5. காரண காரியம்

                - புள்ளி விவரக்காரணங்கள்

21. பழமையான அறிவியல் குறிப்புகள் காரண காரியம் (Cause and effect) என்னும் குறுகிய எல்லைக்குள் அமைந்துள்ளன.  இதிலிருந்து பரந்த கருத்துச் செறிவமைந்த புள்ளிவிவரக் காரணங்களுக்கு நாம் மாற வேண்டியுள்ளது. (Statisticsl Causality)

22. அணு இயற்பியலின் விதிகள் புள்ளிவிவர விதிகளைக் கொண்டவை. (The laws of atomic physics are statistical laws)

 23. (i) அணு நிகழ்வுகள் (atomic events)

       (ii) நிகழ்தகவுகள் (Probabilities)

முழுமையான அமைப்பின் இயக்கவியலைக் கொண்டு தீர்மானிக்கப் படுகின்றன. (The atomic events or the probabilities are determined by the dynamics of the whole system.)

24. பழமையான இயற்பியலின் ஒரு முழுமையான அமைப்பின் பண்புகளையும், நடத்தையையும் பகுதியின் பண்புகளும் நடத்தையும் தீர்மானிக்கின்றன. (Particular to the whole) In Classical Physicsï the properties and behaviour of the parts determine those of the whole.

25. குவைய இயற்பியலில், இந்த நிலை தலைகீழாகிறது. அதாவது முழுமையிலிருந்து பகுதி வருகிறது. (whole to particular) அதாவது முழுமையின் பண்பு பகுதியின் பண்பில் காணக் கிடக்கிறது. (இதைத்தான் நம் மகரிஷிகள் ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்’ என்றனர். அறிவியல் தேடும் ஆதாரம் காட்ட முடியாத பேருண்மைதானே!) அதாவது முழுமையீன் பண்புகள் நடத்தைகள் பகுதிகளில் காணப்படுகிறது.

26.இதனாலேயே நிகழ்தகவுகள் பழமையான இயற்பியலிலும், குவைய இயற்பியலிலும் பயன் படுத்தப்படுகிறது.

27. இந்த இரண்டு வகையான (நவீன, பழமையான) இயல்பியலிலும் ‘மறைவான’ (hidden) மாறிகள் (variables) நமக்குத் தெரியாமல் உள்ளன. நம் அறிவிற்கு எட்டாதவையாகவும் இருக்கலாம்.

28. இந்த அறியாமை சரியானபடி முன்கூட்டி கணித்துக் கூறுவதைத் தடை செய்கிறது.

29. பழமையான இயற்பியல் (Classical Physics) உள்ளில் உள்ள செயல்பாட்டு முறை மறைவான மாறியாக உள்ளன. (hidden variables are local mechanism)

 6. குவைய இயற்பியல்

                - உள் அல்லாத மாறிகள்

30. இங்கு உள்ளில் அல்லாத மாறிகள் செயல்படுகின்றன. அவை தாமாக உருவாகின்றன. அவை முழுமையான அண்டத்தோடு இணைக்கப் பட்டுள்ளன.

31. அன்றாட வாழ்க்கையில் உள்ளில் அல்லாத தொடர்புகள் அவ்வளவாகப் பொருள் படுத்தப்படுவதில்லை.

32. எனவே, பழமையான இயற்பியல், பகுதியைப் பிரிக்கப் பட்ட பொருளாகக் கொண்டு அவற்றிற்கான விதிகளையும் உருவாக்குகிறது. இவ்விதிகள் இந்தப் பகுதிகளின் நடத்தையைத் தீர்மானமாகக் கூறிவிடுகின்றன.

33. சிறிய அளவில் உள்ளில் அல்லாத தொடர்புகள் வலுவுள்ளவையாகின்றன. விளைவு-உறுதியாக அறுதியிட்டுக் கூறுவது போய் நிகழ்தகவைப் பிடித்துக்கொண்டு பேச வேண்டி வருகிறது.

34. அண்டத்தின் முழுமையிலிருந்து ஒரு பகுதியைத் தனியே பிரித்துப் பார்ப்பது என்பது மிக மிகக் கடினமானதாக அமைந்து விடுகிறது.

35. ஆனால் ஐன்ஸ்டீன் (Einstein)

i) உள்ளில் இல்லாத தொடர்புகள் இருப்பதை யும்,

ii)  அடிப்படை என விளைகின்ற நிகழ்தகவின் வினையாற்றும் பங்கையும் ஒரு போதும் ஒத்துக் கொள்வில்லை.

7. ஐன்ஸ்டீன் - போர் கருத்து மோதல்கள்

36. 1920ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன்-போர் (Einstein-Bhor) ஆகிய இருவருக்குமிடையே இதனால் ஒரு சரித்திரப் புகழ் பெற்ற வாதப் பிரதிவாதப் பட்டி மன்றமே - இல்லை - வழக்காடலே நடை பெற்றது.

37. “கடவுள் பகடை (dice)  விளையாடு வதில்லை” என்ற உவமையை (metaphor) ஐன்ஸ் டீன் போரின் குவையத் தத்துவ விளக்கங்களை எதிர்க்கப் பயன்படுத்தினார்.

38. விவாத முடிவில், ஐன்ஸ்டின் குவையத் தத்துவம் “ஒரு நிலைப்புத்தன்மை உடைய எண்ண அமைப்பினை உருவாக்கியது” என்பதை ஒத்துக் கொள்ளும்படி ஆயிற்று.

39. “எதிர்காலத்தில் ஒரு தெளிவான தீர்மானமான தத்துவ விளக்கங்கள், மறைந்துள்ள மாறிகளின் வாயிலாக உருவாகும்” என்பதை ஐன்ஸ்டீன் ஒத்துக்கொள்ளும்படி ஆயிற்று.

40. அடுத்து ஐன்ஸ்டீன் சுதந்தரமான இடைவெளியால் பிரிக்கப்பட்ட அடிப்படைப் பொருள்களால்(independent spatially separated element)ஒரு  திரியான வெளித்தன்மை உள்ள உண்மைப் பொருள் (external reality) பற்றி உறுதியாக நம்பினார்.

41. ஐன்ஸ்டின், போரின் குவையக்  கொள்கைகள் பற்றிய விளக்கங்கள் நிலைத்த தன்மை உடையன அல்ல என்று நிரூபிக்க முயன்றார்.

8. EPR - எண்ணச் சோதனை

42. இதற்காக அவர் ஒரு எண்ணச் சோதனையைக் கண்டுபிடித்தார். (a thought experiment) அச்சோதனை நுஞசு என்று அழைக்கப் பட்டது. (EPR - Einstein-Podolsky Rosen Experiment)

43. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜான்பெல் (John Bell) EPR நுஞசு சோதனையின் அடிப்படையில் ஒரு தேற்றத்தை (theorem) உருவாக்கினார்.

44. “குவையத் தத்துவம் பற்றி புள்ளியியல் கணிப்புகள், உள்மறை மாறிகளின் இருப்பு பற்றி, உறுதித்தன்மை உடையதாக இல்லை” என்பதை இத்தேற்றம் நிரூபிக்கிறது. (This theorem proves that the existence of local hidden variable is inconsistent with the statistical predictions of quantum theory.)

 45. இந்தப் பெல் தேற்றம் ஐன்ஸ்டீனின் உயர் நிலைக்குக் கிடைத்த ஒரு பெரும் அடி என்றே சொல்லலாம்.

46. “உள்ளகத்துத் தொடர்பால் பலவிதமான பிரிக்கப்பட்ட பகுதிகள் ஒன்று சேர்ந்ததே உண்மை யானது” என்ற கருத்தினை - நிலையினை ஐன்ஸ்டீன் கொண்டிருந்தார்.

47. ஆனால் இந்தக் கருத்து குவையத் தத்துவத்திற்கு இணக்கமாயில்வை.

48. EPR சோதனைகள் திரும்பத் திரும்ப கலந்து உரையாடப்பட்டது. ஆய்வு செய்யப் பட்டது.

49. இந்த ஆய்வில் குவையத் தத்துவம் தன் விளக்கத்தைத் தந்து துணை புரிந்தது.

50. இந்த ஆலோசனை மிகுந்த சிந்தனை ஆய்வு பழமையான இயற்பியலுக்கும், குவையக் கருத்துக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவியது.                                                                                                                                                                     (தொடர்வோம்)

Pin It