ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத் நக ரத்தை மதப் பதட்டம் நிலவும் நகரமா கவே வைத்திருக்க வேண்டும் என கங்கனம் கட்டி செயலாற்றி வருகின்றன அங்குள்ள இந்துத்துவா அமைப்புகள்.

ஏற்கெனவே முஸ்லிம்களின் தியாகத் திருநாளை (பக்ரீத் பண் டிகையை) முன்னிட்டு ஹைதரா பாத்தில் இந்துத்துவாவினர் கல வரத்தை ஏற்படுத்திய செய்தியை கடந்த இதழ்களில் விரிவாக விவ ரித்திருந்தோம்.

இந்நிலையில், ஹைதராபாத் தின் அடையாளமாக விளங்கும் வரலாற்றுச் சின்னமான சார்மினார் பகுதியில் மீண்டும் மதப் பதட்டத்தை உருவாக்கும் வேளை யில் ஈடுபட்டிருக்கின்றன இந் துத்துவா அமைப்புகள்.

சார்மினாரை ஒட்டியுள்ள பாக்கியலஷ்மி கோவில் சட்ட விரோமாக விரிவாக்கம் செய்யப் படுவதுதான் இந்த வகுப்புப் பதட்டத்திற்கு காரணம்.

இந்தக் கோயிலை சட்ட விரோதமாக விரிவாக்கம் செய்ய நீண்ட காலமாக முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றன இந்துத்துவா அமைப்புகள். கடந்த 1ம் தேதி பாக்கிய லஷ்மி கோவிலின் நிர்வாக உறுப்பினர் கள் கோவிலை விரிவாக்கம் செய் யும் முயற்சியில் கட்டுமானப் பணி களில் ஈடுபட்டிருக்கும் தகவல் ஹைதராபாத் முஸ்லிம்கள் மத்தி யில் பரவியது.

சார்மினார், முஸ்லிம் மன்னர் களின் அடையாளச் சின்னம் என் பதால் அதனை மறைக்கும் வகை யில் பாக்கிய லஷ்மி கோவிலை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் இந்துத்துவாவினர் ஈடுப டுவதாக முஸ் லிம்களில் ஒரு சாரார் கருத்து தெரிவிக்க, இன்னும் சிலரோ சார்மினாருக்கு வெகு அருகாமையில் பள்ளிவா சல் இருக்கிறது. பாக்கிய லஷ்மி கோவிலில் பூஜை புனஸ்காரங் கள் என்ற பெயரில் பள்ளிவாச லில் பாங்கு சொல்லப்படும் நேர மாகப் பார்த்து மணி அடித்தும், இசையை ஒலிக்கச் செய்தும் வகுப்புப் பதட்டத்தை உருவாக் கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது இந்த கோவில் விரி வாக்கம் செய்யப்பட்டால் அது வகுப்புப் பதட்டத்திற்கே வழி வகு க்கும். அந்த நோக்கத்திற்காகவே இந்துத்துவாவினர் இந்தப் பிரச் சினையை கையில் எடுத்திருக் கின்றனர் என்கிறார்கள்.

பாக்கிய லஷ்மி கோவிலின் சட்ட விரோத விரிவாக்கம் ஹைத ராபாத் முஸ்லிம்கள் மத்தியில் எதிர்ப்புகளை உருவாக்க... தகவல் அறிந்த காவல்துறை உடனடி யாக சார்மினாரைச் சுற்றி பாது காப்பை பலப்படுத்தியது.

கலவரத்தை உருவாக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த இந்துத்துவாவினர் மறு நாள் 2ம் தேதி வெள்ளிக்கி ழமை பாக்கிய லஷ்மி கோவிலில் ஆர்த்தி பூஜைக்கு அழைப்பு விடுத் தனர். நூற்றுக்கணக்கான இந்துத் துவாவினர் கைகளில் விளக்கு களை ஏந்திய வண்ணம் கோவி லுக்கு அருகில் திரண்டனர்.

அன்று வெள்ளிக்கிழமை என் பதால் சார்மினாருக்கு வெகு அருகாமையிலுள்ள மக்கா மஸ்ஜித் பள்ளி வாசலில் ஜுமுஆ தொழு கைக்காக முஸ்லிம்கள் குழுமினர். (இந்துத்து வாவினர் குண்டு வெடி ப்பு நடத்திய அதே ஹைதராபாத் மக்கா மஸ் ஜித்தான் இது!)

முஸ்லிம்கள் பெரும் எண்ணிக் கையில் இந்த மஸ்ஜிதில் ஜுமுஆ தொழுகைக்காக கூடுவார்கள் என்று அறிந்து வைத்திருந்த ஹைத ராபாத் சிட்டி போலிஸ் பாது காப்பை அதிகப்படுத்தியதோடு, கலவரம் உருவாகி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு மக்கா மஸ்ஜித் பகுதியை தீவிர மாக கண்காணித்துக் கொண்டி ருந்தது.

அதே சமயம், பாக்கிய லஷ்மி கோவிலில் பூஜை நடக்கப் போவ தாக போன் மற்றும் எஸ்.எம். எஸ். மூலம் அழைக்கப்பட்டிருந்த இந்துத்துவாவினர் காவிக் கொடிகளுடன் திரண்ட வண்ணம் இருக்க... போலீசுக்கு நாடித் துடிப்பு எகிறியது.

பாக்கிய லஷ்மி கோவில் முன் திரண்டிருந்த இந்துத்துவாவி னரை கலைந்து செல்லுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டது. பெரும்பாலானவர்கள் கலைந்து சென்றதும், ஜுமுஆ தொழுகையை முடித்த முஸ்லிம்களும் அமைதி யாகவே கலைந்து சென்றனர். ஆயினும் இளைஞர்கள் சிலர் மஸ்ஜித் முன் தொடர்ந்து நின்று கொண்டிருந்தனர். அவர்களை யும் கலைந்து போகச் சொன்னது போலீஸ்.

தொடர்ந்து பதட்டம் நீடித்த நிலையில், கடந்த 4ம் தேதி ஞாயிற்றுகிழமை இரவு பாக்கிய லஷ்மி கோவில் நிர்வாகம் கோவி லைச் சுற்றி பந்தல் அமைத்து விட்டது என்ற வதந்தி பரவ... சார் மினார் மற்றும் அருகாமையி லுள்ள பகுதிகளில் பதட்டம் அதிகரித்தது.

ஆயிரக்கணக்கான முஸ்லிம் கள் கோவிலுக்கு முன் திரண்ட னர். வரலாற்றுச் சின்னமான சார் மினாரை மறைக்கும் வகையில் கோவிலை விரிவாக்கம் செய்யும் மறைமுக முயற்சி இது என முஸ் லிம்கள் கொந்தளித்தனர்.

பதட்டம் வன்முறை வடிவமெ டுக்க இரு தரப்பிலிருந்தும் நடந்த கல் வீச்சில் போலீஸ் வாகனங் கள் குறி வைத்து தாக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த சம யத்தில் மஜ்லிúஸ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் எம்.எல்.ஏ.க் களான அக்பருத்தீன் உவைசியும், மும்தாஜ் கானும் ஹைதராபாத் பழைய நகரிலேயே (சார்மினார் இருக்கும் பகுதி) இருந்து முஸ்லிம் களுக்கு மத்தியில் பதட்டத்தை தணிக்கும் வகையில் பொது மக்க ளிடம் பேசி விட்டு புறப்பட்டுவிட, சார்மினாரை நோக்கி முன்னேறத் தொடங்கியது கூட்டம். எஸ்.எம். எஸ். மூலம் வதந்தி பரவியதால் சுமார் மூவாயிரம் பேர்வரை திரண்ட முஸ்லிம்கள் சார்மி னாரை நோக்கி செல்ல... போலீஸ் ஒன்றும் செய்ய முடியாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

இந்தத் தகவல் அறிந்து ஸ்பாட் டுக்கு வந்த சார்மினார் தொகுதி எம்.எல்.ஏ. பாஷா காதிரி, திரண் டிருந்த மக்களிடம் 10 நிமிடங்கள் உரையாற்றினார். கோவிலைச் சுற்றி தடுப்புப் பந்தல் எழுப்பப் படாது என்று அவர் உறுதியளித் தபின் அனைவரும் கலைந்து சென்றனர்.

தற்காலிகமாக போலீஸ் நிம்ம திப் பெரு மூச்சு விட்டாலும், சார் மினார் பகுதியில் பதட்டம் முழுவ துமாக தணியவில்லை. எந்நேர மும் கோவில் விரிவாக்கப் பணிகள் இந்துத்துவா சக்திகளால் மேற் கொள்ளப்படும் என்று கூறுகின்ற னர் சார்மினார் பகுதி முஸ்லிம் கள்.

அமைதியை விரும்பும் சார்மி னார் பகுதி இந்துக்களே... சமூக விரோதிகளின் இத்தகைய நடவ டிக்கைகளுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பின்னாலிருந்து ஊக் குவிக்கின்றனர் என்கிறார்கள்.

வகுப்புப் பதட்டத்தை ஆரம்பத் திலேயே தணிக்கத் தவறிய காவல் துறை அதிகாரிகளை கமிஷ்னர் அனுராக் ஷர்மா இடமாற்றம் செய்ய வேண்டும். கோவிலில் வழி படுவதற்காக வருபவர்களைத் தவிர்த்து சார்மினாரைச் சுற்றி நட மாடுபவர்களை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று கூறும் முஸ்லிம்கள்,

2ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்ட நிலையில், கோவில் அருகில் திரண்டிருந்த இந்துத்து வாவினர் வேண்டு மென்றே உரக்க கோஷம் எழுப்பியதை போலீஸ் கண்டு கொள்ளாமல் இருந்தது என்றும் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மஜ் லிஸ் கட்சியின் சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அக்டோபர் 30, 2012ம் தேதி வரை பாக்கிய லஷ்மி கோவில் எந்த நிலையில் இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும் என நீதிமன்றத்தில் கூறியிருப்பதுடன், சார்மினார் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் சட்டம் 1958ன்படி சார்மினாரை தொடும் வகையில் எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்றும், இந்த விஷயத்தில் நீதிமன்ற ஆணையை அமல் படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

பாக்கிய லஷ்மி கோவிலில் பூஜைக்காக அழைப்பு கொடுப்ப வர்களும், கோவிலை விரிவுபடுத் தியே ஆக வேண்டும் என்று கள மிறங்கியிருப்பவர்களும் உள்ளூர் வாசிகள் அல்ல... அவர்களில் பெரும்பாலானோர் குஜராத், ராஜஸ்தான், மஹராஷ்டிரா, உத்தி ரப் பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என ஆந்திர மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாநிலம் விட்டு மாநிலம் வந்து மதக் கலவரத்தை ஏற்படுத்துவது இந்துத்துவாவினரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்!

- ஹைதராபாத்திலிருந்து ஃபெரோஸ் 

பதற்றத்தை உருவாக்கும் இந்துத்துவா!

ஹைதராபாத் நகரம் பதட்டத்தில் இருக் கும் நிலையில் மேலும் இரு தரப்பிலும் பதட்டம் உரு வாக்கும் வகையில அடுத்த டுத்த சம்பவங்கள் அரங் கேறியபடியே இருந்தன.

கடந்த ஞாயிற்றுகிழமை நிலவரப்படி, பாக்கிய லஷ்மி நிர்வாகக் கமிட்டியின் சார்பில், திங்கள் கிழமை (12ம் தேதி) மஹா ஆர்த்தி பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மஹா ஆர்த்தி பூஜைக்காக பேரணி செல்ல மாநகர காவல் துறை அனுமதி மறுத்திருக்கும் நிலையில், இக்கோவிலை நிர்வகிப்பதற்காக இந்துத்துவா உருவாக்கி வைத்துள்ள பாக்கிய லஷ்மி தேவாலயா பரிரக்ஷன் சமிதி என்ற அமைப்பின் ஒருங்கிணைப் பாளரான டாக்டர் பக்வந்த் ராவ், மாந கர போலீசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகை யில் மஹா ஆர்த்தி பேரணி நடைபெறும் என அறி வித்து மக்களைத் திரட்டி வருகிறார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை மஹா ஆர்த்தி பேரணிக்கு போலீஸ் அனு மதி மறுத்ததை எதிர்த்து ஆந்திர மாநில பாஜக தலை வர் கிஷன் ரெட்டியின் தலைமையில் சார்மினாரை நோக்கி பேரணி செல்ல முயற்சித்த பாஜகவினரை கைது செய்தது சிட்டி போலீஸ்.

பாஜக தலைவர் கிஷன் ரெட்டியின் தலைமையில் அக்கட்சியின் மூத்த தலை வர்களான லக்மன், பந்தரு தாத்தத்ரேயா, பத்தாம் பல் ரெட்டி, பிரபாகர், வெங்கட் ரெட்டி உள்ளிட்ட ஒட்டு மொத்த பாஜகவின ரும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டு, போலீஸ், அரசாங்கம் மற்றும் மஜ்லிஸ் இத்திஹாத்துல் முஸ்லமீன் (எம்ஐஎம்) கட் சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பி னர்.

பாஜக தொண்டர்கள் சிலர் போலீஸா ரைப் பார்த்து ஆபாச வார்த்தைகள் பேச... அவர்கள் மீது போலீஸ் லேசான தடியடித் தாக்குதலை நடத்தியது.

காவல்துறை மஜ்லிஸ் கட்சியின் உத்த ரவின் பேரில்தான் செயல்படுகிறது என்று பாஜக தரப்பும், இந்துத்துவாக்க ளுக்கு ஆதரவாக காவல்துறை செயல்ப டுகிறது என மஜ்லிஸ் கட்சியும் குற்றம் சாட்டுகின்றன. விழி பிதுங்கிப் போயிருக் கும் காவல்துறை உச்சகட்ட டென்ஷனில் இருந்தது.

இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11ம் தேதி) காலை கோர்ட் உத்த ரவை மீறி பாக்கிய லஷ்மி கோவிலுக்கு ஓலைக் கூரை வேயும் முயற்சியிலும், அலங்காரம் செய்யும் முயற்சியிலும் இந்துத்துவாவினர் ஈடுபட... உடனே அப்ப குதியில் தடை உத்தரவை போலீஸ் அமுல்படுத்தியது.

30, அக்டோபர் 2012ல் கோயில் இருந்த நிலையிலேயே தொடர வேண் டும் என ஸ்டேடஸ்கோ உத்தரவை கோர்ட் வழங்கியிருந்த நிலையிலும், காவல் துறை உயரதிகாரிகள் கோவிலில் கூரை வேயவும், அலங்காரம் செய்யவும் மறை முக அனுமதியை வழங்கியுள்ளது என குற்றம்சாட்டிய மஜ்லிஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களான அக்பருத்தீன் உவைசி, அஹ்மது பாஷா காதிரி, முஹ சாம் கான், மும்தாஜ்கான் மற்றும் அஹ் மது பலாலா ஆகியோர் சார்மினார் பகுதி யில் ஆர்ப்பாட்டம் நடத்த... அவர்களை கைது செய்தது காவல்துறை.

நமது இதழ் அச்சுக்குப் போகும் (12ம் தேதி காலை) வரை ஏக டென்ஷனில் இருந்தது ஹைதராபாத் ஓல்டு சிட்டி.

மிரண்டு போன காவல்துறை!

கடந்த 9ம் தேதி வெள்ளிக்கிழமை 12 மணியளவில் "ஆர்த்தி' பூஜைக்கு பாக்கிய லஷ்மி கோவிலில் இந்துத்துவாவினர் திரண்டிருக்க... சார்மினாருக்கு அருகிலுள்ள மக்கா மஸ்ஜிதில் ஜுமுஆ தொழுகையை முடித்த கையோடு சார்மினார் பகுதிக்கு வந்த முஸ்லிம்கள் சார்மினாருக்கு உள்ளே இருக்கும் தர்காவிற்கு சென்று "ஜியாரத்' செய்யும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

தொழுகைக்குப் பின் முஸ்லிம்கள் சார்மினார் தர்காவிற்கு வருகை தரவிருக்கிறார்கள் என்ற தகவல் அறிந்து மிரண்டு போன காவல்துறை 1000 போலீஸாரை இறக்கி விட்டு சார்மினாரைச் சுற்றிலும் கடுமையான பாதுகாப்பை போட்டிருந்தது.

Pin It