தமிழகத்தில் இப்பொழுது திருடர்கள் அதிகரித்து விட்டனர்; ஒப்பந்தக்காரர்கள், அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் மூவரும் சேர்ந்து திட்டங்கள் தீட்டித் திருடுகின்றனர். எடுத்துக்காட்டாக நகராட்சி (ம) மாநகராட்சியில் கட்டப்பட்ட உட்புற கழிவு நீர் கால்வாய்கள் அனைத்தும் கட்டிய மூன்றே மாதத்தில் சிதைந்துவிட்டன. காரணம், கட்டப்பட்ட கால்வாய்களை அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் அரசியல்வாதிகளின் கூற்றுப்படி ஒப்பந்தங் கள் முடிக்கப்படுகின்றன.

இப்பொழுது ஜி.எ°.டி. வரி சில பொருட்களுக்குக் குறைத்துள்ளனர். இந்த வரிகுறைப்பு மக்களுக்கு அல்ல, வியாபாரிகளுக்கு மட்டும்தான். ஓட்டல்களில் வரி குறைப்பதற்கு முன்பு இருந்த வரியுடன் கூடிய விலையே வரி குறைந்த பின்பும் அதே விலையில் வரியுடன் விற்கின்றனர். இந்த பகல் கொள்ளையில் பங்கு பெற்று கண்டு கொள்ளாமல் உள்ளது நம்மை ஆளும் அரசுகள் மக்கள் வரிப்பணத்தை இப்படித் திட்டங்கள் தீட்டிக் கொள்ளையடிக்கின்றனர்.

பல ஆண்டுகளாகப் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் ஊடகங்களுக்குத் தெரியும். பாதிப்பின் பொழுது நிவாரணம் என்ற பெயரில் அதிகாரிகளும் அரசியல்வாதி களும் கொள்ளையடிப்பதை ஊடகங்கள் வெளியிடுவ தில்லை. கோடை காலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் வேலைகள் செய்யாமல் மழைக் காலங்களில் வேலை செய்வதால் செலவுகள் உயர்த்தி வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். ஊடகங்களும் இது இப்படியே தொடர்ந்தால் அவர்களுக்குச் செய்தி கிடைக்கும் என்றுதான் எண்ணுகின்றனர்.

இப்பொழுது ஒப்பந்தக்காரர்கள் கூடக் குறைந்த கூலி வாங்கும் வடமாநிலத்தவரை வேலைக்குச் சேர்த்து பணிகளை முடிக்கின்றனர். இங்குள்ளவர்கள் கேட்கும் கூலித் தொகை அதிகமாக இருப்பதையே ஒப்பந்தத்தில் மிகைப்படுத்தி குறிப்பிட்டு ஒப்பந்தத் தொகையை பெற்று கொள்கின்றனர்.

இந்த கொள்ளைகள் அனைத்தும் அரசியல்வாதிகளின் திட்டப்படியே அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கின்றனர்.

Pin It