பேரா. கேப்டன் எஸ். கலியபெருமாள்

பக். : 678 விலை : ரூ.500

வெளியீடு : கலகம் வெளியீட்டகம்

 1/7, அப்பாவு தெரு, சென்னை – 2

 044 – 4266 3840

பழந்தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, பண்பாடுகள் அவமானப்படுத்தப்பட்டு, தலைக்குனிவை ஏற்படுத்தியும் கூட அதனை அறிந்துகொள்ளாமல் ஓடுகின்ற காலத்தோடு ஓடிக் கொண்டுள்ளான் தமிழன். அவன் எதை இழந்தான், எவைகளுக்கு அடிமைப்பட்டான் என்பதை அறிந்துகொள்ள வேண்டாமா?

இந்திய நாட்டின் வரலாற்றை எழுதியவர்கள் பெரும்பாலோர் மனிதர்களாய் சாதி உயர்வு தாழ்வு போன்ற இந்து மதக் கொள்கைகளில் நம்பிக்கையுடையவர்களாய் இருந்தும், தமிழக வரலாற்றில் தனித்தன்மையையும், உண்மைத் தன்மைகளிலும் சிறந்து விளங்கிய தமிழர்களின் வரலாற்றை மூடி மறைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?

மன்னர்களின் பேரரசையும் அவர்களின் மூடநம்பிக்கைகளும் ஆரிய புரோகிதர்கள் தங்களைத் தெய்வப் பிறவிகள் என்றும், தெய்வங்களுடன் தங்களால் உரையாட முடியும் என்று கூறுவதையும் உண்மை என நம்பி அவர்களைத் தலையில் தூக்கிவைத்து ஆடியதோடு அரசின் கஜனாவை, பரிகாரச் சடங்குகள் என்ற பெயரால் காலி செய்ததோடு, நான்கு வருண சாதிஅடிப்படையில் கீழ்ச்சாதியினர் பிராமணத் தொண்டையும், பெருங்கோயில் வழிபாட்டையும் கட்டாயப்படுத்தி, ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சியதை அரிய வேண்டாமா?

மக்களில் ஒரு பகுதியினரைத் தாழ்த்தியும், அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தி அவமானப்படுத்துவதற்காகவே உலகில் ஒரு மதம் தோற்றுவிக்கப்பட்டதென்றறிய அது இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட இந்து மதம் என்பதை இந்நூல் மூலம் அறிய முடிகிறது.

நூலின் ஆசிரியர் 33 ஆண்டுகள் பேராசிரியர் பணியின் மூலமும் விரிவான ஆய்வுகளின் மூலமும் பெற்ற வரலாற்று தரவுகளின் அடிப்படையில் இந்நூலைத் தந்துள்ளார் அவரைப் பாராட்டி ஆதரவு தர வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.                                    

Pin It