எந்தவொரு
தொலைத்தொடர்பு எல்லைகளுக்கும்
அப்பாற்பட்ட
உன்னை
சந்தித்த பொழுதுகளில்
எனக்குள்
பனித்தன வார்த்தைகள்
“அப்பாவுக்குப் பிடித்திருந்தால்”
உனக்கும்
எனக்குமான
நெருக்கங்கள்
பிணைக்கப்படாமல் இருந்த
இடைவெளியின்
இன்றியமையாத காலங்களில்
எனக்குள்
இன்பமான சுமையாய்
தொற்றிக் கொண்டது
நீ
விட்டுச் சென்ற
தலையசைப்புக்கள்
அப்பாவுக்குத் தெரியாமல்
நான் திருடியது
என் வீட்டு
கர்ப்பகிரகத்தினுள்
அன்றாடம் தேடி அலைந்து
ரசித்தது
நீ விட்டுச் சென்ற
தலையசைப்புகளை மட்டும்
உனக்கும் எனக்குமான
பந்தங்கள்
தொடர்புகளுக்குள்
உட்படுத்தப்பட்ட பொழுதுகளில்
நம்
பேச்சின்
எல்லையில்லாத சமயங்களில்
எனக்குள்
படியும் நகைப்பூக்களுக்கு
மட்டுமே தெரியும்
தலையசைப்புகளின்
வசப்படுத்தும் தன்மை
இனிதானதென்பது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.