மஹாராஷ்ரா மாநிலத்தில் பாதுகாப்பற்ற கருக் கலைப்பு தாய்மார்களுக்கு பெரும் சவாலாகத் திகழ்கிறது என மாநில சுகாதாரத்துறை பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

கருக்கலைப்பு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளின் காரணமாக மஹாராஷ்டிரா மாநில பெண்கள் மத்தியில் இறப்பு விகிதம் 35 சதவீதத்திற்கும் மேலாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல்களாகத் தருகிறது.

கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் 1300 பேறுகால மரணங்கள் மாநில அளவில் நிகழ்த்திருக் கின்றன என்றும் இவற்றில் 27 சதவீத மரணங்கள் பிரசவத் திற்கு பிறகான இரத்தக் போக்கி னாலும், 8 சதவீத மரணங்கள் புண் உண்டாகி சீழ் பிடிப்பின் காரணமாகவும், 1 சதவீத மரணங்கள் கருக்கலைப்பினாலும் மற்றவை மகப்பேறு தொடர்பான பல்வேறு காரணங்களினாலும் நிகழ்ந்திருப்பதாகவும் அதிர்ச்சித் தகவலை மஹாராஷ் டிரா சுகாதாரத்துறை கூறுகிறது.

கடந்த 2011ம் ஆண்டின் துவக்க நான்கு மாதங்களுக்குள் பேறு கால மரணத்தை தழுவிய பெண்கள் 282 பேரில் இந்தூர் நகரத்தில் மட்டும் 36 பெண்கள் பலியாகியுள்ளனர். ஜபல்பூரில் 69 பெண்கள் பலியாகியுள்ளனர். அபார்ஷன் தொடர்பில் நிகழும் மரணங்கள் குறித்த முறையான பதிவுகள் இல்லையென்றும், சிறிய அளவிலான டிஸ்பென்சரி களில் டீன் ஏஜ் மற்றும் திரும ணமாகாத பெண்கள் கருக்கலைப்பில் ஈடுபட்டு அதிகளவில் மரணத்தை தழுவுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்ற னர்.

மஹாராஷ்டிரா மட்டுமல்லாமல் அண்மைக் காலமாக பல மாநிலங்களிலும் கருக்கலைப்பு மரணங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. திருமணமாகாத பெண்கள், கல்லூரி மாண விகள் போன்றோர் காதும் காதும் வைத்தார்போல் கருக்கலைப்பில் ஈடுபடுகின்றனர். இதற்கு தனியார் மகப்பேறு மருத்துவமனைகள் பெரிதும் துணை போகின்றன.

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர்.

இந்த கருக்கலைப்பு மற்றும் அது தொடர்பான மரணங்கள் குறித்து தமிழக சுகாதாரத்துறை கூடுதல் கவனம் எடுத்து தாய் மார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மக்கள் தொகை அடிப்படையிலான ஆண் - பெண் விகிதத்திலும் இந்த கருக்கலைப்பு மரணங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வ லர்களின் கவலையாக இருக்கிறது.

Pin It