நமது பள்ளிப் பிள்ளைகளுக்கு பிரஞ்சுப் புரட்சி பற்றிக் கற்றுக் கொடுத்திருப்பார்கள்.

1789-ஆம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சி ஏற்பட்டது.  அதன் பின்னர் நெப்போலியன் அதிகாரத்திற்கு வந்தார்.  நெப்போலியன் பிரஞ்சுப் புரட்சியின் குழந்தை.  பிரஞ்சுப் புரட்சிக்கு கருத்தியல் வடிவம் கொடுத்தவர் வால்டேர், ரூஸோ போன்றவர்கள்.  இத்துடன் பிரஞ்சுப் புரட்சி பற்றிய பாடம் முடிந்துவிடும்.  வரலாற்று ஆசிரியரும் தூங்கி விடுவார்.  மாணவர்களும் அவ்வாறே, இதுதான்.   ஆனால் பிரஞ்சுப் புரட்சி என்பது இவர்கள் நினைப்பது போல ஒரு வருட காலத்திற்குள் நடந்து முடிந்த ஒன்று அல்ல; அது ஒரு நூற்றாண்டிற்கு வியாபித்திருந்தது.

1789-ஆம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சி ஏற்பட்ட பொழுது பிரான்சின் நிலை படுமோசமாக இருந்தது.  பிரான்ஸ் தேசத்தில் சமுதாயம் மூன்று எஸ்டேட்களாகப் பிரிந்திருந்தது.  இது நமது சாதீய அமைப்பு போன்றது.  முதல் எஸ்டேட் என்பதில் அரசர்களும் பிரபுக்களும் இருந்தனர்.  இரண் டாவது எஸ்டேட் என்பதில் வங்கி உரிமை யாளர்கள், அறிவாளிகள், பூர்ஷ்வாக்கள் என் பவர்கள் இருந்தனர்.

மூன்றாவது எஸ்டேட்டில் உழைப்பாளிகள் (பாட்டளி வர்க்கத்தினர், விவசாய உழைப்பாளிகள்) இருந்தனர்.  முதல் எஸ்டேட்டில் உள்ளவர்கள் வரி கொடுக்க வேண்டாம்.  இரண் டாவது எஸ்டேட்டில் உள்ளவர்கள் வரி கொடுக்க வேண்டும். 

மூன்றாவது எஸ்டேட்டில் உள்ள வர்கள் அதிக வரி கொடுக்கவேண்டும்.  உழைப் பாளிகள் கசக்கிப் பிழியப்பட்டனர்.  இந்தச் சமுதாய நிலையானது தொழிற்புரட்சியால் மாறத் தொடங்கியது.  புதிய அமைப்பினர், (பூர்ஷ்வாக்கள்) முன்னுக்கு வந்தனர்.  இவர்கள் தலைமை தாங்கி நடத்திய புரட்சிதான் பிரஞ்சுப் புரட்சி.  இது நெப்போலியனின் எழுச்சிக்கு வித்திட்டது.

1815-ஆம் ஆண்டு நெப்போலியன் மறைந்த பின்னர் பிரான்சில் மன்னராட்சி வந்தது.  ஆனால் இது நீடிக்கவில்லை.  இதன்பின்னர் 1840, 1848ஆம் ஆண்டுகளில் பல பூர்ஷ்வாப் புரட்சிகள் இடம் பெற்றன.  இவையாவும் வர்க்க சக்திகளின் உள்போராட்டம் காரணமாக தோல்வியைத் தழுவின.  ஆனால் பிரஞ்சுப் புரட்சியானது, பழைய நிலஉடைமை முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.  நிலஉடைமைச் சலுகைகள் ஒழிக்கப்பட்டன.  எஸ்டேட் முறை என்பது சிதைந்தது.  ஆனால் மக்களது துன்பம் குறையவில்லை.  இந்தச் சூழ் நிலையில் தான் பாரீஸ் கம்யூன் எழுச்சி உரு வாயிற்று.

கம்யூன் என்பது ஒரு பிரஞ்சுச் சொல்.  பிரான்ஸ் தேசத்தில் அக்காலத்தில் இருந்த மக்கள் தொகை மிகுந்த பகுதிகள் கம்யூன் என்று அழைக்கப் பட்டன.  பாரீஸ் நகரம் ஒரு கம்யூன்.  இது இருபத் தெட்டுப் பிரிவுகளாக இருந்தது.  இந்த நகரத்தில் இருந்த உழைக்கும் மக்கள், சிறு பூர்ஷ்வாக்கள், அறிவாளிகள் ஆகியோர் இணைந்து நடத்திய புரட்சிதான் பாரீஸ் கம்யூன் புரட்சி.  இதில் அதிகாரம் உழைக்கும் மக்கள் கைக்குச் சென்றது.

1871-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் நாள் முதல் பாட்டாளிவர்க்கப் புரட்சி இடம் பெற்றது.  இதற்குரிய உடனடிக் காரணங்கள் பல.  அக் காலத்தில் பிரான்சிற்கும் பிரஷ்யாவிற்கும் போர் நடந்தது.  அதில் பிரான்ஸ் தோல்வியடைந்தது.  பாரீஸில் ஏற்பட்ட கலவரம், பாரீஸ் முற்றுகை ஆகியவற்றால் மக்கள் பட்டினியால் வாடினர்.  வேலையற்றவர்கள் ஏராளமாக இருந்தனர்.  குட்டி பூர்ஷ்வாக்கள் ஏழைகளாயினர்.  மேல்தட்டு வர்க்கத் தினர் மீது மக்களுக்குத் தாங்கொனாக் கோபம் இருந்தது.  அக்காலத்தில் இடம் பெற்ற தேசிய அசம்பிளி என்பது பிற்போக்காளர்கள் கரங்களில் இருந்தது.  இவை உழைக்கும் மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கின.  இதன் விளைவாகத் தோன்றியது தான் பாரீஸ் கம்யூன் எழுச்சி.

french govt 600

1871-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தியர்ஸ் என்ற முடியாட்சி ஆதரவாளன், உழைப்பாளிகளைத் தாக்க முயற்சித்தான்.  அதனை எதிர்த்துப் பல இடங்களில் இருந்து உழைப்பாளிகள் ஒன்று திரண்டனர்.  எதிர்த்துப் போராடினர்.  தியர்ஸ் தப்பித்துச் சென்றான்.  மாலை நேரத்திற்குள்ளாக பழைய அரசாங்கம் தகர்ந்தது.  உழைப்பாளர்கள் தலைமையில் புதிய அரசு உருவாயிற்று.  இது உலகின் முதல் பாட்டாளிவர்க்கப் புரட்சியாகும்.

இக்காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட தேசியப் பாதுகாவலர் (National Guard )களின் மத்திய கமிட்டியானது இரு முக்கியமான ஆணை களை வெளியிட்டது.  மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்; குடியரசைக் காப்பாற்ற வேண்டும் என்பன அந்த ஆணைகள்.

1871 மார்ச் மாதம் 26-ஆம் தேதி, பாரீஸ் கம்யூனிற்குத் தேர்தல் நடந்தது.  எல்லோருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.  பூர்ஷ்வாக்கள் வசம் இருந்த கவுன்சிலர்கள் கம்யூனில் பங்கெடுக்க வில்லை.  மீதி உள்ளவர்கள் தொழிலாளிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் ஆவர்.  இதில் தலைமை தாங்கியது தொழிலாளிகள் ஆவர்.  இது பாரீஸ் கம்யூன் அரசு எனப்பட்டது.  இந்தப் பாரீஸ் கம்யூனில் புருதோனிய வாதிகள், கம்யூனிஸ்ட்கள் என்று பல பிரிவினர் இருந்தனர்.

இந்தக் கம்யூன் 72 நாட்கள் இருந்தது.  இதன் சாதனைகள் என்ன? முதலில் இதன் அமைப் பினைக் காண்போம்.  பாரீஸ் கம்யூனில் இராணுவ கமிஷன், பொதுப் பாதுகாப்புக் கமிஷன், வெளி யுறவுக் கமிஷன், நீதிக்கமிஷன் செயல் மேற்பார்வை கமிஷன், தொழிலாளர் நலக் கமிஷன், உணவுக் கமிஷன், கல்விக் கமிஷன், பொது சேவைக் கமிஷன் என்ற இலாக்காக்கள் இருந்தன.

இந்தக் கம்யூன், அதற்கு முந்தி இருந்த பூர்ஷ்வா அரசினைக் கலைத்தது.  நிலையான படை, போலீஸ் ஆகியன அகற்றப்பட்டன.  பழைய படைக்குப் பதிலாக தேசியப் பாதுகாப்புப்படை இடம் பெற்றது.  பொது பாதுகாப்பினை ஆயுதம் தாங்கிய தொழிலாளிகள் வசம் கம்யூன் ஒப்படைத்தது.  அதிகாரிகள் ஊதியமும், தொழிலாளர்களது ஊதியமும் ஒரே அளவினதாக மாற்றப்பட்டது.

பொருளாதாரத் துறையில் பல மாறுதல் களை பாரீஸ் கம்யூன் கொண்டு வந்தது.  பல முதலாளிகள், நிறுவனங்களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.  இவற்றைத் தொழிலாளிகள் வசமே கம்யூன் ஒப்படைத்தது.  முதலாளிகள், தொழிலாளிக்கு அபராதம் விதிப்பதை கம்யூன் தடை செய்தது.  அடகுக் கடையில் இருந்த அடகுப் பொருள்கள் ஏழைகளுக்குக் கொடுக்கப் பட்டன. 

வீட்டு வாடகை ரத்து செய்யப்பட்டது.  மிக மோசமான வீடுகளில் இருந்த தொழிலாளிகள், பாரீஸை விட்டு ஓடிய பணக்காரர்கள் வீட்டிற்குக் குடியேற்றப்பட்டனர். இவை எல்லாவற்றிக்கும் மேலாக, மடாலயமானது அரசிடமிருந்து பிரிக்கப் பட்டது.  பிறப்பு, இறப்பு பதிவு, திருமணப் பதிவு ஆகியவற்றை அரசே மேற்கொண்டது.  பள்ளி களில் மத போதனை தடை செய்யப்பட்டது.  மடாலயங்களும், தேவாலயங்களும், பொது மக்களது கிளப்களாக மாற்றப்பட்டன.  இலவச கட்டாயக்கல்வி அளிக்கப்பட்டது.

விவசாயிகளுடன் கம்யூன் தொடர்புகொள்ள முயற்சித்தது.  ஆனால் அதனால் வெற்றி பெற முடியவில்லை.  ஏனென்றால் மதகுருமார்கள் கம்யூனை எதிர்த்து வலுவான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  ஆனால் இந்த கம்யூனை எதிர்த்து நாலாபுறத்திலும் எதிர்ப்புரட்சியாளர்கள் செயல் பட்டுக் கொண்டிருந்தனர்.

பாரீஸ் கம்யூன் சில சிறந்த தலைவர்களை உருவாக்கியது.  அவர்களில் ஒருவர் லூயிவர்லின் என்பவர்.  இவர் ஒரு விவசாயியின் மகன்.  பாரீஸ் கம்யூன் ராணுவக் கமிஷன் பொறுப்பு இவரிடம் இருந்தது. 

கம்யூன் தோல்வியடைந்த பொழுது இவரை எதிர்ப்புரட்சியாளர்கள் தெருத்தெருவாக இழுத்துச் சென்றனர்.  இவரைச் சுட்டுக் கொன்றனர்.  மற்றொருவர் லியோ பிராங்கெல் என்பவர்.  இவர் ஹங்கேரியத் தொழிலாளர் இயக்கத்தில் பணி யாற்றியவர். 

மற்றொருவர் ஐரோஸ் லாடம் பிரௌவ்ஸ்கி.  இவர் போலந்து நாட்டினர்.  இவர் புரட்சிப்படைகளுக்கு ஆலோசகராக இருந்தவர் லூயிமிச்சல் என்ற பெண் போராளி பெண்கள் படைப்பிரிவினை நிர்வகித்தார்.  இவரோடு பணி யாற்றிய அன்னா புஸ்டோவாய்டோவா என்பவர் “சோஷலிசக் குடியரசும், பாரீஸ் கம்யூனும் வாழ்க” என்று கூறி செங்கொடி ஏந்திப் போர்க்களம் சென்று உயிர்விட்டார்.

கம்யூன் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் இயங்கியது.  இதன் வர்க்க எதிரிகள் சும்மா இருக்க வில்லை.  பாரீசில் கம்யூன் ஆட்சி நடந்து கொண் டிருந்த அதே வேளையில் வெர் செய்ல்ஸ் என்ற இடத்தில் முடியாட்சியின் ஆதரவாளர்கள், பூர்ஷ் வாக்கள், சிறு முதலாளிகள், விவசாயிகள் ஆகி யோர் பழைய அரசினை அமைத்தனர்.  இவர்கள் கம்யூனுக்கு எதிராகச் செயல்பட்டனர்.  இத்துடன் மட்டுமல்லாமல் அக்காலத்தில் ஜெர்மனியில் வலுவாக இருந்த பிஸ்மார்க் எதிர்ப்புரட்சியாளர் களுக்கு ஆதரவாக இருந்தார்.

பாரீஸ் கம்யூன் தலைவர்கள் செய்த தவறு தியர்ஸ் என்பவரைத் தப்பிக்க விட்டது.  இவர் வெர் செய்ல்ஸ் சென்றதும், வெர்செய்ல்ஸ் அரசு பாரீஸ் கம்யூனின் அஜாக்கிரதையை நன்கு பயன்படுத்திக் கொண்டது.  பல இடங்களில் இருந்து போர் வீரர்களை ஒன்று திரட்டியது.  பாரீஸ் நகரத்தினை முற்றுகையிட்டது.  தியர்சின் ஒற்றர்கள் பாரீஸ் நகருக்குள் இருந்து செயல்பட்டனர். 

கம்யூன் அரசு இவர்களைக் கண்காணிக்கவில்லை.  கம்யூனுக்கு எதிராகப் பல பத்திரிகைகள் பிரச்சாரம் செய்தன.  கம்யூன் அரசு இந்தப் பிற்போக்குப் பத்திரிகை களைத் தடை செய்யவில்லை.  இவற்றைவிட முக்கியமானது வங்கிகள்.  அவற்றில் ஏராள

மாகப் பயணம் இருந்தது.  இப்பணத்தினை வெர் செய்ல்ஸிற்குப் பலர் கொண்டு சென்றனர்.  இதனைக் கம்யூன் அரசு தடுக்கவில்லை.  அது மட்டுமல்ல; கம்யூன் தலைவர்களைக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  சில துரோகிகள் கம்யூன் படையின் பலஹீனத்தினை வெளிப் படுத்தினர்.  முடிவு கம்யூனிஸ்டுகள் (கம்யூன் படை யினர்) தெருக்களில் கடுமையாகப் பேராடினர்.  கம்யூன் படையின் கடைசி நாட்கள் “இரத்தக்கறை படிந்த மே வாரம்” என்று அழைக்கப்பட்டது.  கம்யூனிஸ்டுகளின் வலுவான இடங்களில் ஒன்று பியரிலசெய்ஸ் சிமட்ரி என்ற இடம்.  இங்கு 200 கம்யூனிஸ்டுகள் வீரம் செறிந்த போராட்டத்தினை நடத்தினர்.  வெர்செய்ல் படைகள் இந்த இடத்தில் நுழைந்து அனைவரையும் சுட்டுக் கொன்றனர்.  இன்றும்கூட, ஆண்டுதோறும் பாரீஸ் நகர உழைக்கும் மக்கள் “கம்யூனிஸ்டு சுவர்” என்ற அந்த இடத்திற்கு மௌன ஊர்வலம் செல்கின்றனர் (1965).  இறுதியாக 1871-ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் நாள் கடைசிப் போர் முடிவடைந்தது.  எதிர்ப்புரட்சி வெற்றி பெற்றது.  கம்யூன் வீழ்ந்தது.

பாரீஸ் கம்யூன் என்ற இந்த முதல் பாட்டாளி வர்க்க அரசு பற்றி அக்காலத்தில் மார்க்சும் எங்கெல்சும் ஆராய்ந்துள்ளனர்.  மார்க்சின் ‘லூயி போனபார்ட்டின் 18வது புரூமியர்’ ‘பிரான்ஸில் உள் நாட்டுப்போர்’, ‘பிரான்சில் வர்க்கப் போராட்டம்’ என்ற சிறுநூல்களில் இது ஆராயப் பட்டுள்ளது.  எங்கெல்ஸ், அவருடைய ‘பிரான்சில் வர்க்கப் போராட்டம்’ என்ற நூலுக்கான முன்னுரையில் இதனை ஆராய்ந்துள்ளார்.

இது பற்றி லெனின் பின்வருமாறு கூறுகிறார்.  “இது ஐரோப்பா முழுவதிலும், சோஷலிச இயக்கத் தினை ஊக்குவித்தது.  உள்நாட்டுப் போரின் வலுவை இது எடுத்துக்காட்டியது.  சோஷலிசப் புரட்சியின் கடமைகளை சரியாக நிறைவேற்ற ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கத்தினருக்கு கம்யூன் கற்றுக் (Lenin Collected works vol. 13.

P. 471. Foreign Language Publishing House. Moscow. 1962)

பாட்டாளி வர்க்கப்புரட்சியின் வரலாற்று முக்கியத்துவத்தினை கம்யூன் எடுத்துக்காட்டியது.  இதில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது முதன்முதலாக இடம்பெற்றது.  மார்க்ஸ் இதனை விரிவாக்கினார்.  பாட்டாளிகளும், விவசாயிகளும் ஒன்றுபட்டால்தான் புரட்சி சாத்தியம் என்பதை கம்யூன் எடுத்துக்காட்டியது.  பழைய அரசு அமைப்பினைத் தகர்க்க வேண்டியதன் அவசியத்தை பாரீஸ் கம்யூன் எடுத்துக்காட்டியது.

ஆதாரம்

  1. Modern History - Publishing House: ‘Provesheniy F’ - Moscow 1966
  2. The Eighteenth Brumaire of Louis Bonaparte. – Marx
  3. Civil War In France – Marx
  4.  Introduction to Class Struggle in France 1848 - 1850 – Engels
  5. Class Struggle In France - Marx
Pin It