தூய்மை  இந்தியா  துடப்பம்  இந்தியா

துண்டுக்  காவிகளின்  டிசிட்டல்  இந்தியா

தெருவைக்  கூட்டிப் படம் எடுத்த மோடிஇந்தியா

டெங்கு  வந்தது  எப்படிச்சொல்  இந்தியா

தில்லிக்குப் பண்ணையடிக்கும்  எட்டன்  சாமியும்

தியானச் செம்மல்  பன்றிப்  பன்னீரும்

கொள்ளைக்கும்  பதவிக்குமே  ஆட்சி இங்கு

நாளும்  மக்களைக்  கொல்லுது டெங்கு

அய்யகோ!  கந்துவட்டிக்குக்  கருகியதே  இசக்கிமுத்துகுடி

அடுப்புக் கரியாய்ஆனதே  நம்உறவுத்  தொப்புள்கொடி

நட்டகல்லுக்குக்  காலத்தையும்  காசையும்  கரைக்கறீங்க

இப்போ  எங்கடா  போனதுஉங்க  சாமிங்க

அரசின்  காலிப்பயல்கள்  காவல்  துறை

அரண்காக்கத்  தவறியதே  மாவட்ட  ஆட்சித்துறை

கொலைகார  அரசுகள்  இன்னும்  எதற்கு

ஊளைஇடும்  எதிர்க்கட்சிகள்  நாளும்  பிழைப்பிற்கு

ஆகமத்தை  அறுத்தெறிந்து  விட்டது  கேரளம்

அனைவரும்  அர்ச்சகராக  வழிகாட்டிவிட்டது  மார்க்சியம்

அனைத்திந்திய  ஒன்றியமும்  பின்பற்றியே  ஆகவேண்டும்

அனைவரும்  சமமென்று  வழிபாட்டிலும்  வேண்டும்

வைக்கம்வீரர்  பெரியாருக்கு,  அம்பேத்கருக்கு  வெற்றி

அய்யன்காளி,  நாரயணகுரு  உழைப்புக்கு  வெற்றி

ஆரியத்திற்கு  விசயன்  வைத்தார்  வேட்டு

ஆண்டவனுக்கு  இப்போ தீட்டுஎங்கே  காட்டு

இந்தியாவிற்கே  அன்று வழி காட்டிய நம்நாடு

சமூகநீதி  சமத்துவத்தின்  பிறப்பிடம்  தமிழ்நாடு

நமைக்காக்கும்  அரசமைப்பாய்  என்றுமே  அல்ல

நமக்கான  சோசலிசம்  அமையும்வரை  விடிவல்ல!

Pin It