உயர்சாதிக்காரர்களைவிட எண்ணிக்கையில் நாம் தான் அதிகம் உள்ளோம்.இருப்பினும் தோற்கின் றோம். காரணம் என்ன?

நம் தலைவர்கள் மேல்சாதி ஆதிக்கக்காரர்களால் நமக்கு என்னென்ன தீங்குகள் ஏற்படுகின்றன என்பதைப் பாமரர்களாகிய நமக்கு எடுத்துச் சொன்னதே இல்லை. வேலை வாங்கி கொடுத்துவிட்டால், பட்டம் பதவி பெற்றவர்கள், இதனால் பயன் பெற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் புரிய வைக்கவில்லை. உயர்சாதிக்காரர்கள் இந்த விசயத்தில் தம் சாதிக்காரர்களுக்கு மட்டும் நன்றியும் விசுவாசமும் கொண்டு பின்பலமாக இருக்க கற்றுக்கொண்டனர். அதனால் நம்மை எளிதில் பிரித்து நம்மவர்களைக் கொண்டே நம்மை ஒழித்துக்கட்டுகின்றனர்.

பார்ப்பனியம் ஒழிய வேண்டும் என்று சொன்னால் மட்டும் போதாது.தலைவர்களும் பார்ப்பனியத்தை வெறுக்க வேண்டும்.முடியாதது ஒன்றுமில்லை;மனமிருந்தால் தலைவர்கள் பார்ப்பனியத்தை ஒழித்துவிட்டு,போலிகளைக் களையெடுத்துவிட்டு நம்மவர்களுடன் ஒன்றியிருந் தால் எப்பொழுதும் தோற்கமாட்டோம்.

அடுத்து நம்மவர்களையே நாம் குறை கூறுவது கூடாது.நம் கட்சியால் நாம் என்ன பலன்களை அடைந் தோம். அதனால் நாம் அக்கட்சிக்கு எந்த வகையில் உற்ற துணையாக இருக்கின்றோம் என்பதைப் பயன் பெறுபவர்களும் உணர வேண்டும்.நம்மவர்கள் இந்திய, அரசு பதவிகள்,தலைமைப் பொறுப்பு போன்ற அனைத்திலும் மக்கள் தொகையில் நம் விகிதாசாரத் திற்கு ஏற்ற அளவு இடம்பெற வேண்டும்.

இப்படிப்பட்ட அவல நிலைக்குக் காரணம்,தொட்டால் தீட்டு,பார்த்தால் தீட்டு என்று ஒதுக்கப்பட்டவர்களே உயர்சாதிக்காரர்களைக் கொண்டு நிர்வகிப்பது மிகமிக வருந்தத்தக்கதாக உள்ளது.முதலில் தலைமைப் பொறுப்பு வகித்திட வாய்ப்புப் பெற்ற நம்மவர்கள் நம்மில் தகுதி வாய்ந்தவர்களையே தேர்வு செய்து நம் மக்களுக்குப் பணி செய்திட வேண்டும். திட்ட மிட்டுத் தீங்கிழைத்தவர்கள் பார்ப்பனர்களே!

பார்ப்பனர்கள் உயர் பதவியில் இருக்கும்போது உயர்சாதி யினருக்குச் சாதகமாகச் செயல்படுவதைப் பார்த்தாவது நம்மவர்கள் உயர் பதவி வகிக்கும் போது ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சார்பாகச் செயல்பட மறுப்பது ஏன் என்று புரிந்து கொள்ளமுடியவில்லை. பதவிக்கு வந்தவுடன் பொருள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு,மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் அனைத்துத் தலைவர்களும் ஒன்றுசேர்ந்தாற் போல் வழி நடத்தினால் நாம் தோற்கமாட்டோம்;உறுதியாக வென்றிடுவோம்.அடிமையாக இருக்காதே!நன்மை செய்பவர்களுக்கு ஆதரவு கொடு! நிமிர்ந்து நில்!!

(குறிப்பு : இதுவரை இடஒதுக்கீட்டால் உயர் பதவி பெற்ற, உயர் கல்வி பெற்ற அனைவரும் இது எப்படிக் கிடைத்தது என்ற வரலாற்றைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அனைத்துத் தலைவர்களும் இதுபற்றி ஒரு நல்ல விளக்க மாநாடு நடத்துங்கள்)

Pin It