போஸ்னியா - செர்பியா இனப் போராட்டத்தின்போது முஸ்லிம் பகுதியான ஸ்ரெப்ரெனிகாவில் 8 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட முஸ் லிம்கள் கூட்டாக படு கொலை செய்யப்பட்டனர்.

இரண்டாவது உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் ஐரோப்பிய மண்ணில் நிகழ்ந்த பெரும் கூட்டுக் கொலை இது என வர்ணிக்கி றார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

1992-95க்கு இடையேயான காலகட்டத்தில்தான் இனவெறி செர்பிய இராணுவம் மிக அதிக அளவில் முஸ்லிம்களை வேட்டை யாடியது.

1995ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி ஸ்லிப்ரெனிகா நகரை சுற்றி வளைத்த செர்பிய இராணு வம், முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தேடித்தேடி படு கொலைகளை அரங்கேற்றினர். செர்பிய இராணுவ வெறியாட்டத் தில் இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டனர்.

இந்தப் படுகொலையை சர்வதேச நீதிமன்றம் இனப்படுகொலை என அறிவித்தது. செரப்னிகா சம்பவங் களின் கொடுமைகளை கடந்த ஆண்டு அங்கு கண்டுபிடிக்கப் பட்ட கல்லறைகள் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இந்தக் கல்லறைகளிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட உடல்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்ப டுத்தியதில் 613 பேர்களின் உடல் கள் அடையாளம் காணப்பட்டுள் ளது. செரப்ரெனிகாவில் உயி ரோடு வாழ்ந்த நபர்களின் இரத் தத்தின் மாதிரிகளுடன் ஒப்பீடு செய்து உடல்களை அடையாளம் கண்டிருக்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

போஸ்னியா முஸ்லிம் படு கொலை நடந்து 16வது ஆண்டு நினைவு தினம் செரப்னிகாவிற்கு அருகிலுள்ள போட்டோக்கரி என்ற இடத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண் டுள்ளனர்.

ஆனால் சர்வதேச சமுதாயம் பதறித் துடித்துக் கண்ணீர் வடித்த போஸ்னியப் படுகொலை செர்பி யர்களிடம் இன்னமும் எவ்வித தாக்கத்தையோ, குற்ற உணர்ச்சியை யோ ஏற்படுத்தவில்லை. இதனை சுட்டிக் காட்டும் போஸ்னியாவின் முன்னாள் அதிபர் அலிஜா இஸ்ஸத் பெகோவிச்சின் மகனான பாசிர் அஸ்ஸத் பெகோவிச், "செரப்ரெனிகா கூட்டுப் படுகொலையின் உண்மையை செர்பிய மக்கள் இப்பொழுதும் புரிந்து கொள்ள வில்லை'' என்கிறார்.

பாசிர் அஸ்ஸத் இப்படிக் கூறுவதற்கு காரணம் இருக்கிறது. குஜராத் முஸ்லிம் இனப்படு கொலையை நிகழ்த்திய மோடி வகையறாக்கள் எப்படி எவ்விதக் குற்றவுணர்வுமில்லாமல் - அந்தப் படுகொலைகளை நியாயப்படுத்தி வருகிறார்களோ, அந்தப் படுகொ லைகளில் ஈடுபட்ட குண்டர்களை "சேவக்' (கரசேவை) என்று அழைக்கிறார்களோ - மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை சங்பரிவா ரத்தினர் எப்படி போற்றுகிறார் களோ, அதேபோன்று போஸ்னி யாவில் முஸ்லிம் இனப்படுகொ லைகளை தலைமையேற்று நடத் திய ராதோவான் கராஜிச், ராட்கே மிலாடிச் ஆகியோரை செர்பிய மக்கள் வீரப் புருஷர்களாக கருது கிறார்கள்; படுகொலையை நியா யப்படுத்துகிறார்கள்.

அவர்களால் புரிந்து கொள்ள இயலாததுதான் இதற்குக் கார ணம். அதே சமயம் போஸ்னிய முஸ்லிம்களுக்கோ செரப்ரெனிகாவின் கொடுமைகள் நெஞ்சை விட்டு அகலவில்லை. சரியாக 16 ஆண்டுகள் கழித்து - செரப்னிகாவில் படுகொலை செய்யப்பட்ட அந்த 613 பேர்களின் உடல்களை நல்லடக்கம் செய்து (ஜனாஸô) தொழுகை நடத்தியுள்ளனர் போஸ்னிய முஸ்லிம்கள்.

போஸ்னிய படுகொலையின் சூத்திரதாரியான ராட்கே மிலா டிக் கைது செய்யப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரை இனப்படு கொலையாளனாக அறிவித்து, அதிகபட்சமாக மரண தண்டனை விதித்தாலும் கூட அது போஸ் னிய மக்களின் இழப்புகளுக்கு பரிகாரமாகவோ, ஈடாகவே ஆக முடியாது!

- ஹிதாயா

Pin It