கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள்

அமெரிக்காவை ஆட்டிப் படைக்கின்றன யூத சக்திகள் என்பது அமெரிக்க அரசியலை உற்று நோக்குபவர்களுக்குப் புரியும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூத சக்திகள் வலுவாகவே செல்வாக்கு செலுத்தி வருகின்றன என்பது பலருக்குத் தெரியாது. இதற்கு சமீபத்திய உதாரணம் தான் பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அடாவடித்தனத்தைக் கண்டிக்க இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த சமூக ஆர்வலர்கள் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டது. ஐரோப்பாவில் இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. பசி, பட்டினியால் வாடும் காஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை துறைமுகங்களில் தடுத்து நிறுத்தி, பேயாட்டம் ஆடும் இஸ்ரேலின் வெறித்தனத்தையும் காஸா மீது அது செலுத்தி வரும் ஆதிக்கத்தையும் கண்டிக்கும் வகையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் கவன ஈர்ப்பு கருத்தரங்கை நடத்துவதற்கு, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாடுகளிலிருந்து சமூக ஆர்வலர்கள் புறப்பட்டனர். இவர்கள் டெல்அவிவிற்கு செல்வதற்கான முறையான விசா அனுமதியையும் பெற்றிருந்தனர்.

பாரீசின் சார்லெஸ் குவெல் விமான நிலையத்திலிருந்து டெல் அவிவ் செல்லவிருந்த பாலஸ்தீன ஆர்வலர்கள் ஹங்கேரியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதேபோல - பெல்ஜியம் நாட்டின் புரூ ùஸல்ஸ் விமான நிலையத்திலிருந்து சுவிஸ் ஏர் விமானம் மூலம் புறப்பட இருந்த பாலஸ்தீன ஆர்வலர்கள் அவ்விமான அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.

ஐரோப்பாவின் மிகப் பெரிய விமானச் சேவையை வைத்திருக்கும் ஜெர்மனியின் லுஃப்தான்ஸô நிறுவனத்தின் அங்கம் தான் சுவிஸ் ஏர்.

முறையற்ற வகையில் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்ட விதம் குறித்து கண்டனம் தெரிவித்த சமூக ஆர்வலர்கள், “இஸ்ரேலிய தீவிரவாதிகளுக்கு சுவிஸ் ஏர் உடந்தையா?'' என விமான நிலையத்திலேயே கோஷமெழுப்பினர். முன்னதாக மேற்படி விமான நிறுவனங்களுக்கு இஸ்ரேலிய அரசு கொடுத்த பெயர்ப் பட்டியலின்படியே சமூக ஆர்வலர்களை சுவிஸ் ஏர் நிறுவனமும், ஹங்கேரியன் ஏர் நிறுவனமும் தடுத்து நிறுத்தியுள்ளது.

“பாலஸ்தீனத்திற்கு செல்வதற்கு பிரச்சினை இருப்பதாக மக்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. நீங்கள் பொய் சொல்கிறீர்கள்; நாங்கள் ஏன் பாலஸ்தீனத்திற்கு செல்லக் கூடாது? ஏன் டெல் அவிவிற்குச் செல்லக் கூடாது? இதிலிருந்து ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள். காஸா மட்டுமல்ல, பாலஸ்தீனத்தின் முழு நிலப்பரப்புமே இஸ்ரேலின் ஆதிக்கத்திலேயே இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளீர்கள். இருக்கட்டும்! அது இஸ்ரேல்! அங்கு என்ன பிரச்சினை வேண்டுமானாலும் எழலாம்; ஆனால் இது ஐரோப்பா! மனித உரிமை விவகாரங்களில் உலகத்துக்கே முன்னுதாரணமாக இருக்கிறீர்கள். இங்கு வைத்து எப்படி உங்களால் இப்படி தடுத்து நிறுத்த முடிகிறது...?'' என்று கொந்தளித்துள்ளார் சமூக ஆர்வலரான காலெட் என்பவர்.

டெல் அவிவில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து புறப்படவிருக்கும் நபர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என இஸ்ரேலிய அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த ஜூலை 6ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான நிறுவன சேவையில் கூட யூத சியோனிச வெறியை ஊட்டியிருக்கும் இஸ்ரேலை உலகின் அதிபயங்கரவாத நாடாக சர்வதேச சமுதாயம் அடையாளப்படுத்த வேண்டும்.

- ஃபைஸ்

Pin It