அரியலூரில் அரசுடமை வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் நேரம் முடியும் நிலையில்  21.11.2017 இல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித்  தோழன் ஒருவன் வேகவேகமாக வங்கி உள்ளே நுழைந்தான். அரியலூர் நகர அரியலர் தோழர் தமிழ்க்களம் இளவரசனும் உடன்வந்தார். பணம் பெறுவ தற்கான காசோலையை  வங்கித்துணை மேலாளரிடம் நீட்டினான். அந்தக் காசோலையை  பணம் கொடுக்கும் வங்கி அலுவலரிடம் கொடுக்குமாறு வங்கித் துணை மேலாளர் கூறினார். காசோலையை நீட்டும் நேரம் “கணிணி செயல்பாடு தடைப்பட்டுள்ளது சிறிது நேரம் காத்திருங்க”என்றுபணம் தருபவர் கூறினார்.

2018 பொங்கல் மலருக்கு நிதி திரட்டும் வேகமான வேலையில் அன்றுகொண்டிருக்கும் மாலை நேரம் காத்திருப்பது நேரம் வீணாவது என்பது  மா.பெ.பொ.க. தோழனுக்குப்பொறுத்துக்கொள்ள இயலாதது. வங்கி மேலாளரை நோட்டமிட்டான். அவர் மிகவும் பக்திக்காரர் போலத் தோற்றம். பொட்டுடன் கையில் கயிறுக்கட்டுகளுடன் இருந்தார். நகரச் அரியலாளர் இளவரசனிடம் “ஏம்பா, நாம வங்கி மேலாளரிடம் மாநாட்டுக்கு  நிதி  மலருக்கு விளம்பரம் கேட்போமே ”என்றான் கட்சித் தோழன். “ஏங்க நீங்க வேற - அவர் யாரோ அவர்கிட்ட எப்படிக் கேட்பது” என்றுக் கூறினார் இளவரசன். “அவர் யாராயிருந்தால் என்ன நீ வா.. துண்டறிக்கையைக் கொடுப்போம் நிதி கேட்போம் அவர் உதவி செய்தால் செய்யட்டும் இல்லையென்றால் போகட்டும் என்னிடம் ஏன் நிதி கேட்டாய் என்றுதுப்பாக்கியால் சுடவாப்போகிறார்  சும்மா வாப்பா என்று இளவரசனை அழைத்துக் கொண்டே இருவரும் மேலாளர் அறைக்குள் சென்றனர்.

வணக்கம் ஐயா, என் பெயர் ஜ. ஞஞ்ழச்ணூடவு மருதூரைச் சேர்ந்தவன் - எம்.ஏ. பி.எல்., படித்தவன் - &Regional Probation Officer -  மண்டல நன்னடத்தை அலுவலராகப்  பணி செய்தவன் 2005 ஜூன் 30ல் பணி ஒய்வு பெற்றவன்அதற்குப் பிறகு

“படிப்பால் உயர்வது முதல் வேலை”

“பாழும் மதுவை ஒழிப்பது மறு வேலை”

என்ற நோக்கத்தைத் தலையாய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறேன் என்று வங்கி மேலாளரிடம் கூறினான்.

“வாங்க .. வாங்க.. உட்காருங்க எனக்கு உங்களை முன்பே தெரியும்”என்றார் வங்கி மேலாளர். அப்படிங்களா, தெரியுங்களா என்றேன். “நீங்க வங்கிக்குள்ள வரும் போதே பழைய நினைவுவந்து விட்டது. சென்னை எழும்பூரிலிருந்து  இரயிலில் நாம் ஒரே பெட்டியில் பயணம் செய்தோம். தாம்பரத்தில் தொடங்கி விருத்தாசலத்தில் நீங்க இறங்கும் வரை உங்கள் நோக்கத்தைப் பேசிக் கொண்டே வந்தீங்க இந்தச் சிந்தனையாளன் ஏட்டையும்  எனக்குக் கொடுத்தீங்க” என்றார் மேலாளர்.  அப்படியா,  ரெம்ப மகிழ்ச்சிங்க என்றார் நம் கட்சிக்காரர். “நானும் தொழிற் சங்கத்தில் மிகவும் பாடுபட்டவன் நீங்க வாங்க என்னால் இயற்றதைச் செய்வேன்” என்று மகிழ்வுடன் கூறினார் வங்கி மேலாளர். “நான்  வருவேங்க இவர் அரியலூர் நகரச் செயலர் இளவரசன் இவர் உங்களை சந்திப்பார்” என்று கூறி விடைப் பெற்றார் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தோழன். அவர்தான்  கட்சியின் துணைப் பொதுச் செயலர். சி.பெரியசாமி கொஞ்சம் தத்துவப் புரிதல் கோளாறு உடையவர் தத்துவப் புரிதல் களப் பணியில் சிறிது புரிதல்குறைவானவர். இது படிப்பதற்கு மட்டுமல்ல உங்களின் நடப்புக்கும்தான்!

Pin It