இங்கிலாந்தில் வெளிவரும் தி கார்டியன் என்ற ஆங்கில நாளிதழில் வெளிவந்த நரேந்திர மோடியின் பாரதிய சனதாக் கட்சியின் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி பற்றிய தலையங்கத்தின் தமிழாக்கம்.

தமிழாக்கம் : வழக்குரைஞர் கோ.ரா.சுந்தரகாந்தம்

தலையங்கம் : பொய்ச் செய்திகளை வணிகம் செய்து கொண்டு வணிகம் ஆதரவான செயல்திட்டங்களைப் பின்பற்றுகின்ற, சிறுபான்மையினரை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்துகின்ற மேலும் ஒரு மக்களை ஈர்க்கும் தலைவர் இவ்வுலகிற்குத் தேவையில்லை.

modi and amit shah after election resultவியாழன், 23, மே 2019: அண்மையில் வரலாற்றின் மிகப்பெரிய தேர்தலை நரேந்திர மோடி என்ற ஒரு தனிநபர் வென்றார். 1971 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அடுத்தடுத்து இரண்டு முறை ஒற்றைக் கட்சிப் பெரும்பான்மையுடன் வென்ற முதலா வது பிரதமர் நரேந்திர மோடி. 2014ஆம் ஆண்டில் காங்கிரசுக் கட்சியின் புகழ் ஊழல் புகைமூட்டத்தில் மறைந்தபோது நாடாளுமன்றத்தின் கீழவையில் பாரதிய சனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு, சிதறுண்ட பொருளாதார நிலைமையும் மீறி திரு.மோடி நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை அதிகப்படுத்தி யுள்ளார். இது இந்தியாவிற்கும் உலகத்திற்கும் கெட்ட செய்தியாகும்.

பா.ச.க என்பது இந்தியாவை மிக மோசமாக மாற்றி வருகின்ற இந்துத்துவ தேசியவாத இயக் கத்தின் அரசியல் பிரிவாகும். மேல் சாதி இந்துக்களின் சமுதாய ஆதிக்கம் என்ற படுமோசமான கோட்பாடுடைய இக்கட்சி, பெரு முதலாளிகளுக்குச் சார்பான பொருளாதார வளர்ச்சி, பண்பாட்டுப் பழமைவாதம், மிக்கத்தீவிரமான பெண்ணின வெறுப்பு, அரசு அதிகார அமைப்பு களின் மீது இரும்புப்பிடி என்று இருப்பதில் வியப்பில்லை. மோடியின் இந்த மாபெரும் வெற்றி, ஏறக்குறைய பத்தொன்பதரை இலட்ச இந்திய இசுலாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்க ளாகப் பார்க்கும் ஒரு இருண்ட அரசியலிடம் இந்தியாவின் உயிர் வீழப்போவதைப் பார்க்கப்போகிறது.

தேர்தல் பரப்புரையின் போது திரு.மோடியின் வலது கையாகச் செயல்பட்டவர் இசுலாமியர்களை கரையான்கள் என்று கூறிக் கேவலப்படுத்தினார். அதல்லாமல்  வெளிப்படையான பாதுகாப்புடன் இசுலாமியர்களைத் தாக்கிக் கொன்றார்கள். இசுலாமியர்கள் போதுமான மக்கள்தொகையுடன் இருப்பினும் ஒரு அரசியல் வகுப்பினரால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களாகவும், பெரும்பான்மை இந்து மக்களின் ஆதரவை இழக்கும் அச்சத் துடனும் இருக்கும் அரசியல் அனாதைகளாவர். இசுலாமியர்கள் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் 24 உறுப்பினர்களைக் கொண்டிருந்தனர்.

இது ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 4ரூ ஆகும். இச்சமூகத்தினர் 1952ஆம் ஆண்டிற்குப் பிறகு கொண்டி ருக்கும் மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவாகும். இது மேலும் சுருங்கும் வாய்ப்புள்ளது. பிரிவினைவாதியான திரு.மோடி கவர்ந்திழுக்கும் பரப்புரையாளர் என்பதில் சந்தேகமில்லை. இந்தியச்சமுதாயத்தின் பிரிவுகளான மதம், சாதி, நிலப்பகுதி, மொழி ஆகியவற்றைக் கடந்து செல்வதற்கு மாறாக அவற்றைக் காட்டிப் பிளவுப்படுத்துதல் என்ற பாணியைக் கையாள்பவர். அவர் அனுபவமிக்கவராக நாடறிந்தவராக இருந்துகொண்டு மக்களின் பெயரில் பேசுகிறேன் என்று பெரும்பான்மையானவர் களுக்கு எதிராக மக்களை ஈர்க்குமாறு பேசுவர். திரு.மோடி பயங்கர விளைவுகளைத் தரக்கூடிய பொய்க்கூற்றுகளையும் ஒரு சார்புத் தகவல்களையும் பயன்படுத்தினார்.

ஒரு வேளை நாம் வியப்படையக் கூடாதோ என்னவோ. விளாதமிர் புதினின் இரசியா உள்ளிட்ட  மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் வலிமையான தலைவரைக் கொண்ட சர்வாதிகார ஆட்சியை ஆதரிப்பவர்கள் (55 ) அதிகம் என்றதை 2019 ஆம் ஆண்டின் தேர்தல் வெளிப்படுத்தியது. இந்த உலகத் திற்கு மேலும் ஒரு தேசிய சனரஞ்சகத் தலைவர் தேவையில்லை.  திரு. மோடி சுதந்திர இந்தியாவின் பன்முகங்களில் விலை மதிக்க முடியாத ஒன்றாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் பலகட்சி மக்களாட்சியை அச்சுறுத்துகிறார்.  பெரும்பான்மை அரசு என்ற மோடியின் அரசியல் பற்றிய புதிய நூலின் ஆசிரியர்கள் கூறுவது போல, பா.ச.க தன்னுடன் வெறெந்தக் கட்சியும் போட்டியிடக்கூடாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

தனது போட்டியாளர்களை எதிரானவர்களாகக் காட்டாமல் எதிரிகள் என்று காட்டுகிறது. திரு.மோடி இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொறுப்பற்று, காசுமீரத்தைக் காட்டித் தனது அண்டை நாடான பாக்கிச்தானுடனான பதற்றத்தை அதிகரிக்க விழைந்தார். அவர் இரண்டு நாடுகளையும் போரின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றார். எதிர்க்கட்சிகள் இசுலாமிய அடிப்படை வாதிகளுடன் கூட்டு வைத்திருப்பதாக  பொறுப்பற்று குற்றம் சாட்டினார். அதனால் வந்த மோதலை தனக்காகப் பயன்படுத்திக் கொண்டார். காங்கிரசுக் கட்சியும் அதனை வழிநடத்தும் நேரு-காந்தி குடும்பமும் திரு.மோடியை  வீழ்த்துவது எப்படி என்பதைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்யவேண்டும்.

திரு.மோடி அரசியல் நன்கொடைகளை வெளிப்படுத்தத் தேவையில்லை என்பதைச் சட்டப்பூர்வமானதாக ஆக்கியபிறகு, பெயர் தெரிவிக் கப்படாத பெரும் முதலாளிகளிடமிருந்து பா.ச.காவிற்கு 1030 கோடி ரூபாய் (1200 இலட்சம் பவுண்டு) நன்கொடையாகத் தரப்பட்டுள்ளது. இக்கட்சி இந்தியாவினைக் கோரமாக்கும் அதிகரிக்கும் உயர்வுதாழ்வுகளைக் குறைப்பதாக உதட்டளவில் சொல்கிறது. ஆனால் வாக்காளர்களை, சாதி மத மோதல்களின் அடிப்படையில்  அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகளாகப் பிரிப்பது வளர்ந்துள்ளது. இது வணிகம் ஆதரவான, இசுலா மியர்கள் எதிர்ப்பான தேசியவாதத்தைக் கொண்டுள்ள பா.ச.கவுக்கு ஏற்றதாக உள்ளது.  சமத்துவதளத்தில் தனித்தன்மைமிக்க பரப்புரையை நடத்தும் வலிமை எதிர்கட்சிகளுக்கு வேண்டும்.

உண்மையைச் சொன்னால் காங்கிரசு முயற்சித்தது. ஆனால் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் செயல்படவில்லை. ஏற்றத்தாழ்வுகளைக் கணக்கில் கொள்ளா ஒரே மாதிரியான தன்மையிலான முயற்சி அது. அடையாளத்தினைக் குறிக்கும் கூறுகளின் மீதான சண்டைகள் என்பதுக்கு மாற்றானதாக எல்லா இந்தியர்களுக்கும் எப்படி நன்மை செய்வது என்கிற அரசியல் போட்டி அமைய வேண்டும். இதற்கு இப்போது உள்ளதைக் காட்டிலும் மிக நுண்ணறிவு மிக்க நாட்டின் எழை மக்களிடம் மேலும் தொடர்புடைய ஒரு எதிர்க்கட்சி இந்தியாவிற்குத் தேவைப்படும்.

Pin It