‘தாமிரவருணி: சமூக-பொருளியல் மாற்றங்கள்’ பொறியியலாளர் பழ.கோமதிநாயகம் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரை என்பதே தெரியாத அளவுக்கு மிகக் கச்சிதமாக, ஒரு சாதாரண விவ சாயியும் படித்தறியும் வகையில் நல்ல புத்தகமா யிருப்பதுதான் இந்த நூலுக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றி.

pazha_komathinayagam_450இதன் தமிழாக்க மொழிநடை, இதனை பழ. கோமதிநாயகம் தமிழில் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்குமோ அதேபோன்று இருக்கிறது. இதுவும் இந்தப் புத்தகத்தைப் படிக்கக்கூடியதாக மாற்றியதில் ஒரு முக்கிய காரணி. இவை எல்லாவற்றையும்விட, இந்த நூலின் இன்றைய தேவை, இந்த நூலுக்கு ஒரு தனி மதிப்பை அளித்துவிடுகின்றது.

இது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வரோ அல்லது தமிழரோ படிக்க வேண்டிய நூல் என்கின்ற எல்லைகளைக் கடந்து செல்கிறது. இது தாமிரவருணி என்னும் ஒரு நதியைக் குறித்தது என்றாலும், அந்த நதியை மட்டுமே சார்ந்த விவ காரம் அல்ல; இந்தியாவின் எல்லா நதிகளிலும் இதுதான் நடந்தது, நடந்துகொண்டிருக்கிறது. மேலதிகமாகப் பயனடைபவருக்கும், பயன்பெற முடியாமல் தவிப்பவருக்குமான போராட்டங்களின் சமன்பாடு (பார்முலா) ஒன்றுதான்.

தாமிரவருணியைப் பொருத்தவரை தொடக்க காலத்தில் பிராமணர்- வேளாளர் ஆதிக்கத்தில் இருந்த நதி நீர், பின்னர் மறவர்-நாடார் ஆதிக்கத்துக்கு மாறியதைப் போல, இப்போது தொழிற்சாலைகள்- அரசியல்வாதிகள் ஆதிக்கத்துக்கு மாறிவருகிறது. நீர் மேலாண்மையைத் தனியாரிடம் விடும் புதிய நீர்க்கொள்கையை (வரைவு) மத்திய அரசு கருத்தறிச் சுற்றுக்கு அனுப்பியுள்ள நிலையில் திரு.கோமதி நாயகம் நம்மிடையே இருந்திருந்தால், புதிய பார் முலா, அரசு-பண்பாட்டு நிறுவனங்கள் ஆதிக்கத்துக்கு மாறுவதையும் எழுதியிருப்பார்.

பொருளாதாரத்தில் முன்னேறிய பிராமணர், நாடார் இருவரும் தங்கள் காலகட்டத்தில் அரசியல் வாதியை, அரசாங்கத்தை எவ்வாறு தங்கள் வச மாக்கிக்கொண்டார்களோ அதே வேலையை இப் போது பன்னாட்டு நிறுவனங்கள் செய்யத் தொடங்கி விட்டன. அதே பார்முலா. ஆனால், இத்தனை நூற்றாண்டுகளில் அழியாத விவசாயம், இப்போது அழிவை நோக்கிச் செல்கின்றது.

நதிநீரில் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்-வேளாளர், மறவர்-நாடார் வேளாண்மையை வைத்துப் பணம் சம்பாதித்தார்கள். ஆதிக்கம் செலுத்தினாலும்கூட, ஏற்றத்தாழ்வுகள், மனக் காழ்ப்புகள் இருந்தாலும்கூட, நதிநீரைக்கொண்டு மேலும் மேலும் விவசாயத்தைத்தான் செய்தார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் அப்படியில்லை. அவர்கள் நதிநீரை விற்பனைக்கான குடிநீர், தொழிற்சாலைக் கான நீர், விவசாயத்துக்கான நீர் என்று பிரித்து விலை பேசுகிறார்கள். அவர்கள் விவசாயம் செய்யப் போவதில்லை. அவர்கள் வெறும் தண்ணீர் வியா பாரிகள்.

தொழிற்சாலைகளின் தேவைகளுக்கும் வேளாண்மைத் தேவைகளுக்கும் இடையிலான மோதல் தாமிரவருணியில் மட்டுமல்ல, எல்லா நதிகளிலும் தொடங்கிவிட்டது. இந்த நூலைப் படிக்கும் எவருக்கும் இந்தக் காட்சி மனதில் தோன் றாமல் இருக்காது.

நதிநீர்ப்பகிர்வு முறைமைகளில் சமத்துவக் கூறுகளாக கில்பர்ட் லெவின், இ.வால்டர் கோவர்ட் ஜூனியர் குறிப்பிடும் எட்டு கூறுகளில், முதல் ஏழு கூறு களும் பயிரிடப் பரப்பு, ஆதிக்கவாதிகளின் முன் னுரிமை, சாகுபடிப் பயிரின் பொருளாதாரம் (பணப்பயிர்) சார்ந்தவை. கடைசி எட்டாவது கூறு, - குடும்பத்தின் அளவைப் பொருத்துத் தண்ணீர் பகிர்வு என்பது-விவசாயத்தைவிட, குடிநீருக்கே பொருத்தமானது. ஸவெளிநாடுகளில் குடிநீர்ப் பயன் பாட்டைப் பொருத்தே பயன்படுத்தப்படும் அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.]

இந்த நீர்ப்பங்கீட்டுச் சமத்துவக் கூறுகளில் எந்த வகையிலும் தொடர்பு இல்லாத தொழிற்கூடங்கள்/ பன்னாட்டு நிறுவனங்கள் உட்புகுந்து நதிநீரைப் பகிர்ந்துகொள்ள முயலும்போதுதான் தட்டுப் பாடு அதிகரிக்கிறது. இந்தத் தட்டுப்பாட்டினால் தொழிற்சாலைகள் மோதிக்கொண்டதாக வரலாறு இல்லை. ஆனால், விவசாயிகள் மேலும் கடுமை யாக மோதிக்கொள்கிறார்கள்.

நதிநீர்ப் பங்கீட்டில் விதியை அழிப்பவர்கள் அதிகாரிகள் என்பதை நூலாசிரியர் அழகாக விளக்கியிருக்கிறார். ஆய்வுக்கட்டுரையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருக்கிறார்கள் என்பதே பெரிய விஷயம். ஏனெனில் இதை யாராலும் மறுக்க முடியாது. இந்நிலைமைக்குக் காரணம் அரசியல்வாதிகள். நதிநீர்ப் பங்கீடு முழுக்கமுழுக்க விவசாயிகள் வசமே இருந்தால் பிரச்சினைகள் வராது. இருவப்பபுரத்தில் உள்ள பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்க வரலாற்றில் இதுவரையிலும் ஒருவர்கூட நீதிமன்றத்துக்குச் சென்றதில்லை (பக்கம் 125) என்கின்ற பதிவு, ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும்கூட நதிநீர்ப் பகிர்வை விவசாயியிடம் விடுவதுதான் சரியானதாக இருக்கும் என்ற கருத்துக்கே நம்மை உந்துகிறது.

இந்திய அரசின் 1994 நதிநீர்க்கொள்கை என்பது விவசாயம், குடிநீர், தொழிற்சாலை ஆகிய மூன்றுக்கும் சமஉரிமை அளிப்பதாக உள்ளதைக் காண்கிறோம். இதில் தொழிற்சாலைக்குத் தண்ணீர் வழங்குவதைத் தீர்மானிக்கும் சக்தியாக அரசு இருப்பதால், தொழிற் சாலைக்கான தண்ணீர் அளவு அதிகரித்துக்கொண்டே போவதை, தாமிரவருணி தொழிற்சாலைகளுக்கு வழங்கும் நீர் அளவுப் பட்டியலைப் பார்த்தாலே புரியும். நூலாசிரியர் குறிப்பிடும் இந்தப் பட்டியல் குறிக்கும் அளவைவிடப் பன்மடங்கு தற்போது தொழிற்சாலைகளின் நீர்த்தேவை தாமிரவருணியில் அதிகரித்துள்ளது.

குடிநீர் அளவும்கூட, நகர்ப்பெருக்கத்தால் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வாக்கு வங்கிக் காக எல்லா நகரங்களுக்கும் கூட்டுக்குடிநீர்த் திட்டம் அறிவிக்கிறார்கள்.

குடிநீர்த் தேவைக்கான நீரின் அளவு, தொழிற் சாலைத் தேவைக்கான நீரின் அளவு குறித்த பட்டியல்கள் நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் வாழைச் சாகுபடி, நெல்சாகுபடி தொடர்பான பரப்பளவுப் பட்டியல்கள் மட்டுமே நூலில் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்காக ஆண்டுதோறும் பயன்பட்ட தோ ராயமான நீரின் அளவு குறித்த பட்டியல் இல்லையா, அல்லது விடுபட்டுள்ளதா என்று தெரியவில்லை.

நதியில் ஆண்டுதோறும் பாயும் சராசரி நீர் அளவு, வேளாண்மைக்கான நீர் அளவு கழிந்தது போக மீதமுள்ள நீர் அளவை மட்டுமே மற்றவர் களுக்குப் பகிர்ந்தளிக்கும் அதிகாரம் விவசாயி களுக்கே விடப்பட்ட வேண்டும். இல்லாவிட்டால் நதிகள் பன்னாட்டு நிறுவனங்களால் கூறுபோடப் படும் என்கின்ற உணர்வைத் தருகிறது இந்நூல்.

இந்த நூல் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு, மக்களிடம் வந்து சேர்ந்திருப்பது இன்றைய தேவை. வேளாண்மையில் சாதிய ஆதிக்கம் தொடர்பாக அறிய விரும்பும் சமூகவியல் களப் பணியாளர்கள், வேளாண் களப்பணியாளர்கள், சாதாரண வாசகர்கள், அரசின் கொள்கை முடிவு களில் முக்கிய பங்காற்றக்கூடிய அரசியல்வாதிகள் என நான்கு தரப்பினரும் கட்டாயமாகப் படிக்க வேண்டிய புத்தகம்.

நூலாசிரியர் உரைப்படி, தாமிரவருணி தொடர்பான இந்த ஆய்வு கி.பி.2000த்துடன் நின்று விடுகிறது. அதன் பிறகு தாமிரவருணியில் நடந்து கொண்டிருப்பது என்ன? எத்தனை தொழிற்கூடங்கள் அதிகரித்தன, எத்தனை குடிநீர்த் திட்டங்கள் உருவாக்கப்பட்டன, விவசாயத்தில் ஏற்பட்ட சாகுபடி மாற்றங்கள் என்னென்ன என்பது பற்றிய சிறிய பின்னிணைப்பு சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் இதற்கு நிறைய தரவுகள் கட்டாயமாகத் தேவை. மிகப்பெரும் உழைப்பும், அதிகாரிகளின் ஆதரவும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இத்தகைய தொடர் ஆய்வை-ஏன் யாராகிலும் மற்றொரு முனைவர் பட்ட ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளக்கூடாது?

இந்த நூலைப் படிக்க வாய்க்கும் யாருக்கா கிலும் இத்தகைய ஆர்வம் ஏற்படும் என்று நம்பு கிறேன். ஆன்மாவில் உறங்கும் அப்படியொரு ஆன்ம வேட்கையை இந்தப் புத்தகம் கிளப்பி விட்டு, அந்த நபரைத் தாமிரவருணியோரம் அலையச் செய்யும். கோமதிநாயகத்தின் ஆன்மா அத்தகை யோரை வழிநடத்திச் செல்லும்.

***

தாமிரவருணி

சமூக - பொருளியல் மாற்றங்கள்

ஆசிரியர் : முனைவர் பழ.கோமதிநாயகம்

தமிழில் : எம்.பாண்டியராஜன்

வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்

விலை : ரூ.90.00

Pin It