ஓடிஓடி மூச்சு வாங்குது - கொஞ்ச நேரம்

ஓய்வாக இருக்கத் தோணுது

கூடிப்பாடி ஆடத் தோணுது - பாழாப்போன

கூட்டணிங்க கால வாறுது!

எத்தனையோ தேர்தல் பார்த்து - சங்கரனார்

கோயிலிலே என்ன ஆனது?

எத்தனையோ கொடுத்தும் பாத்தது - இருந்தாலும்

அத்தனையும் தோத்துப் போனது!

எத்தசொல்லி ஓட்டு கேட்பது - எந்நேரம்

குத்தம்சொல்லி நாக்குக் கூசுது

கத்திக்கத்தி தொண்ட போவுது - ஒருபக்கம்

பெத்ததுங்க வெட்டி மாயுது!

யாதுமற்ற நிராயுத பாணி - அப்படியே

போனாலும் ஆகா(து) போணி!

போதுமிடைத் தேர்தல் சாமி - ரொம்ப ரொம்பப்

பொல்லாதவங்க போயஸ் மாமி!

மதுக்கோட்டை அல்லி ராஜ்ஜியம் - சரிந்திங்கே

புதுக்கோட்டை ஆகும் பூஜ்ஜியம்

ஜெயிப்பதல்ல எங்கள் இலட்சியம் - எதிரியாள்

தோற்பதுதான் ரொம்ப முக்கியம்!

யாராவது நில்லுங் கப்பா - எங்களுக்கு

நின்னுநின்னு காலு வலிக்குது

போராட ஆகா தப்பா - மத்தவங்க

போங்கஅங்க “முரசு” ஒலிக்குது.

Pin It