சங்கர மடத்தின் நாடித் துடிப்பு

 மதிமாறன்

குத்தூசி குருசாமியின் எழுத்து நடையின் எள்ளல், நையாண்டி, அடிவெட்டு எப்போதும் தோழர் வே.மதி மாறன் எழுத்துகளிலும் உண்டு.பார்ப்பன ஊடகங்கள் நாடெங்கும் நஞ்சு கக்கி வருகின்றன.மகா அறி வாளி போலக்காட்டிக் கொள் ளும் மவுண்ட் ரோடு ‘மகா விஷ்ணு’ஏடான இந்து,பச்சையாய்ச் சங்கராச்சாரி யின் பாதந்தாங்கி நிற்பது ஊரறிந்த உண்மை.ஆனந்தவிகடன்,தினமணி போன்ற பார்ப்பன-பனியா ஏடுகள் மட்டுமல்லாமல் தினகரன் போன்ற சூத்திரத் தமிழர்களால் நடத்தப்படும் ஏடுகளும் தமிழர் நலத்துக்கு எவ்வாறு கேடு செய்கின்றன என்று கன்னத்தில் அறைவது போல் எழுதுகிறார் மதிமாறன்.செயேந்திரன்,தேவநாதன்,நித்தியானந்தன் போன்ற எத்தர்களைத் தன் எழுத்துச் சாட்டையால் வெளுத்து வாங்குகிறார்.  பக்கங்கள் : 104, விலை ரூ.60/-

வெளியீடு : அங்கும்
எண்.15, எழுத்துக்காரன் தெரு, திருவொற்றியூர், சென்னை - 600 019. பேசி : 9444337384

 

தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம்

 முனைவர் அ. ஆறுமுகம்

முனைவர் அ.ஆறு முகம் அவர்கள் பன்னூல் அறிஞர். நாற்பதுக்கும் மேற் பட்ட நூல்களை நற்றமி ழில் வழங்கியுள்ள புலமைச் சான்றோர். தமிழகத்தின் நில வரலாற்றின் பதிவாக, அரியலூர் மாவட்டத்தை அலகெனக் கொண்டு இந்த அரிய நூலை ஆக்கியுள் ளார். அரியலூர் மாவட்ட உருவாக்கம், இன்றைய அரியலூர் மாவட்டம், சங்க காலம், பல்லவர்-பிற்காலச் சோழர் காலம் தொடங்கி, விடுதலைக்கு முன்-பின் வரை விரிவான வரலாற்றுச் செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கோயில்கள், கல்வெட்டுகள், சோழர் கால இரும்புக் குழாய்கள்,செயங்கொண்டம் புத்தர் சிலை போன்றவை தகுந்த நிழற்படங்களுடன் சான்றுகாட்டப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி மக்கள் வாழ்நிலை, கல்வி, திருமண முறை, சமுதாய நிலை போன்றவையும் சரியாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளன.இம்மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த பெருமக்கள்,தற்போதைய சான்றோர்களான முனைவர் பொற்கோ உள்ளிட்டோரின் வரலாற்றுக் குறிப்புகளும் விடுபாடு இல்லாமல் தொகுக்கப் பெற்றுள்ளன. அரிய முயற்சி, வாங்கி ஆவணப்படுத்த வேண்டிய வரலாற்று நூல்.விலை ரூ.120/-

நூல் பெற :  பாவேந்தர் பதிப்பகம்
‘சீரகம்’, 4/79, நடுத்தெரு, திருமழபாடி - 621 851.

 

விழிப்பூட்டும் மொழிப்போர்

 செந்தலை ந. கவுதமன்

தமிழ்நாட்டில் நடந்த இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான மொழிப்போர் தமிழ்த்தேச விடுதலைக்கான தணலை இங்கே ஊட்டிற்று.75ஆண்டுக்கால மொழிப்போரின் வரலாற்றையும் அந்த வரலாறு தந்த படிப்பினைகளையும் கொஞ்சுதமிழ் நடையில் படிப்போர் நெஞ்சங்களில் பதியச் செய்கின்றார், புலவர் செந்தலை ந. கவுதமன்.

1937ஆம்ஆண்டில் அந்நாளைய சென்னை மாகாண முதல்வர் இராசகோபாலாச்சாரி எவ்வாறு பள்ளிக்கூடங்களில் இந்திமொழியைத் திணித்தார் என்ற வரலாற்றுச் செய்தியிலிருந்து இந்நூல் தொடங்குகிறது.‘ஒளிதந்த தீபங்கள்’என்ற பகுதியில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்த சூழலை,அப்போ ராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், தொண்டர்கள் பெயர்களை விவரமாக எழுதியுள்ளார்.போராட்டப்பாதை,மொழிப்போர்ப் படைகாண் போன்ற தலைப்பிலான பகுதிகளைப் படிக்கும்போது அந்நாளைய களமறவர்களின் ஈகம் நம் கண்முன் நிற்கிறது.உரிய இடங்களில் இடம்பெற்றுள்ள பாவேந்தரின் உணர்வூட்டும் பாடல்கள் நம் நெஞ்சுக்கு மேலும் உரம் சேர்க்கின்றன. தமிழ்த் தேசியர் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல். பக்கங்கள் 104. விலை குறிப்பிடப் படவில்லை.

நூல் பெற : தமிழ்மண் பதிப்பகம்
2, சிங்காரவேலர் தெரு, தியாகராய நகர்,
சென்னை-600 017. பேச : 044-24339030 

Pin It