இந்தியாவில் நடக்கும் திருட்டுச் செய்தி களைப்பார்த்தால், - மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. பல நுட்பமான செய்திகள் பல சிக்கலான வழிமுறைகள் கண்டு பிடிக்க முடியாத வியூகங்கள் - இவையெல்லாம் எப்படி முடிகின்றன? படித்தவன் - அறிவாளியாக இருப்பவன் திருட்டுத் தொழில் செய்வதால் முடிகிறது. குரங்கு கண்முன்னே நம் பொருளைப் பிடுங்குவதைக் கோவில் நிறைந்த ஊர்களில் பார்க்க லாம். படிப்பறிவில்லா மனிதன் - நீங்கள் தூங்கும்போது - கவனிக்காதபோது திருடுவான். படித்தவன் எப்படித் திருடுகிறான்? உங்கள் கண்முன்னே - உங்களை நம்ப வைத்து - உங்கள் சம்மதத்துடன் முழு ஒத்துழைப்புடன் திருடுகிறான்.

சில்லறை நாணயம்

பெரிய கடைகளில் சில்லறை நாணயம் நிறையத் தேவைப்படும். குறிப்பாக உணவகங்கள் - சில்லறை இல்லை என்று சொல்வதே இல்லை. ரூ. 10,000 - 1,000 என்று சிலர் நாணய மூட்டைகளை ஒட்டலில் கொடுத்து விட்டு - 5 - 10 கமிஷனோடு ரூபாய் நோட்டு வாங்கிச் செல்வார்கள். அப்படி ஒரு நிறுவனம் - பத்து மூட்டை நாணயத்துக்கு ஒரு இலட்சம் கொடுத்து விட்டு மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது உள்ளே உப்புதான் இருந்ததாம். சபாஷ்! உப்புவிற்ற காசு கரிக்காது. இரண்டு முறை நாணயம் கொடுத்தவன் - மூன்றாம் முறை உப்பு மூட்டையைக் கொடுப்பானா? புத்தி சாலித் திருடன் கொடுப்பான் (தினமணி 06-05-2010)

பஞ்சமி நிலத்தை 10 ஆண்டு விற்க முடியாது. அதன்பிறகும் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் தான் விற்க முடியும். உயர் நீதிமன்றத் தீர்ப்பு தினமணி 11-5-2010 சரி. இந்த பஞ்சமி நிலம் 80,000 ஏக்கர்- யார் யாரிடமோ போயிருக்கிறதே அது எப்படி? 10,000 ஏக்கர் வரை - மேல் சாதிக்காரர்கள் அனுபவிப்பதை சிவகாமி போன்றவர்கள் சுட்டிக் காட்டிய பிறகு தீர்வு என்ன? ஒன்றும் இல்லை, ஒன்றும் ஆகாது. மேலே இருந்து பாருங்கள்- அதிகம் படித்தவன் - உடல் உழைப்பு இல்லாதவன் - எல்லாரையும் விட உயர்ந்த சாதி. அப்புறம் படிப்புக் குறைந்தவன் - கடைசியாகப் படிப்பே இல்லாதவன் படிப்பே குறைந்தவன் - கடைசி யாக படிப்பே இல்லாதவன் படிப்பே இல்லாதவனுடையது பஞ்சமி நிலம் அது யாரிடம் போகிறது? மிக அதிகம் படித்த பார்ப்பனர்களிடம் அல்லது ரெட்டி - வேளாளர் களிடம். எப்படி? பொதுக் காரியத்துக்கு அம்மனுக்குத் தோட்டம் போட என்று இப்படி ஏமாற்றினர்.

சட்டசபைக்குப் போகிறவர்கள்

இந்தியாவில் - தமிழ்நாட்டில் சில அதிசயங்கள் நடக்கின்றன. நாம் சிலரைத் தேர்வு செய்து - எம்.பி - எம்.எல்.ஏ - என்று சட்டமன்றங்களுக்கு அனுப்புகிறோம். எதற்கு? மக்கள் மேம்பாட்டுக்கான சட்டங்களைச் செய்து மக்களின் வாழ்வை மேம்படுத்த ஆனால் இவர்கள் முன்னுரிமையுடன் என்ன சட்டம் செய்கிறார்கள்?

1. எம்.எல்.ஏ - சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று

2. எம்.எல்.ஏ - எம்பிக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் (பென்சன்) தரவேண்டும் என்று

இன்னும் இப்படிப் பல வசதிகள் - எம்.பி. - எம்.எல்.ஏ-க்களுக்கு! நாட்டின் கடைசி ஏழைக்கு இந்த வசதி கிடைக்கும் வரை எனக்கு வசதி வேண்டாம் என்று சொல்லுகிறவன் தானே தலைவன்? நாம்தான் திருடர்களைத் தலைவர்களாக்குகிறோமே! அவர்கள் முதலில் எனக்கு என்று இருக்கிறார்கள். போகப்போக - எல்லாம் எனக்கு என்று செயல்படுகிறார்கள்.

50 ஏக்கரில் எம்.எல்.ஏ-க்களுக்கு வீட்டு மனை

14.5.2010 தினமணியில் ஒரு செய்தி 50 ஏக்கரில் - எம்.எல்.ஏ-களுக்கு வீட்டு மனைகள் போட்டு வழங்கப்படுமாம். எதுக்கு? மக்களைக் கொள்ளை யடித்து - கோடீசுவரர் ஆனவர்களுக்கு இந்த போனஸ் பரிசு. எந்த எம்.எல்.ஏ - வீடு இல்லாமல் உட்கார்ந்து இருக்கிறான்? அப்படியே உட்கார்ந்திருந்தாலும் மற்ற வீடில்லா மக்களிலிருந்து அவன் எப்படி வேறு பட்டவன்? அவனுக்கு முன்னுரிமையுடன் அவசரமாக மனை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? நிறைய கேள்வி கேட்கலாம் ஒரே விடைதான். திருடனைத் தலைவனாகப் போட்டால் அவன் திருட்டுக்கே முன்னுரிமை தருவான். படித்தவன் திருடும் போது - யுத்தியும் தந்திரமும் நுட்பமாக இருக்கும்.

கேதான் தேசாய்

மெடிகல் கவுன்சில் கேதான் தேசாய் வீட்டில் 1500 கிலோ தங்கமாம், கோடிக் கணக்கில் பணமாம். இந்தியா முழுதும் 150 மருத்துவக் கல்லூரி இருக்கலாம். ஒரு கல்லு£ரிக்கு 2-கோடி என்றால் 300 கோடி யாச்சு. சரி கவுன்சிலின் மற்ற உறுப்பினர்கள் - லஞ்சம் கொடுத்தவர்கள் - தேசாயின் உறவினர் - நண்பர் - எல்லாரும் இந்த அயோக்கியத்தனங்களைக் கண்டு கொள்ள மாட்டார்களா? யாரும் எங்கேயும் புகார் செய்ய மாட்டார்களா? சாலையில் கொலை நடந்தால் - பொது வாழ்வில் ஊழல் என்றால் யாரும் கேட்க மாட்டார்களா? நீதி மன்றம் இல்லையா? கூட்டம் இல்லையா? கேட்டுக் கொண்டே போகலாம்.

கோர்ட் என்ன சொல்லுகிறது?

ஆனால், வேடிக்கையைப் பாருங்கள். சுப்ரீம் கோர்ட் 05.05.10ல் தெரிவித்த ஒரு கருத்து - உண்மை கண்டறியும் சோதனை சட்ட விரோதமானது. ஆகவே கேதான் தேசாயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கூடாது. போலீஸ்காரர்கள் விசாரிக்கக்கூடாது. சிபி அய் - விசாரிக்கக் கூடாது. பொய் காண் எந்திரம் பயன்படுத்தக் கூடாது.

வகைவகையாக ஏமாற்று வேலைகள்

கடவுள்அருள் வாங்கித் தருகிறேன் என்று கற்பழிக்கிறான் தேவநாதன் & கோ. சங்கராச்சாரியிடம் படுத்துக்கவாடி என்று அனுராதாரமணனை அழைக் கிறான் மிடில் மூங்கில். 14 வயது ருச்சிகாவை கற்பழித்து விட்டு டிஜிபி - பதவி உயர்வு வாங்குகிறான். - அய்ஜி - ரத்தோர். பஞ்சமி நிலங்களை உயர்சாதியினர் பிடுங்குவர், எம்.எல்.ஏக்கள் தமக்குத் தாமே வீட்டு மனை வழங்கிக் கொள்ளச் சட்டம் செய்வர், தமது பென்ஷன் வழங்கிக் கொள்ளச் சட்டம் செய்வர், தமக்கு பென்ஷனை உயர்த்துவர், ஒரு மகன் - அல்லது மகள் - எம்.எல்.ஏ - ஆகும் உரிமை உண்டு என்று கூடச் சட்டம் செய்வர். இதற்கெல்லாம் மூலம் - இந்த அழுகலுக் கெல்லாம் அடிப்படை எங்கே இருக்கிறது?

பார்ப்பான் செய்த சட்டம்

பிறவியில் நான் உயர்ந்தவன் என்று தனக்கு சாதகமான அரசியல் சட்டத்தைப் பார்ப்பான் 6-க்கு 4 வைத்து செய்து கொண்டதில் தானே இதெல்லாம் தொடங்கியிருக்க வேண்டும். சாராம்சத்தில் நமக்குத் தெரிவது என்ன? திருடர்களின் ஆட்சியில் பெரிய திருடன் பெரிய தலைவனாக இருப்பான் - அவ்வளவு தானே? அப்படித் திருடிப் பொய் சொல்லி வஞ்சகம் செய்தபடியே - இந்த நாட்டை நாம் புண்ணிய பூமி - என்போம். அப்படித்தானே!

(தொடரும்)

Pin It