போ நீ

அழிவுசெய் அரக்கா போ நீ

ஆள்கிற சனியே போ நீ

இழிவுடை மனத்தா போ நீ

ஈனனே இடும்பா போ நீ!

உலகெலாம் பழிக்கும் போ நீ

ஊர்சுற்றும் உலக்கை போ நீ

எமையெலாம் ஏய்ப்பாய் போ நீ

ஏழையை வதைத்தாய் போ நீ

ஐயமில் திருடா போ நீ

ஒற்றுமை குலைத்தாய் போ நீ

ஓலத்தை வளர்த்தாய் போ நீ

ஒளவையின் வசைபோல் போ நீ

கலகமே செய்தாய் போ நீ

சகலரும் வெறுத்தார் போ நீ

ஞமலியாய் அலைந்து போ நீ

தகுதியே இல்லான் போ நீ

நம்பிக்கைக் கெடுத்தாய் போ நீ

பதவிக்கே படுத்தாய் போ நீ

மதவெறி விலங்கே போ நீ

யாவையும் அழித்தாய் போ நீ

வசைகொண்டு வாழ்ந்தாய் போ நீ

வஞ்சகா கேடா போ நீ!

திசையெட்டும் காறித் துப்பும்

திமிரனே போ நீ! போ நீ!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.