வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடிய மண்ணில் வயிறு நிறைந்து
கொழுத்த கன்றுகள்
இராவண பூமியில் அடிமாடுகளான
தன் இனத்தை மறந்து மேய்கின்றன

ஒன்றிரண்டு அசைபோட்டன கதறிய சிலவற்றைக் காணவில்லை
இமயம் முதல் குமரிவரை பெருமந்தை மேய்ப்பவன்
எல்லைதாண்டிய காரணத்தால் தண்ணீர் தெளித்திட்டான்

சினையையும் அறுத்தான் கசாப்புக் கடைக்காரன்
கதறிச்செத்தன கோடிக்கன்றுகள்
குருதிக்காட்டில் புலிகளும் இரங்கின
மனிதனோ மிருகமாகி விட்டான்

எல்லைக்கு மேலும் கீழும் நல்ல மேய்ப்பனின்றி
அந்நியப்பட்டுக் கதறுகின்றன சிறுபான்மை ஆடுகள்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.