எழுபத்தோரு ஆண்டு களாக வெளிவந்து கொண்டிருக்கிற ‘தினத்தந்தி’தமிழ் நாளிதழின் உரிமையாளராகிய சிவந்தி ஆதித்தன் 17.4.2013அன்று 76ஆம் அகவையில் மறைந்துவிட்டார்.இவர் இந்தத் தமிழ் நாளிதழ் தொடக்கத்தில் மூன்று நகரங்களிலிருந்து மட்டும் வெளிவந்து கொண்டிருந்ததை தற்போது மும்பை முதற்கொண்டு பதினைந்து நகரங்களிலிருந்து வெளிவரும் பதிப்பாக வளர்த்தெடுத்துள்ள சிறப்புக்கும் பெருமைக்கும் உரியவர். இவரின் தந்தையார் சி.பா.ஆதித்தன் அவர்கள் 1942இல் தொடங்கிய இந்நாளிதழில் தமிழ் மக்களைக் கவரும் வண்ணம் அன்றாடம் மக்களைக் குறிப்பாக எளிய மக்களை வயக்கும் பல்வேறு செய்திகளை எளிய தமிழில் தந்து தமிழ் நாளிதழ் படிக்கும் பழக்கத்தைக் கொள்வதற்கு ஆர்வமூட்டினார்.

அவ்வகையில் தமிழ் நாளிதழ்களுள் அதிகமாக விற்பனை பெற்றுவரும் முதல்நிலை எய்தச் செய்ததைத் தொடர்ந்து 40ஆண்டுகளாக முதல் நிலையைத்தக்க வைத்து ஒரு கோடிக்கு மேலாக விற்பனை பெற்றுவரும் நாளிதழாகக் தினத்தந்தியைத் திகழவைத் துள்ள பெருமைக் குரியவர் சிவந்தி ஆதித்தன்.

இவர் செய்தி ஊடகத்துறையில் சிறப்பாகச் செயல் பட்டதுமின்றி நாட்டின் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக,குறிப்பாகத் தமிழரின் விளையாட்டான கபடி விளையாட்டை ஒலிம்பிக் போட்டி விளையாட்டுகளுள் ஒன்றாகச் சேர்ப்பதற்கும் பெரும் பங்காற்றினார் என்பது நினைவுகூரத்தக்கது.இவர் இந்திய ஒலிம்பிக் போட்டி விளையாட்டுக் குழுவின் தலைவராகப் பல ஆண்டுகள் இருந்து வந்தார்.

தமிழ் மண்ணின் வளர்ச்சி, தமிழர்களின் விடுதலை, வளர்ச்சி என அவர்கள் வாழ்வு சிறக்க 95 ஆம் அகவை வரைத் தன்னை அர்ப்பணித்துத் தொண்டே தம் வாழ்வு என்று சமூகம் பொருளாதாரம், அரசியல், இலக்கியம், தத்துவம், பெண் விடுதலை என அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்தவர்.

தந்தை ஈ.வெ.இராமசாமிப் பெரியார் என்பதை நினைவு கூர்ந்து ‘தினந்தந்தி’பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் நிகழ்வுகள், இடஒதுக்கீடு போன்ற பொருள்குறித்த தன் தலையங்கங்களில் அவரது கருத்துக்களையும்,கொள்கைகளையும் மேற்கோள் காட்டுவதுடன் இதற்கு எதிர்மறையாக ஊடகங்கள் ஒப்பற்ற மக்கள் பற்றாளரான பெரியாரை ஒரு கடவுள் மறுப்பாளர்,பார்ப்பன வெறுப்பாளர் என்று மட்டுமே அடையாளப்படுத்த வஞ்சமாக எத்தனித்தன என்றும் கடிந்து இடித்துரைக்கவும்,தவறியதில்லை.

இவரது இழப்பு,தமிழக ஊடகத்துறைக்கு மட்டு மின்றி பிற துறைகளுக்கும் பேரிழப்பாக அமைந்து விட்டது.இவரின் இழப்பால் வாடும் அவர்தம் குடும்பத் தாருக்கும்,‘தினத்தந்தி’ பணியாளர்களுக்கும் மா.பெ.பொ.க. தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Pin It