*             சாமிப்படக் காலண்டரை

                கழட்டியெறிந்தது

                நாத்திகக் காற்று.

*             விழுந்து கிடந்த தமிழ்ச்சமூகம்

                எழுந்து நிமிர விழுதானது...

                பெரியாரின் தாடி.

*             அடிமை இருளை

                அடித்து விரட்டியது...

                பெரியாரின் ஒற்றைக் கைத்தடி

*             மூட இருட்டை விரட்டு.

                உனக்குள் ஒளிரும்

                பகுத்தறிவுச் சுடர்.

*             சாதி அழுக்கைக் களைந்தெறி.

                மனிதக் கடலில் துளியாகு.

                மானுடம் சொல்லும் மனிதன் நீயென்று.

- வந்தவாசி மு.முருகேஷ்
Pin It