காரல் மார்க்சை அறிவாயா?
கண்ணின் மணியே அறிவாயா?
நீரும் நிலனும் உள்ளவரை
நினைந்திட வேண்டிய மாமனிதர்!
படிப்பு படிப்பு படிப்புஎனப்
படிப்பில் தோய்ந்த அறிவாளி
வெடித்துச் சீறும் தோட்டாவின்
விசைபோல் இயங்கிய போராளி
மனைவி ஜென்னி மார்க்சோடு
மாளா வறுமையைச் சந்தித்தார்
மலைபோல் துயர்கள் வந்தாலும்
மக்களைப் பற்றியே சிந்தித்தார்
காலம் முழுதும் உழைப்போர்தம்
கண்ணீர்க் கதையை ஆராய்ந்தார்
மூலதனம் நூல் வழியாக
முழுவிடுதலைக்கும் விடைகண்டார்
முதலா ளியத்தின் முதுகொடித்துச்
சுரண்ட லுக்கு விடைகொடுத்தார்
தொழிலா ளர்தம் அரசமைக்கத்
துணையாம் கருத்தியல் படைத்தளித்தார்
உலகில் யார்க்கும் வாய்க்காத
உயிர்த்தோழர்தான் எங்கல்சாம்
உலகம் உள்ள மட்டுக்கும்
உயிர்வாழும் இவர் தத்துவமாம்!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாசிச பாசக எதிர்ப்பு
- தனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்
- தமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு
- கலைச் சொல்லாக்கத்தில் இராஜாஜியின் படிமலர்ச்சி (பரிணாமம்)
- பா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா
- கேரளத்தில் புகழேந்தி
- நிஜநிழல்கள்
- குருமூர்த்தி எனும் அரசியல் தரகு!!
- நோபெல் வென்ற லூயிஸ் கிளக்: ஓர் அறிமுகம்
- எழுபதுகளில் தமிழ் இலக்கியமும் பண்பாடும்
சிந்தனையாளன் - மே 2012
- விவரங்கள்
- தமிழேந்தி
- பிரிவு: சிந்தனையாளன் - மே 2012
மாமனிதர் மார்க்சு
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.