காவிரியிலும் அதன் துணை ஆறுகளிலும் 73 திட்டங்களுக்கு மேலாக வகுத்து 465 நூறு கோடிக் கனஅடி (டி.எம்.சி.) நீரை முற்றாகப் பயன்படுத்த விரைந்து செயல் பட்டது கருநாடக மாநிலம். இவை அனைத்திற்கும் ‘காவேரிப் பெருந்திட்டம்’ (காவேரி மாஸ்டர் பிளான்) என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இவற்றில் பெரும் பாலான வேலைகள் முடிந்துவிட்டன.

பங்காரப்பா முதல்வராக இருந்தபோது, இன்னும் மூன்று ஆண்டுகளில் ‘காவேரிப் பெருந்திட்டம்’ நிறைவேறி விடும் எனக் கூறினார். அந்தப் பெருந் திட்டத்தில் வெங்காலூருக்குக் குடிநீர் வழங்குவது சேராது; சிவசமுத்திரம் அருவிக்குக் கீழே உள்ள நீர்வள மின் நிலையம் சேராது; மேகதாது திட்டமும் சேராது.

இவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்குக் கருநாடகம் எந்தச் சட்டத்தையும் ஞாயத்தையும் பார்க்க வில்லை. ஒப்பந்தங்களை மீறியும் தமிழக அரசின் ஒப்புதல் இன்றியும் நடுவணரசின் நீர் ஆணையத்தையும் திட்டக் குழுவையும் நீர்வளத்துறையையும் மீறியும் நடுவணரசின் ஒப்புதல் இன்றியும் தொடர்ந்து தனிநாடு போலச் செயல்பட்டுவருகிறது.

இவற்றைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு செய்த முயற்சி மிகக் குறைவு. இவைபற்றிய உண்மைகளை ஆட்சியாளர் கள் பொதுமக்களுக்குச் சொல்வதில்லை.

கேரளத்தின் பங்கையும் கொடுத்த பிறகு தமிழ் நாட்டில் ஓடும் காவிரி வற்றிப் போகப் பத்து ஆண்டுகளே ஆகும்.

அதன் விளைவுகளைத் தமிழ்நாடு தாங்குமா?

காவிரியில் கருநாடக அரசு நிறைவேற்றிவரும் திட்டங்கள்

தற்போதுள்ளதும் நடைபெற்றுக்கொண்டிருப்பதுமான திட்டங்கள்

எண்

திட்டத்தின் பெயர்

ஆயக்கட்டு

(எக்தேர். ஆயிரங்களில்)

பயன்படுத்தும் அளவு

(டி.எம்.சி.யில்)

1

அணைக்கட்டுக் கால்வாய்கள்

77.1

57.7

2

கிருட்டிணராசசாகர்

79.3

61.2

3

கான்வா

2.0

1.2

4

பைரமங்கலா

1.6

1.0

5

மார்க்கோனபள்ளி

6.1

4.0

6

எப்பகல்லா

1.2

0.4

7

நுபு

10.5

7.7

8

சிக்ககோலே

1.7

0.7

9

மங்களா

0.8

0.6

10

சுவருணவதி (உறுதிப்படுத்தல்-4034எக்.)

2.8

3.6

11

குண்டால் (உறுதிப்படுத்தல் - 4064 எக்.)

4.0

1.4

12

நல்லூர் அமனிக்கரை

1.3

0.3

13

காமசமுத்திரம்

3.1

0.8

14

அச்சன கோப்பலு

2.3

0.6

15

ஏமாவதி

283.6

54.7

16

ஒட்டகோலே

7.5

2.4

17

யாகாச்சி

21.5

5.7

18

கபினி

87.9

85.0

19

ஏறங்கி

54.6

18.0

20

சிக்கிடிகோலே

1.7

0.8

21

மஞ்சனபேலே

3.8

0.8

22

தரக்கா

7.0

3.2

23

அருக்கவதி

8.6

3.4

24

இக்கலூர்

4.0

1.8

25

தேவராச அர்சு வருணக்கால்வாய்

32.4

10.5

26

உதுதோரகல்லா

6.3

1.2

27

கிருட்டிணராசசாகரைப் புதுப்பித்தல்

2.0

-

28

சிறுபாசனத் திட்டங்கள்

250.6

71.3

29

குடிநீர் வழங்கல்

-

28.0

 

மொத்தம்

965.3

407.7

 

மேலும் கட்டப்படவுள்ள திட்டங்கள்

30

இலக்குமணத் தீர்த்தம்

2.8

1.5

31

கிருட்டிணராசசாகர் விரிவாக்கம்

45.5

8.2

32

செங்கவாடி

2.6

1.3

33

உலோகபவானி

3.0

2.0

34

பூரிகள்ளி ஆற்றுநீரேற்றுப் பாய்சனத்திட்டம்

2.6

1.4

35

சிறு பாய்சனத் திட்டங்கள்

-

22.0

36

மின் எடுத்தல்

 

 

37

மின்எடுத்தல் நீர்தேக்கச் சேதாரங்கள்

 

 

 

நீர்வள மின்நிலையங்கள்

 

 

 

மொத்தம்

91.2

57.3

 

மேற்கண்ட இரண்டும் சேர்த்து

 

இப்போதுள்ளதும் நடைபெற்றுக் கொண்டிருப்பதுமான திட்டங்கள்

965.3

407.7

 

மேலும் கட்டப்பட உள்ள திட்டங்கள்

91.2

57.3

 

மொத்தம்

1056.5

465.0

 குறிப்பு : மேலுள்ள குறிப்புகள் அனைத்தும் கருநாடக அரசின் நீர்ப்பாசனத் துறை வெளியிட்டுள்ள ‘காவேரி நீர்த் தகராறு’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை (பக். 40-42)

தமிழ்நாட்டில் இதுபோல் ஏதேனும் திட்டம் உண்டா என்பதை எண்ணிப் பாருங்கள். இப்படியே போனால் காவிரி வற்றிப் போவதைத் தடுக்க முடியுமா?

 

 

Pin It