பண்டைக் காலத்தில் மிருகமாய் இருந்த மனிதன் மனிதனாக மாறும் முன்பு அலாலி அதாவது பேசாத மனிதனைப் போன்ற ஓர்வித ஜீவனாக வாழ்ந்திருக்கலாம் என மெய்ஞ்ஞானிகள் பூமியில் புதையல் பெற்ற சில உருவக் கூடுகளிலிருந்து யூகிக்கின்றார்கள். ஏதோ சில காரணத்தில் மனிதன் பேச ஆரம்பித்தான். அந்தக் கால முதல் மனிதன், தான் காணும் கேட்கும், பரிசிக்கும் பொருள்களுக்குப் பெயரிட சக்தி பெற்றான். இத்துடன் தான் காணாத, கேட்காத, தரிசிக்காத கற்பனை சொற்களை உண்டாக்கிக் கொண்டான்.

இந்தச் சொற்களில் அடங்கியவை கடவுள் எனும் சொல், மதமென்ற சொல், சாதியென்ற சொல் முதலிய சொற்கள் கற்பனை சொற்கள் என அறிதல் வேண்டும். மற்ற மிருகங்கள் பேசும் திறமையை பெறாமையால் கற்பனை செய்ய முடியவில்லை. ஆதலால் மிருகங்கள் யாவும் கடவுள், சாதி, மத கற்பனைகள் இல்லாமல் பல கோடி வருடங்களாக வாழ்ந்து வருகின்றன. 

Pin It