அல்காய்தா அமைப்பின் சுப்ரீம் தலைவரான உஸாமா பின்லேடன் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. பாகிஸ் தான் தலைநகர் இஸ்லா மாபாத்திற்கு அருகேயுள்ள ஆபாதாபாத் என்ற இடத் தில் தங்கியிருந்த உஸாமா அமெரிக்க ராணுவத்துடன் நேருக்குநேர் மோதி சுடப்பட் டுள்ளார். உஸாமா மரண மடைந்ததைக் தொடர்ந்து அல்காயிதா அமைப்பிற்கு டாக்டர் அய்மன் அல் ஜவா ஹிரி தலைவராக அறிவிக் கப்பட்டுள்ளார்.
உலகின் அதிபயங்கரவாத நாடான அமெரிக்கா அரபு நாடு களின் மீது ஆதிக்கம் செலுத்து வதையும், முஸ்லிம் நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்து நாட் டாமை செய்து வருவதையும் எதிர்த்து அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க அல் காயிதா அமைப்பை உருவாக்கினார் உஸாமா பின் லேடன். முன்னதாக ஆப்கானிஸ்தானை ரஷ்ய - கம்யூனிஸ்ட் படைகள் ஆக்கிர மித்திருந்த கால கட்டத்தில் ஆப்கானியர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து போரிட்டவர் உஸாமா. அது முதல் ஆப்கானிலேயே வாசம் செய்து வந்தார்.
மதம் தொடர்பான விஷயங்களில் உஸாமாவிற்கு ஆர்வம் அதிகம். ஜிஹாத் தொடர்பான இஸ்லாமிய கருத்துகள் அவரை ஈர்க்கவே ஏகாதிபத்தியங்களை எதிர்க்கும் மனப்போக்கு உஸாமாவுக்கு ஏற்பட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் அவ்வப் போது மீடியர்களில் சொல்லி வந்துள்ளனர்.
பொருளாதாரப் பின்னணி கொண்ட - அதே சமயம் அமெ ரிக்க வல்லாதிக்கத்தை விரும்பாத அரபு நாடுகள் உஸாமாவின் அமெரிக்க மற்றும் ரஷ்ய எதிர்ப் புகளுக்கு மறைமுக ஆதர வளித்து வந்துள்ளனர். இதனால் அந்நாடுகளிடமிருந்து நிதி திரட்டி போராளிகளுக்கு ஆயு தங்களைப் பெற்றுத் தருவதற் காக "மக்தப் அல் கதாமத்' என் னும் அறக்கட்டளையை நிறுவி யுள்ளார் உஸாமா.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த உஸாமா 1979ல் சோவியத் ரஷ் யாவிற்கு எதிரான போர் முடிவ டைந்த பின் சவூதிக்குத் திரும்பி னார். இக்காலக்கட்டத்தில்தான் அரபு நாடுகள் மீதான அமெரிக் காவின் ஆதிக்கம் அதிகரித்தது. நூறு சதவிகித இஸ்லாமிய ஆட் சியை நிறுவ வேண்டும் என்பதில் தீராத தாகம் கொண்ட உஸாமாவின் பாதை புரட்சிப்பாதை யாகவே தொடர்ந்தது.
அமெரிக்க எதிர்ப்பு சிந்த னையை வெளிப்படுத்தி வந்த உஸாமாவை மிரட்சியுடன் பார்த்த அமெரிக்கா தந்த அழுத் தத்தின் காரணமாக உஸாமாவிற்கு எதிராக திரும்பிய சவூதி அரசு, உஸாமா அரசின் சட்டங் களுக்கு எதிராகச் செயல்படுகி றார் என்று கூறி சவூதியிலிருந்து அவரை வெளியேற்றி அவரது குடியுரிமையையும் ரத்து செய்தது.
அமெரிக்க எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்கா, நைரோபி, கென்யா, தான்சா னியா, ஒக்லஹமா போன்ற இடங்களிலிருந்த அமெரிக்கத் தூதரகங்களை குண்டு வைத்து தகர்த்த சம்பவங்களில் உஸாமா மூளையாக செயல்பட்டார் என அமெரிக்கா அலறியது.
இக்காலகட்டங்களில் சூடானில் தங்கியிருந்த உஸாமாவை வெளியேற்றும்படி சூடான் அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கத் துவங்கியது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த அழுத்தத்தின் காரணமாக உஸாமாவை நாடு கடத்துவதாக 1996ல் அறிவித்தது சூடான்.
அமெரிக்காவிற்கு உச்சகட்ட கோபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது அல் காயிதா கொடுத்த ஃபத்வா (மதத் தீர்ப்பு) தான். "பாலஸ்தீனுக்கு எதிராகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் நடந்து கொள்வதை அமெரிக்கா கைவிட வேண்டும். இஸ்லாமிய நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட் டிருக்கும் அமெரிக்க ராணுவப் படையினர் உடனே வெளியேற்றப்பட வேண்டும். இதைச் செய்யாதவரை அமெரிக்க ராணுவத்தினரை கொன்று குவிக்க வேண்டும்'' என்றது உஸாமாவின் ஃபத்வா.
உஸாமாவையும் அவரது அமைப்பான அல் காயிதாவை யும் கண்டு அஞ்சிய அமெரிக்கா அரபு நாடுகளிலும், புரட்சிகர போராட்டங்கள் நடந்து கொண் டிருக்கும் நாடுகளிலும் உஸாமாவிற்கு பெருகிவரும் ஆதரவை தடுத்து நிறுத்த முடிவு செய்தது. அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்த உஸாமாவை சர்வதேச தீவிரவாதியாக, உலகமே கண்டு மிரளும் பயங்கரவாதியாக அடையாளப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும்.
உலகையே உலுக்கிய 2001 செப்டம்பர் 11 இரட்டை கோபுரத் தாக்குதல் சம்பவத்தை இதற்கு வசதியாக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. இத்தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக உஸாமாவை அறிவித்த அமெரிக்கா அதற்கான அறுவடையும் செய் தது.
"பயங்கரவாத்திற்கு எதிரான போர்' என்ற சுலோகத்தை முன் வைத்து நேச நாடுகளை அணி திரட்டி, ஆப்கானிலிருந்த உஸாமாவை பிடிக்கப்போவதாக அறிவித்து - அப்போது இஸ்லாமிய ஆட்சியை ஆப்கானில் நிலை நிறுத்தியிருந்த தாலிபான் அரசுக்கு எதிராக போரை அறிவித்தது. இரட்டை கோபுரத் தாக்குதலில் உஸாமாவிற்கு எவ்விதப் பங் கும் இல்லை. ஆனால் ஆதாரங்களை அமெரிக்கா சமர்ப்பித்தால் உஸாமாவை ஒப்படைக்கத் தயார் என்ற தாலிபான்களின் நியாயத்தை புறக்கணித்த அமெரிக்கா ஆப்கானை அழித்து நாசப்படுத்தியது.
இரட்டை கோபுரத் தகர்ப்பில் அல் காயிதாவிற்கு இருப்பதாகச் சொன்ன குற்றச்சாட்டை இன்று வரை அமெரிக்கா நிரூபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானில் இருந்தபடியே அமெரிக்க கூட்டுப் படையை எதிர்த்து போரிட்டுக் கொண்டி ருந்த நிலையில்தான் உஸாமா பின் லேடன் கொல்லப்பட்டிருக் கிறார். புரட்சியாளராக உருவாகி போராளியாக மாண்டிருக்கிறார் உஸாமா.
உஸாமாவின் மரணம் அமெரிக்காவிற்கு வெற்றி என்கிறார் பிளாக் புஷ் என்று வர்ணிக்கப் படும் ஒபாமா. ஆனால் சக்தி வாய்ந்த சேடிலைட் வசதிகள், அதிநவீனப்படுத்தப்பட்ட ராணு வம் மற்றும் நேசநாட்டுப் படை கள் என அத்தனை அஸ்திரங்க ளையும் பிரயோகித்து உஸாமாவை நெருங்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது அமெரிக்காவிற்கு.
உஸாமாவின் மரணம் அமெ ரிக்காவிற்கு வெற்றியல்ல... ஏனெனில் அமெரிக்காவின் வல்லாதிக் கம் தொடரும் வரையில் ஆயிரம் உஸாமாக்கள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள். அதை அமெரிக்காவால் தடுத்து விட முடியாது!
பாகிஸ்தானா? அமெரிக்காவா?
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகேயுள்ள ஆபாதாபாத்தில் தங்கியிருந்த உஸாமாவை சுட்டுக் கொன்றதாக அமெரிக்கா சொல்கிறது. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்தத் தகவல் தெரியவில்லை. பாகிஸ்தானின் ராணுவத்திற்கோ, உளவுத்துறைக்கோ இத்தகவல் தெரியவில்லை என் ஒப்புக் கொள்கிறார். பாக். அதிபர் கிலானி. ஒரு நாட்டுக்கே தெரியாமல் அந்நாட்டில் தங்கி யிருப்பதாக கூறப்படும் ஒருவரை சுட்டுக் கொல்வது என்பது வரம்பு மீறல் மட்டு மல்ல அந்நாட் டின் இறையான்மையை கேலிக் கூத்தாக்கும் செயல்.
இவ்வளவுக்கும் பாகிஸ்தான் விமானப் படைத் தளத்திலிருந்து 4 ஹெலிகாப்டர் கள் பறந்து சென்று உஸாமா தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ஆனால் பாக் ரணுவத்திற்கு இது தெரியவில்லை. இன்னொருபுறம்-பாகிஸ்தான் ராணுவம்தான் உஸாமாவை சுட்டு வீழ்த்தியது என்றும் இந்தத் தகவலை வெளியிட்டால் அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை மீதான மதிப்பு குறைந்து விடும் என்பதால் அமெரிக்க ராணுவமே உஸாமாவை கொன்றதாக நாடகமாடுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கு சான்றாக உஸாமாவுடன் நடந்த மோதல் காட்சிகள் எதுவும் மீடியாக்க ளில் வெளியிடப்படவில்லை. அவரது உடல் கூட முழுமையாக காண்பிக்காமல் முகத்தை மட்டும் காண்பித்து, அவர் எந்த இடத்தில் கொல்லப்பட்டார் என்கிற பின்னணிக் காட்சியும் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. எனவே பாக் ராணுவம் ஏற்கனவே உஸாமாவை சுட்டுக் கொன்றதை அமெரிக்கா தனக்கு சாதகமாக்க நாடகமாடுகிறது என்கிறது பாகிஸ்தான் ஊடகங்கள்.
உஸாமாவுடன் நேருக்கு நேர் நடந்த மோதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் ராணுவ மேஜர். மற்ற இருவர் ராணுவ வீரர்கள். பின்லேடன் தரப்பில் அவரது மகனும், அவரது சகோதரியின் 2 மகன்களும் கொல்லப்பட்டுள்ளனர். உஸாமாவின் 3 மனைவிகளை ராணுவம் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளது.