கண்ணே பாப்பா கண்ணே பாப்பா
 கருத்தாய்ப் படித்திடு
அண்ணன் போல தம்பி போல
 அறிவில் சிறந்திடு

பெண்ணும் ஆணும் எதிலும் இணையாம்
 எண்ணம் வளர்த்திடு
பண்ணும் செயல்கள் யாவிலும்உன்
 திறமை பதித்திடு

மண்ணில் பெண்கள் ஆணை விடவும்
 மட்டம் என்பது
திண்ணைப் பேச்சு மூடர் சேர்ந்து
 செப்பும் பொய்யது

அன்னை தந்தை காட்டும் அன்பின்
 அளவு மாறுமோ?
பெண்ணை இழிவு செய்யும் நாட்டின்
 பீடை போகுமோ?

Pin It