1. எங்கள் தங்கம் என்பதேன், ஏனெனின்

    தங்ககுணம் கொண்டது அது.

2. சரக்கொன்று கொண்ட குணம்யாவும் தனக்கும்

    உண்டென்று உரைப்பது அது.

3. எப்பொருளா கவும்மாறிக் கொள்ளும் செப்படி

     வித்தை கற்றது அது.

4. சேர்த்திட செலவிட இருத்திட மாற்றென

    ஏற்றிட ஏற்றது அது.

5. கையாளல் கையாடல் எளிது என்பதால்

    கள்வரையும் கவர்ந்தது அது.

6.  கொண்டாடி னர்கொண்டு ஆடினர் பண்டுமுதல்

   தங்கத்தின் தனிக்குணம் கண்டு.

7. பெற்றதை பேணாது விட்டுவிட்டுத் தங்கத்தைத்

     தத்தெனக் கொள்வது உலகு.

8.  தங்கத்தை வென்ற வாளுண்டு, வாளையும்

     தங்கம் வளைத்த துண்டு.

9. சுரங்கம்தோன் றிஅரங்கம் ஆடிபேழை உறங்கும்

     மஞ்சள் பிசாசு அது.

10. தங்கத்திற் குண்டு ஒருதங்கை, வெள்ளி

       என்பது அதுகொண்ட பேர்.

Pin It