போப்பால் கொலைகாரனைத் தப்பவிட்டது யார்? இப்ப சொல்றான் ஒரு அமைச்சன் - அது நரசிம்மராவுதான் என்று. உடனே பிஜேப்பிக்காரன் இல்லை - இல்லை - அது ராஜீவ் காந்திதான் என்று. 5000 பேர் சாவு - 20,000 பேர் உடல் ஊனம் - எல்லாம் நிகழ்த்திய கொலைகாரன் தப்பிவிடுகிறான் - அரசு பாதுகாப்புடன்.

சங்காரச்சாரியும் தப்பிவிடுவான்

கோவிலிலேயே கொலைக்குக் காரணமாக இருந்தவன் - மிடில் மூங்கில் சங்கராச்சாரி. அவன் மீது - அபாண்டமாய்க் குற்றம் சாற்றினார்கள் - என்று முதலமைச்சர் கருணாநிதியே சொல்லுகிறார் - வழக்கு நிலுவையில் இருக்கும்போது! வழக்கு என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. சங்கராச்சாரி தப்பிவிடுவான்.

தேவநாதன் தப்பிவிடுவான்

கோவில் கருவறையில் - சாமிகள் காட்சியாக -ஏமாளிப் பெண்களைச் சீரழித்தவன் தேவநாதன். என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. தேவநாதன் தப்பி விடுவான். சூத்திர ஆட்சியில் - இப்படி கொலை, கற்பழிப்பு குற்றவாளிகள் தப்பிப்பது – ஆட்சிக்குக் கெட்ட பெயர் இல்லையா? இல்லை. ஏனென்றால் பேருக்குதான் இது சூத்திர ஆட்சி; அடிப்படையில், உள்ளுக்குள்ளே - இது பார்ப்பன மனுநீதி ஆட்சிதான். மனுநீதியில் கைவைத்தால் கருணாநிதியும் ஒழிந்து போவார்.

சிகைக்குச் சேதம்- சிரச்சேதம்

பார்ப்பான் கொலை செய்தால் - சிகைச்சேதம் (முடியை அகற்று); சூத்திரன் கொலை செய்தால் - சிரச்சேதம் (தலையை வெட்டு)என்கிறது மனுநீதி. அதனால்தான் பார்ப்பனர்கள் -பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் (சூத்திரன் உயிர்) போனால் - மயிர் (என்னுடைய மயிர்தான்) போகும் என்று சொல்லி - பிரச்சாரம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனந்தமாக - அகங்காரத்தோடு வாழ்கிறார்கள்.

பெரியார் சொல்லும் கொலைக்கதை

1950 - 55 காலக்கட்டம்; மைசூர் மாநிலத்தில் ஒரு பார்ப்பான் ஒரு கொலை செய்துவிடுகிறான்; அப்பதான் புதிய அரசியல் சட்டம் அமலாகி - இந்தியா முழுதும் ஒரே சட்டம் - ஒரே நீதி என்றாகிறது. கொலை செய்த பார்ப்பானுக்குத் தூக்குதண்டனை உறுதியாகிறது. டெல்லியில் சபாநாயகராக இருந்த அனந்த சயனம் அய்யங்கார் உள்ளிட்ட பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? இந்திய அரசியல் சட்டம் - முன்னாள் மைசூர் மகாராசாவிடமிருந்த அந்தப் பகுதிக்கு பொருந்தாது - அவர்களின் பழைய சட்டமே பொருந்தும்- என்கிற மாதிரி ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள். பழைய சட்டம்தான் - உயிருக்கு மயிரைச் சமமாக்கும் சட்டமாச்சே. ஒரே நோக்கம் - கொலைகாரப் பார்ப்பானைத் தப்பிக்க விடுவதுதான். இது பெரியார் பதிவு செய்திருக்கும் பார்ப்பன அநீதி.

ஊழலை விழுங்கும் ஊழல்

ரூ 60, 000 கோடி ஸ்பெக்டரம் ஊழல் இது - ஏதோ - இப்ப ஆட்சியில் தி.மு.க. அமைச்சர் இராசா செய்த மாதிரி கத்துகிறார்கள். பிஜேப்பி ஆட்சியிலும் ரூ.65,000 கோடிக்கு டெலிகாம் ஊழல் நடந்தது. பேர்தான் வேறே. ஊழல் அதேதான். ஸ்பெக்டரம் ஊழல் எப்படி மறைந்தது? அதைவிடப் பெரிய கிரிக்கட் ஊழல் -அல்லது இரயில்வே ஊழல் - அல்லது ஏதோ ஒன்று. ஒரு ஏழை நாட்டில் - 70ரூ மக்களின் தினப்படி வருமானம் ரூ.20-க்கு கீழே என்று இருக்கிற நிலையில் (நக்ஸல் தலைவர் கிசன்ஜியின் கணக்கு இது) எப்படி இந்தப் பயல்களால் திருடமுடிகிறது? கொள்ளையடிக்க முடிகிறது?

மீண்டும் மீண்டும் நீங்கள் வேர்களைத்தான் தேடவேண்டும். அந்த வேர்கள் - பார்ப்பனர்கள் படித்த மாமேதைகளாக இருக்கும் பார்ப்பனர்கள்கூட - தாம் மட்டுமே பார்ப்பனர் என்ற பொய்யை மறுப்பதில்லை; தமக்கு சிறப்புச் சலுகைகள் உண்டு. என்ற திருட்டை விடுவதில்லை. கடவுள் நம்பிக்கைக்கே பார்ப்பனர்கள் தம் திருட்டு புத்தியில் புதிய விளக்கம் தந்திருக்கிறார்கள் - கடவுள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர் என்று (மந்திரம் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமை; தெரிந்தது என்பது அடுத்த ரைடர்.)

எஸ்.எம்.கிருஷ்ணா

எல்லை தாண்டினால் சாவுதான் - என்று. வெட்கம் மானம் அற்ற பயல்கள் - இந்த நவீன டெக்னாலஜியுகத்தில் - ஒவ்வொரு மீனவருக்கு ஒரு எல்லை அறிவிக்கும் கருவி கொடுத்தால் என்ன? இந்தக் கருவிகளை செயற்கைக் கோள் வழி - இயக்கினால் என்ன? ஈழ நாட்டில் -பிரபாகரன் தோழர்கள் - எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து இலங்கை நாய்களுக்குச் சொல்ல இந்திய ராணுவம் - அதிக நவீனக் கருவிகளைப் பயன்படுத்தும். அந்த முனைப்பும் உழைப்பும் மீனவர்களைக் காப்பாற்றச் செய்தால் என்ன? மீனவர்கள் -பார்ப்பனர் இல்லை. அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை இல்லை. அதுதானே கிருஷ்ணாவின் விளக்கம்?

சாதிவாரிக் கணக்கெடுப்பு

1931-ல் கடைசி சாதி வாரிக்கணக்கெடுப்பு. 80 வருடம் ஆகிவிட்டது. இந்தியாவில் சாதி இருக்கும்; சாதிவாரித் தொழில் இருக்கும்; சாதி அடிப்படையில் தீண்டாமை இருக்கும்; சாதியை வைத்துக் கருவறை நுழைவுத் தடுப்பு இருக்கும் -சாதி வாரிக் கணக்கெடுப்பு மட்டும் இருக்காதாம். பார்ப்பன ஊடகங்கள் ‘அய்யோ, அய்யோ’ என்று அலறுகின்றன. பேய் அடைபட்ட பெட்டியைத் திறந்துவிடுவதாம் - அது “தினமணி”க்காரன் கார்டூன் போடறான் - சிங்கத்தின் வாலை கோடரியால் தாக்குவதும் சாதிவாரி கணக்கெடுப்பும் ஒன்றுதான் என்று. சரி. அப்ப சாதி இருக்காது - என்று சட்டம் செய்யலாமே! கருவறை பார்ப்பானின் ஏகபோகமாக இருப்பதைச் சட்டப்படி ஒழிக்கலாமே! அதுவும் முடியாது.

தலைவிழுந்தால் எனக்கு; பூவிழுந்தால் உனக்கில்லை

பார்ப்பன அணுகுமுறை - அன்றும் இன்றும் என்றும் ஒன்றுதான் - தலைவிழுந்தால் எனக்கு; பூவிழுந்தால் உனக்கில்லை இரண்டே முக்கால் சதவீதம் இருக்கும் இந்த அறிவாளி- படிப்பாளி நாய்கள் இப்படி நியாய விரோதமாய் - சட்ட விரோதமாய் - நடப்பதை உலகச் சமூகம் கேட்காதா? இந்தியாவின் - இடது, வலது கம்யூனிஸ்டு, பிஜேப்பி, காங்கிரஸ் கும்பல் கேட்காதா? கேட்காது. கேட்கக்கூடாது. கேட்டால் அவர்கள் தேசவிரோதிகள். வடகிழக்கு மாநிலம் எல்லாமும் தேச விரோதிகளாகிவிட்டார்கள்.

மத்தியப்பிரதேசம், சத்தீசுகர், ஜார்கண்டு - ஆதிவாசி, பழங்குடிகள் எல்லாம் இப்ப நாட்டுக்கு எதிரிகள். அடையாளத்துக்கு எடுத்துச் செல் - என்று ஆதிவாசிச் சிறுவனிடம் வாழைப்பழம் கொடுத்தனுப்புகிறார்கள் நக்ஸல் தலைவர்கள். அவன் பசியில் அதைச் சாப்பிட்டு விடுகிறான் - பசிபொறுக்காத இப்பழங்குடிச் சிறுவன்தான் - இந்திய இறையாண்மைக்கு ஆபத்தாக இருக்கிறவன் - என்று கூறிக் காரித்துப்புகிறார் - அருந்ததிராய். பார்ப்பான் மிகப்பெரிய அநீதியாளன் மட்டுமல்ல; மிகமோசமான அயோக்கியனும் தான்!

(மீண்டும் வருவேன்)

Pin It