தாய்மொழியைப் பேசாமல் தாழ்மொழியைப்  பேசுவதால்

வாழ்ந்திடுமா வாழ்ந்த மொழி?

நான்குசொல் சொன்னால் இரண்டதில்

                                                                ஆங்கிலமா?

நாண்டுகொண்டு சாவதே மேல்

கலப்படம் செய்து வருணசாதி ஓட்டென்றால்

தாய்மொழியை ஓட்டிவிட்டான் தமிழன்

பலநாடு சென்று பிழைக்கவே    கல்வியென்றால்

நம்நாட்டிற் கேதிங்கு நாதி?

படிப்பினைத் தந்தது பாடநூல் மட்டுமா

பட்டறி வென்றும் அறி

இருவேறு இந்நிலப் போக்கு; மொழிவேறு

தாய்மொழி என்பது வேறு

பெயரில் சடங்கினில் கல்வியில்

                                                கோவிலில்

எங்குதான் நீதமிழன் காட்டு?

பழியாவும் தீர உடனிங்கு தேவை

மொழிமானம் என்றே மொழி

- பாவலர் வையவன்

Pin It