அள்ள அள்ளப் பெருகும்

அறிவுக் கடல்களாம்!

விந்தை வள்ளுவரும்

தந்தை பெரியாரும்!

இவ்விரு ஞானிகளும்

தமிழினத்திற்கே கிடைத்த

தனி நன் மதிப்பு!

எவராலும் எட்டாப்புகழை

இவர்களே எட்டினார்கள்!

எவரோ சிலர் கெடுமதியால்

இவர்களின் உருவச் சிலையை

இடிப்பதனால் ஏற்படாது

இனி அவமதிப்பு!

இருந்தாலும் இவ்இழி செயலில்

திருந்தாமல் ஈடுபடுவோரை

திரும்பவும் செய்யாத படி

தெருவில் நிற்க வைத்து

செருப்படி கொடுத்து கிடைக்கச்

செய்வோம் மதிப்பிழப்பு!

Pin It