சாதி என்பது செங்கற்களால் ஆன சுவரோ அல்லது ஒரு திடப்பொருளோ அல்ல ‡ அதை இடித்து உடைப்பதற்கு; அது சாத்திரங்களின் மீதும் மதத்தின் மீதும் கட்டப்பட்டுள்ள ஒரு கருத்தியல் (Notion) . சாத்திரங்களை ஒழிப்பதன் மூலமே-உடைப்பதன் மூலமே சாதியை ஒழிக்க முடியும் என்று அம்பேத்கரும் கூறுகிறார்.

தறிநெய்து, துன்பப்பட்டு, தான் பெற்ற பெண்ணை முதல்முறையாகவு கல்லூரிக்கு அனுப்பி, ஆசை யோடு படிக்க வைக்கிறார் ஒரு பெற்றோர். ஒரு பையன் அவனது கெட்ட நடத்தைக்காக ஒரு கல்லூரியிலிருந்து நீக்கப்படுகிறான்; அவனுக்கு வயது ஏறுகிறதே தவிர கல்வி கற்பதில் நாட்டமில்லை; வேறு ஒரு கல்லூரியில் அவனைஸீ சேர்த்துக் கொள்கிறார்கள். அங்கும் அவன் படிப்பில் ஈடுபாடு காட்டவில்லை. வயதோ 23 ஏறுகிறது. கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணைக் காதலித்து தன் குடிசையில் இரண்டு நாட்கள் வைத்து இருக்கிறான். பின்னர் பெண்ணின் பெற்றோர் பஞ்சாயத்து பேசி, பெண்ணை மீட்டு வருகின்றனர். அவன் அடுத்த வேட்டைக்குத் தயார் ஆகின்றான். அழகிய கல்லூரிப் பெண் அவனது வேட்டைக்கு இரையாகிறாள்; மூன்றாம் ஆண்டு மாணவி, படிப்பில் படுசுட்டி. அவனோ வயதில் மூத்தவனாயிருந்தும் அவளை விடக் கீழ்வகுப்பில் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டே இருக்கின்றான். இறுதியாண்டுத் தேர்வு எழுதச்சென்ற அவளின் கழுத்தில் அவனின் மஞ்சள் கொம்பு கட்டிய மஞ்சள் கயிறும் ஏறுகிறது. பிறகு கணவன்‡மனைவி உறவு. பெண்ணின் படிப்பும் நின்றுவிடுகிறது. அவனுக்கோ படிப்பு வெகுதூரம். செய்தி அறிந்த பெண்ணின் தாய்‡தகப்பன் துடிக் கின்றனர். வழக்குமன்றம் வரை வந்து பெண்ணும் பையனும் வயதடைந்தவர்கள் என்பதால் யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் பதினான்கு வயதுப் பெண்ணை லாரி ஓட்டும் படிப்பறிவல்லா ஒருவன் அழைத்துச் சென்று மஞ்சள் கயிறு கட்டி மனைவியாக் கிப் பாழ்படுத்துகிறான். வழக்கு மன்றத்தில் பெரும் போராட்டத் திற்குப் பின் நீதி கிடைத்தது. பெண் பெற்றோருடன் சேர்ந்து விட்டாள். திருமணமான பெண்களைக் கணவனிட மிருந்து பிரித்து நகைகளோடு அழைத்துச் செல்லும் காதலர்களும் உண்டு.

இந்த உண்மை நிகழ்வுகளில் எல்லாம் கெடுவது பெண்ணின் கல்வி; பெரும் போராட்டத்திற்குப் பின் பெரும் சீர்திருத்தவாதிகள் பெண் கல்விக்குக் குரல் கொடுத்துப் பெற்ற பெண் கல்வி இவ்வாறு சீரழிகிறது.

மேலை நாடுகளில் பள்ளிச்சிறுவர்கள் துப்பாக்கியால் பலரைச் சுட்டுக் கொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடை கிறோம். ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்ந்து ஒத்திகை பார்த்து ஒத்து வந்தால் திருமணம்; இல்லை யேல் பிரிவு என்ற நடைமுறையைப் பார்த்து முகம் சுளிக்கி றோம். மேலை நாட்டுக்காரன் இந்தியாவுக்குப் போகாதே ; அங்கு பாலியல் வன்கொடுமை தினம்தினம் நடந்தேறு கிறது என்கிறான். இனி இந்தியாவை யாரும் ‘‘புனித பூமி; புண்ணிய பூமி; காந்தி பிறந்த பூமி; விவேகானந்தர் பிறந்த பூமி’’ என்றெல்லாம் மார்தட்டிக் கொள்ள முடியாது. மேலை நாட்டில் விஞ்ஞானம் போரை நாடுது; கீழை நாடு மெஞ் ஞானத்தில் வாழ்ந்து காட்டுது என்றெல்லாம் இனி பாட முடியாது.

மதுரை ஆதீனம் முசுலீம் பெண்கள் போல், பர்தா போடச் சொல்லுகிறது; பி.ஜே.பி குட்டைப் பாவாடை கற்பழிப்புக்குக் காரணம் என்கிறது. இன்னொரு சாமியார் ‘சகோதரனே என்னை விட்டுவிடு’ என்று மன்றாடியிருந் தால் தில்லி மாணவியை ஆறுபேர் கற்பழித்து இருக்க மாட்டார்கள் என்கிறார்.

ஒருசில நடிகைகளைத் தவிர நம் நாட்டில் எல்லாப் பெண்களும் ஒழுங்காகத்தான் உடை உடுத்து கிறார்கள். தூத்துக்குடியில் ஏழாம் வகுப்பு மாணவி கடைசித் தேர்வு எழுத முட்புதர் நிறைந்த இடத்தைக் கடந்து தொடர் வண்டியில் ஏறி பள்ளிக்குச் செல்ல வந்து கொண்டிருந் தாள். ஏற்ணுகனவே பல பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கைதாகி வெளியில் உலாவிக் கொண்டி ருந்த ஒரு மனித மிருகம் ஆறுபாட்டில் மதுவைக் குடித்து விட்டு அந்த முட்புதரில் விழுந்து கிடந்தது. பள்ளி மாணவி யைக் கண்ட அந்த மனித மிருகம், அவளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது.

தில்லியில் 6 காமுகர்கள் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து ஓடும் பேருந்திலிருந்து தூக்கி எறிந்தனர். அந்த ஆறு காமுகர்களும் மது அருந்திவிட்டு இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளனர்.

திருவண்ணாமலையில் வீட்டுத் திண்ணையில் தூங்கிக் கொண்டி ருந்த இளம் பெண்ணைப் பாலி யல் தொல்லை கொடுக்கத் துணிந்தபோது, பெண் அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி தன் தந்தையை எழுப்பி அலற, 50வயது நிறைந்த தந்தை ஆட் களைக் கூட்டிக் கொண்டு எல்லை பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 42 வயது நிரம்பிய முன்னாள் ஊழியரான அந்தக் கொடூரனை கண்டிக்கச் சென்றார். கள்ளத் துப்பாக்கியால் பெண்ணின் தந்தை யை சரமாரியாகச் சுட்டுக் கொன்றான் அந்தக் காமுகன்; அவன் குடித்து விட்டே அத்தனையும் செய்தான்.

மக்கள் விரோத அரசு மதுக் கடைகளைத் திறந்துவிட்டு கல்விக் கண்ணை மூடிக் கொண்டுவிட்டது. பத்திரிக்கை கள், எடுத்துக்காட்டாக, குமுதம் ரிப்போர்ட்டர், நடுப் பக்கத்தில் முன் அட்டையில், பின் அட்டையில் வழவழப் பான தாளில் அருவருக்கத்தக்க விதத்தில்-துஷ்ற் னிஷ்யி கூயி‹ பெண் களின் படங்களையும், ஆண் பெண் சேர்ந்த படங்களையும் வெளியிட்டு வியாபாரம் செய் கிறது. அந்த இதழுக்கு நான் நோட்டீசு கூட அனுப்பினேன். சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் எழுதும் குறிப்புப் புத்தகத்தின் முகப்பு அட்டையில் கூட பெண்ணின் அருவருப்பான படங்கள் அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டு இருக்கிறேன். நகர்ப்புறச் சாலைகளின் நடுவே, துணிக் கடைகளில் அருவருப்பான ஜட்டி, பனியன் விளம்பரங் கள் இடம் பெற்றிருந்தன. தொலைக்காட்சிகளில், மக்கள் தொலைக்காட்சி, பொதிகைத் தொலைக்காட்சி இரண்டைத் தவிர மற்றவற்றைவு குடும்பத்தோடு பார்க்கும்படி இல்லை.

திரைப்படக் கவிஞர்கள் எல்லாம் ஆண்களே - ஒருவரைத் தவிர பெண்களை வாழைப்பூ, தாழம்பூ, மல்லிகைப்பூ, முல்லைப்பூ என்று வர்ணிக்கிறார்கள். சிலருக்குக் கவிதை எழுதுகையில் பெண்ணின் கருப்பை மட்டுமே நினைவிற்கு வருகிறது.

பெண் ஒரு பண்டமாக, காமம் தணித்துக் கொள்ளும் ஒரு கருவியாக ஆண்களால் பார்க்கப்படுகிறாள்; பெண்ணுக்கும் மானம், ரோசம், சுயமரியாதை, அறிவு ஆளுமை உண்டு என்று யாரும் நினைப்பதில்லை. சொல்லப்போனால் ஆண்களைவிடப் பெண்களே அறிவுக் கூர்மையானவர்கள்; பொறுப்பானவர்கள்; அமெரிக்காவில் திருமணத்திற்குப் பிறகு எந்தச் சொத்து சம்பாதித்தாலும் கணவன்-மனைவி இருவர் பேரிலுமே எழுதப்படும்; இருவருக் குமே சமபங்கு அந்தச் சொத்துக் களில் உண்டு. ஆனால் இங்கே காதலித்துறி திருமணம் செய்து கொண்டபிறகு சொத்து சம்பாதிக்கும் போது கணவன்கள் மனைவியரை ஏமாற்றி தங்கள் பெயரில் மட்டுமே எழுதிக் கொள்கிறார்கள். சட்டத்தில் பெண் களுக்கு சொத்துரிமை வந்தாலும் பெண்களுக்குச் சொத்து கொடுக்கப் பெரும்பாலோர் முன்வருவதில்லை.

இப்படி எல்லா வகையிலும் பெண்கள் ஏமாற்றி வஞ்சிக்கப்படுகிறார்கள்.

‘தையலை உயர்வு செய்‘’ என்று பாரதி பாடினான். பெண்களை உயர்வு செய்யாத குடும்பமோ, நாடோ, கட்சியோ உருப்படாது.

Pin It