சில நாட்களுக்கு முன் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தமால்பூர் என்ற இடத்தி லிருந்து மத்தியப் பிரதேச மாநி லம் சாகர் மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து தொழிற்சாலைக்கு சென்ற 6 லாரிகள் ஒட்டு மொத்தமாக காணமால் போய் விட்டதாக வந்த செய்திகள் நாட்டையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீன்டும் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் எண்ணிக் கையில் வெடிமருந்து லாரிகள் மாயமாகி இருப் பது நாட்டு மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் தமால்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான ஆர்.இ.சி.எல் என்ற தொழிற்சாலையிலிருந்து மத்திய பிரதேசம் மாநி லத்தில் சந்தேரி மாவட்டத்தில் உள்ள தொழிற் சாலைக்கு 103 லாரிகள் டெட்டனேட்டர்களும், ஜெலட்டின் குச்சிகளும் அனுப்ப பட்டன.

இந்த லாரிகள் இதுவரையில் சந்தேரி மாவட் டத்தில் உள்ள தொழிற்சாலைக்கு வந்து சேர வில்லை. இந்த லாரிகள் எந்த இடத்தில் இருந்து கடத்தப்படுகிறது? எங்கு கடத்தப்படுகிறது? யாரால் கடத்தப்படுகிறது? என்பது இது நாள் வரையில் கண்டுபிடிக்கப் படவில்லை. முன்னதாக வெடிப்பொருள்கள் கொண்டு செல்லப்பட்ட சாகர் மாவட்ட தொழிற்சாலை மற்றும் தற்போது வெடிப்பொருள்கள் கொண்டு செல்லப்பட்ட சந்தேரி மாவட்ட தொழிற்சாலை ஆகிய இரண்டு தொழிற்சாலை உரிமையாளர் ஜெய்கிஷன் அஸ்வானி என்கிற தனிநபர் தொழிற்சாலைக்கு வந்த லாரிகள் மாயமான விவகாரத்தில் ஜெய்கிஷன் அஸ்வானிக்கு தொடர்பு இருக்கிறதா என்று விசாரிப்பது குறித்து மத்திய பிரதேச போலீஸ் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை.

ஏற்கனவே வெடிமருந்து ஏற்றிய லாரிகள் ஒட்டு மொத்தமாக காணாமல் போன நிலையில் அடுத்து பெரிய எண்ணிக்கையில் வெடிமருந்து லாரிகள் தங்கள் மாநில தொழிற்சாலைக்கு வருவதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்திருக்க வேண்டிய மத்திய பிரதேச போலீஸôர், மெத்தனமாக இருந்தது வெடி மருந்து லாரி கடத்தலுக்கும், போலீஸôருக்கும் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாபர் மஸ்ஜித் வழக்குத் தொடர்பான இறுதித் தீர்ப்பு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் நாடெங்கும் கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில், பெரும் எண்ணிக்கை யில் வெடிமருந்து லாரிகள் பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் காணாமல் போவது பாபர் மஸ்ஜித் தீர்ப்பையொட்டி நடக்கவிருக்கும் நிகழ்வுகளுக் கான அறிகுறியாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவிலும், மஹாராஷ்டிராவில் மாலேகான், ஹைராபாத்தில் மெக்கா மஸ்ஜித், கோவா மார்சாவோ ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் இந்துத்துவா தீவிரவாதி கள் கைது செய்யப்பட்டதும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவது பற்றி இந்துத்துவா நடத்திய உரையாடல்களை ஹெட்லைன்ஸ் டுடே வெளிப்படுத்தியதையும் உற்று நோக்கும் போதும், விஸ்வ இந்து பரிஷத்தின் முக்கியத் தலைவர் பிரவீன் தொகாடியா மத்திய பிரதேசத்திலும் மற்ற மாநிலங்களிலும் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய அபிநவ் பாரத்திற்கு 1 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ள தகவல் கள் வெளிவந்துள்ளதையும் தற் போது வெடிமருந்து லாரிகள் மாயமாகி உள்ளதையும் ஒப்பிட்டு பார்க்கும் போது வட மாநிலங் களில் பெரும் வன்முறைத் தாக்குதல் நிகழ் வதற்கான முன்னோட்டம் என்றே தோன்கிறது.

மத்திய அரசு உடனடியாக வெடிருந்து லாரிகள் காணாமல்போன விவகாரத்தை விசாரிக்கும் பொறுப்பை தீவிரவாத தடுப்புப் பிரிவிடம் வழங்க வேண்டும்.  நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக் கும் பெரிய அளவிலான வெடிமருந்து கடத்தலுக்கு துணைபோன அல்லது வெடிமருந்துகளை பாதுகாப்பாக கொண்டு செல்வதில் கோட்டை விட்ட மத்திய பிரதேச அரசின் போலீஸ் அதிகாரிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். 

அப்போதுதான் வெடிமருந்துக் கடத்திய தீவிரவாதிகள் யார்? அதற்கு துணை நின்றவர்கள், திட்டம் தீட்டிய சூத்திரர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியவரும். எதிர் காலத்தில் வெடிமருந்து லாரிகள் கடத்தப்படுவதிலிருந்து தடுக்கப்படும்.

இதற்கு பிறகாவது மத்திய அரசு விழித்துக் கொள்ளுமா? அல்லது பெரிய அளவில் தாக்குதல் நிகழ்ந்த பிறகு கையைப் பிசைந்து நிற்குமா? இது மக்கள் மத்தியில் எழும் கேள்வி.

 - அபு லியாகத்

Pin It