அரசுத் திட்டங்கள்
உடனே கிடைத்தன
தலைப்புச் செய்தியாக

***
 
மழைக்காலம்
நவீன தீடத்தத் தொட்டி
எங்கள் ஊர்ப் பேருந்து

***

நினைக்காதே என்ற போது
நினைத்தது
அதுவரை நினைக்காத மனசு.

***

குறத்தி பிள்ளை பெற
குறவன் தின்ற காயங்கருப்பட்டி
அரசுத் திட்டங்கள்

***

பத்து சதவிகிதம் தள்ளுபடி
சொந்த சாதியினருக்கு மட்டும்
வாங்கும் லஞ்சத்தில்

***

பொம்மைகள் மீது
பக்திகொண்டன
கடைசி வரை குழந்தைகள்

***

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.