப்பட்டு ரயில் ஓட்டுனர் கார்டுக்குத் தெரிவிப்பதற்காக சங்கை ஊதுவார். கார்டு உடனடியாக சென்று காயம்பட்ட நபருக்கு முதலுதவி செய்ய வேண்டும். கார்டு இதற்கு பயிற்சி பெற்றவராக இருப்பார். பின் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் அடுத்த நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு நிலைய அதிகாரியிடம் காயம்பட்ட நபரை ஒப்படைக்கப்பட வேண்டும்.

யாராவது ரயில் விபத்தில் இறந்துவிட்டால், சி.ஆர்.எஸ் (ரயில்வே பாதுகாப்பு ஆணையர்)-ஆல் விசாரணை நடத்தப்படும். ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பிற போக்குவரத்து துறைகளில் இருந்து வருவார்கள், பெரும்பாலும் விமான போக்குவரத்து துறையாக இருக்கும். அப்படி விசாரிக்கப்படும் நேரத்தில், விசாரிக்கும் முதல் நபர் ரயில் கார்டு ஆவார். விபத்து நடந்த இடத்தில் அவர் எழுதும் அறிக்கையை மாற்ற முடியாது.

ஒரு கர்ப்பிணி பெண் ரயிலில் பயணம் செய்யும் பொழுது குழந்தை பிரசவிக்கப் போகிறது என்றால், ரயில் கார்டு வரவழைக்கப்படுவார். ரயிலை நிறுத்திவிட்டு, ரயில் பெட்டியில் ஒரு பகுதியை ஒதுக்கி அங்குள்ள பெண்களின் உதவியுடன் பாதுகாப்பாக பிரசவிக்க அனைத்து உதவிகளையும் ரயில் கார்டு வழங்க வேண்டும்.

ஒரு நபர் ரயில் பயணத்தில் இறந்துவிட்டால் ரயில் கார்டு நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு அவர் மூலம் பஞ்சனாமாவை பெற ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் நிலைய அதிகாரியிடமிருந்தோ போலீஸ் அதிகாரியிடமிருந்தோ இசைவு சான்றிதழ் பெற வேண்டும். அதற்குப் பின்னரே ரயில் புறப்பட முடியும்.

ரயில் கார்டு அண்டை தண்டவாளங்களை அனைத்து நேரங்களிலும் கண்காணிக்க வேண்டும். மேலும் அவர் கடந்து செல்லும் ரயில்களையும்  சரிபார்த்துக் கொண்டிருக்க வேண்டும். 2 இலிருந்து 7 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு ரயில் நிலையம் வருகிறது. அங்கெல்லாம் அவர் நிலைய அதிகாரிக்கு பச்சை சிக்னலைக் காட்ட வேண்டும்.

ரயில் அதன் ஆரம்ப நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக, கார்டிலிருந்தும் ஓட்டுனரிடமிருந்தும் எல்லாமும் சரியாக உள்ளதா என்று பார்த்து ரயில் புறப்படலாமென ஒப்புதலளிக்க வேண்டும். அவர்களின் அறிக்கை ரயில் பரிசோதகருடைய கேரேஜ் மற்றும் வேகன் பணியாளருடைய கண்டுபிடிப்புகளை அடிப்படையாக கொண்டது. ஒவ்வொரு ரயிலும் புறப்படுவதற்கு முன்பாக சான்றளிக்கப்பட வேண்டும்.

ரயில் கார்டு அழுத்த மானியில் அழுத்தம் சரியாக உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இது ரயிலின் பிரேக்குகள் நல்ல நிலையில் உள்ளன என்பதை உறுதி செய்யும்.

தீ பிடித்து விட்டால் ரயில் பாதுகாவலர் பாதிக்கப்பட்ட கோச்சுகளை உதவி லோகோ ஓட்டுனரின் உதவியோடு துண்டிக்கவும் வேண்டும்.

கடந்து செல்லும் ஒவ்வொரு நிலையத்தின் நேரம் மற்றும் தாமதமாக செல்லும் விளக்கங்களை குறிப்பாக பதிவு செய்து அவர் வைக்க வேண்டும்.

நிலைய அதிகாரி இல்லாத நேரங்களில் ரயில் இயக்கத்தை பொறுத்த முடிவுகளை எடுக்கும் பொறுப்பு ரயில் கார்டின் தோள்களில் விழும். உதாரணமாக, வெள்ள நீர் தடங்களில் உயரும் போது இது நடக்கலாம். அவர் ரயிலை முன்னோக்கியோ பின்பக்கமாகவோ செலுத்துமாறு ஓட்டுனருக்கு கட்டளையிட முடியும்.

தொ.ஒ.கு- ரயில் கார்டின் கடமை மிகவும் பெருஞ்சுமையானது. ​​மற்றும் ரயில்கள் பாதுகாப்பிற்கும் அதனால் பயணிகளின் பாதுகாப்பிற்கும் அவரின் பங்கு மிக முக்கியமானது.

ஏ.கே.ஸ்ரீ- சரியாகச் சொன்னீர்கள். ரயில் கார்டும் ஓட்டுனரும் பாதுகாப்பு பற்றி பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். ஆனால் அவை எதுவும் செயல்படுத்தப்படவில்லை. விபத்துக்கள் நடந்த பிறகு மட்டுமே எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி அவர்கள் சிந்திக்கிறார்கள். வதோதராவுக்கும் பரூச்சுக்கும் இடையிலுள்ள இடோலாவுக்கு அருகில் நடந்த ரயில் மோதலுக்கு பின்னரே கை மின் விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டது. வாசை ரோடு அருகே விபத்து நடந்த பிறகே விட்டுவிட்டு எறியும் விளக்கை புறநகர் ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரோசாபாதில் நடைபெற்ற விபத்துக்குப் பிறகே தண்டவாள சுற்று அறிமுகப்படுத்தப்பட்டது. செய்ய வேண்டுமென்ற எண்ணமிருக்குமானால் பாதுகாப்பை மேம்படுத்துவது கடினம் அல்ல. ஆனால் யார் ரயிலில் பயணம் செய்கிறார்கள்? ரயில் கார்டும் ஓட்டுனரும், நாட்டை எப்படி நடத்துவது என்பதை தீர்மானிப்பதில் ஒரு பங்கும் வகிக்கமுடியாத கோடிக்கணக்கான மக்களும் பயணிக்கிறார்கள்.

தொ.ஒ.கு- ரயில் கார்டுகளின் தொழில் ரீதியான அபாயங்களைப் பற்றி சொல்ல முடியுமா?

ஏ.கே.ஸ்ரீ- நிலையான வார விடுமுறை இல்லாததாலும், மனிதாபிமானமற்ற கால நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் ரயில் கார்டுகள் ஓட்டுனர்களைப் போலவே பாதிக்கப்படுகின்றனர். ரயில் கார்டுகளும் ஓட்டுனர்களும் 25,000 வோல்ட் உயர்மின்னழுத்த மின்தொடருக்கு கீழே எப்போதும் வேலை செய்ய வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் எப்போதும் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி போன்ற தீய விளைவுகளை ஏற்படுத்தும் கதிர்வீச்சை எல்லா நேரங்களிலும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இது தவிர, சிமெண்ட், நிலக்கரி போன்றவற்றை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள், பல பிரச்சனைகளை உருவாக்கும். எல்லா நேரத்திலும் தூசிக் காற்று ரயில் பாதுகாவலர்கள் பக்கம் வீசும். ஒரு ரயில் கார்டு எப்போதுமே தனிமையில் இருக்க நேரிடும். ரயில் ஆபத்தான பிரதேசங்களில் செல்லும் போது பல ரயில் கார்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ரயில் கார்டுகளின் பெட்டியில் விளக்குகளோ கழிப்பறைகளோ அல்லது மின்விசிறியோ இல்லை. உலோகத்தால் செய்யப்பட்டதால் நம்பமுடியாத அளவிற்கு வெப்பமாகிவிடும்.

தொ.ஒ.கு- ரயில் கார்டுகள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள், ஓட்டுனர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போலவே உள்ளன என்பதால், நீங்கள் அவற்றைக் கூட்டாக எதிர்ப்பீர்களா?

ஏ.கே.ஸ்ரீ- அகில இந்திய லோகோ பணியாளர்கள் சங்கத்துடன் (AILRSA) எங்களுக்கு நல்ல புரிந்துணர்வு உண்டு, இதை மேலும் வலுப்படுத்தி கொள்ள நாங்கள் தொடர்ந்து வேலை செய்து வருகிறோம்.

தொ.ஒ.கு- உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. ரயில் கார்டுகளைப் பற்றியும் மக்களுடைய பாதுகாப்பிற்கு நீங்கள் ஆற்றும் முக்கிய பங்கை பற்றியும் நீங்கள் விளக்கியதற்கு எமது வாசகர்கள் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். நன்றி.

Pin It