ஆல் இந்தியா இரயில்வேமென் பெடரேசன், கன்பெடரேசன் ஆப் சென்டிரல் கவர்ன்மென்ட் எம்பிளாயிஸ் அசோசியேசன் மற்றும் ஆல் இந்தியா டிபென்ஸ் எம்பிளாயிஸ் அசோசியேசன் ஆகிய தொழிற் சங்கங்கள், ஏழாவது ஊதியக்குழு அமைப்பது உட்பட அவர்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுக்குமானால், வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள நேரிடுமென எச்சரித்திருக்கின்றனர்.

மத்திய அரசின் பதிலுக்காக ஆகஸ்டு வரை காத்திருப்போமென இந்த மூன்று தொழிற்சங்கங்களும் அறிவித்துள்ளன. அரசாங்ம் அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில், அனைத்திந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோமென கூறியுள்ளனர்.

இந்த மூன்று தொழிற்சங்கங்களின் கீழ் 25 இலட்சம் தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ளனர். விலைவாசி படியை அடிப்படை சம்பளத்தோடு சேர்க்க வேண்டும், கிராம அஞ்சல் சேவகர்களுடைய பணிகளை முறைப்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை பின் வாங்க வேண்டும். போனஸ் வரம்பை நீக்க வேண்டும் மற்றும் கருணை அடிப்படையில் வேலை நியமனம் செய்ய வேண்டும் ஆகியவை அவர்களுடைய கோரிக்கைகளில் அடங்கும்.

Pin It