நாட்டிலுள்ள ஜனநாயத்தன்மையையும், அரசியல் அமைப்புச் சட்டங்களையும் கொஞ்சம் கூட மதிக்காமல் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று மும்பை யில் தனி ராஜாங்கம் நடத்தி வருகின்றனர் தாக்கரே வகையறாக்கள்.

நாங்கள் எந்தச் சட்டத்திற்கும் அடங்காதவர் கள் என்று திமிருடன் உலா வரும் இவர்களைக் கண்டு மாநில அரசும், மத்திய அரசும் பயந்து நடுங்குகின்றன என்பதை நாட்டு நடப்புகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மும்பை கமிஷ்னரை மாற்றவேண்டும் என்று ராஜ் தாக்கரே பேசிய மறுநாள் மஹாராஷ்டிரா மாநில கூட்டணி காங்கிரஸ் அரசு மும்பை கமிஷ்னரை மாற்றம் செய்கிறது.

பீகார் மக்களை விரட்டியடிப்போம் என்று சட்டத்திற்கு எதிராக ராஜ் தாக்கரே சவால் விடும் போதும், பீகார் மாநிலம் உருவானதற்கான நூற்றாண்டு விழாவை நடத்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மும்பைக்குள் வர அனுமதிக்க மாட் டோம் என்று தனது அப்பனுக்கு சொந்தமா னது மஹாராஷ்டிரா என்ற ரீதியில் பேசி தேசிய ஒற்று மைக்கு ஊறு விளைவிக்கும்போதும் மத்திய, மாநில அரசுகள் மௌனம் காக்கின்றன.

பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சிவசேனா தலைவர் பால் தாக்கரே, அதன் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே என மூவர் மீதும் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவாகின்றன. அவர் களை நேரில் ஆஜராக உத்தரவிடும் அந்த நீதிமன் றங்களின் சம்மன்களை காலில் போட்டு மிதிக் கின்றனர் தாக்கரேக்கள்.

அந்த நீதிமன்றங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தாக்கரேக்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க எந்த நீதிமன்றங்க ளும் முன் வரவில்லை. பீகார் மற்றும் ஜார்கண்ட் அரசுகளும் அவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.

தாக்கரேக்களின் வன்முறைப் பேச்சுக்களை கண்டு கொள்ளாமல் செயலற்றுப் போய் கிடக்கி றது மத்திய அரசு என்று நியாய உணர்வு கெண்ட அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கூட மத்திய அரசை விமர்சித்த பின்னரும் மத்திய அரசுக்கு சூடு, சொரணை இல்லை.

ஜனநாயகத்தின் சின்னமாகத் திகழும் அரசி யல் கட்சிகளைத் துவக்கி ரவுடித்தனம் செய்யும் தாக்கரேக்களுடைய கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சமூக அக்கறை உள்ளவர் வைக்கும் கோரிக்கைகள் மத்திய அரசின் காதுகளில் விழுவதில்லை.

மத்திய, மாநில அரசுகளை மிரட்டி வந்த ரவுடி அரசியல்வாதியான ராஜ் தாக்கரே இப்போது உயர் நீதிமன்றத்தையும் மிரட்டியுள்ளார்.

மும்பை மத்தியில் இருக்கும் சிவாஜி பூங்கா வில் பேரணி நடத்த அனுமதிகோரி மும்பை ஹை கோர்ட்டில் மனு செய்தது ராஜ் தாக்கரேவின் நவ நிர்மாண் சேனா கட்சி. இந்த சிவாஜி பூங்கா மும்பை மாநாகராட்சியால் அமைதி மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பகுதி. இங்கு அமைதி யைக் கெடுக்க ராஜ் தாக்கரே அனுமதி கேட்கிறார் என்பதை புரிந்து கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், இப்பேரணிக்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டது.

அனுமதி மறுக்கப்பட்ட மறுநாள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய ராஜ் தாக்கரே, மும்பை உயர் நீதிமன்றம் ஓரவஞ்சணை காட்டுகிறது என ஆரம்பித்து நீதிமன்றத்தை தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார்.

நீதிமன்றத்தின் மாண்புகளை அவமதித்த ராஜ் தாக்கரே மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை வழக்கறிஞர் இஜாஸ் நக்வி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த அக்டோபர் 1ம் தேதி விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், இந்தப் பிரச்சினையை பிறகு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம் எனக் கூறி, விசாரணையை தள்ளி வைத்திருக்கிறது. ஆயினும் இந்த வழக்கு மீது நீதிமன்றம் கூறியிருக்கும் கருத்து கவனிக்கத்தக்கது.

“ராஜ் தாக்கரே எவ்வித முக்கியத்துவமும் தரத் தகுதியற்றவர். இதுபோன்ற வழக்குகளை தொடுப்பதன் மூலம் தேவையில்லாமல் நீங்கள் ராஜ் தாக்கரேவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர் கள்...” என்று மனுதாரரைப் பார்த்து தலைமை நீதிபதி மோஹித் ஷா கூறியிருக்கிறார்.

அதோடு, “ராஜ் தாக்கரேயின் அறிக்கைகளை மீடியாக்கள் வெளிப்படுத்தவில்லை என்றால் அவர் என்ன சொல்கிறார் என்பது எவருக்கும் தெரிய வராது...” என்றும் நீதிபதி ஷா குறிப்பிட்டிருக்கிறார். இதன்படி, மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது ராஜ் தாக்கரே மீது மும்பை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தெரிகிறது. அதே சமயம் நீதிபதி ஷா கூறியுள்ள கருத்துகள் அர்த்தம் பொதிந்தவை.

மீடியாக்கள் ராஜ் தாக்கரே போன்றவர்களை கண்டு கொள்ளாமல் இருந்தாலே அது மஹாராஷ்டிரா மக்களுக்கு செய்யும் சேவையாக இருக் கும். ஆனால், ராஜ் தாக்கரே போன்ற ரவுடி அரசி யல்வாதிகளை கண்டு கொள்ள வேண்டிய மத் திய, மாநில அரசுகள் கண்டு கொள்வதில்லை. கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டிய மீடியாக் கள் கண்டு கொள்கின்றன. அதனால்தான் தனது ரவுடி ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக் கொண்டே போடுகின்றனர் தாக்கரேக்கள்!

Pin It